Thursday, November 07, 2013

மனம் கனிந்தருள் வேல் முருகா!


வெற்றி வடிவேலனே! சக்தி உமை பாலனே!
வீரம் விளைத்த குகனே!
உற்றதொரு பகை வெல்ல தோளிலும் நெஞ்சிலும்
ஓங்கிடும் வலிமை அருள்வாய்! அருள்வாய்!

மனம் கனிந்தருள் வேல் முருகா! புள்ளி
மயிலேறும் மால் மருகா! முருகா!
(மனம்)

குறத்தி மணாளா! குணசீலா! ஞான
குருபரனே! செந்தில் வடிவேலா!
செந்தமிழ்த் தேவா! சந்ததம் நீ காவாய்!

வேதனே - ஞான போதனே - சுவாமி நாதனே - எமது வேதனை தீர
(மனம்)

தோகை வள்ளி தனை - நாடி வேங்கை மர - மாகி நின்றாயடா!
வேலெடுத்து விளை - யாடி மாமலையைத் - தூளடித்த முருகா
சூரபத்மன் இரு - கூறு பட்டொழிய - போர் முடித்த குமரா!

படம்: வீரபாண்டிய கட்டபொம்மன்
இசை: ஜி. ராமனாதன் (எ) ஜிரா
குரல்: எஸ். வரலட்சுமி
வரி: கவிஞர். கு.மா.பாலசுப்பிரமணியம்

7 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) November 07, 2013 12:49 PM  

நெஞ்சுக்கு மிக அமைதியான பாடல்!

இத்தனைக் காலம் முருகனருளில் வராமல் போனது வியப்பு தான்;
நன்றி குமரன் அண்ணா

வீரபாண்டியக் கட்டபொம்மன் படத்தில், எஸ்.வரலட்சுமி அம்மா பாடுவது
(வெள்ளிமலை மன்னவா புகழ்)

கவிஞர் கு.மா.பா வரிகள் - பதிவில் தகவல்களைச் சேர்த்துள்ளேன்
மிக்க நன்றி, இந்தக் கட்டபொம்மன் பாட்டுக்கு!

பார்வதி இராமச்சந்திரன். November 08, 2013 12:49 AM  

அற்புதமான பாடல்.. குறிஞ்சி நிலக் கடவுளான குமரனுக்கு, குறிஞ்சி ராகத்திலேயே இசையமைக்கபட்ட பாடல்..அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி!!

குமரன் (Kumaran) November 08, 2013 10:22 AM  

நன்றி இரவி & பார்வதி இராமச்சந்திரன்.

அ.பாண்டியன் November 08, 2013 10:48 AM  

ரம்யமான பாடலையும், குறிஞ்சி நிலக் கடவுளையும் அழகாக பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

Unknown October 15, 2021 10:54 PM  

தொடக்க விருத்தத்தை பாடியவர் யாரோ?

Anonymous September 29, 2022 7:26 PM  

நல்ல பாடல் . சிறு வயதில் பாடிய பாடல் . 60 ஆண்டுகளுக்குப் பின் இதைப் பாட எனக்கு பாடல் வரிகள் தந்தமைக்கு தங்களுக்கு நன்றி . இப்போதும் இந்த பாடலை நினைவு வைத்து இருப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.

sunciti October 08, 2022 9:00 AM  

60 வருங்களாக நினைவில் நின்ற பாடல். நேற்று படத்தையும் பார்த்தேன். மனம் உருகி போனேன்.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP