Saturday, July 02, 2011

ஆயில்யன் திருமணம் - அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்!

ஆயில்யன் அண்ணாச்சியின் திருமணம் இன்று! (Jul-03-2011)!
முருகனருளில், இன்று ஆயில்யன் சிறப்புப் பாடல்!!


திருவாரூர் கமலாலயம் குளக்கரையில், மணப்பந்தலின் கீழ்,
கவின்மிகு இல்லறத்தில் மகிழத் துவங்கும்
அனு-ஆயில்யன்
தம்பதிகளை

வாழ்த்துவோம், மக்கா! வாங்க, வாங்க!
முருகனருளால் நீடு பீடு வாழ்க! நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!

ஆயில்யன் முருக பக்தர்! முருகனருள் வலைப்பூவின் நெடுநாள் வாசகர்!
அவர் திருமணத்துக்கு நானும்-என்னவன் முருகனும் மகிழ்வுடன் வந்து வாழ்த்துகிறோம்! :)பஞ்சவர்ணக் கிளி என்னும் படத்தில், ஒரு திருமண வரவேற்பு (ரிசப்ஷன்);
அதில் ஒரு நடனக் காட்சி. மிருதங்கத்துக்கு என்றே ஒரு கட்டம் வரும் பாருங்க; நிஜமாலுமே சூப்பர்!
பாட்டை விட ஒவ்வொரு பத்தியின் முடிவிலும், சுசீலாம்மா ஆஆஆ என்று இழுப்பாங்க பாருங்க, அது இன்னமும் சூப்பர்!

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
- இது தான் அந்த நடனம் + பாடல்!
சுசீலாம்மாவின் தேன் குழையும் குரலில், பாட்டைக் கேட்க...பார்க்க...


சத்தியம், சிவம், சுந்தரம்! ஆஆஆ....
சரவணன் திருப்புகழ் மந்திரம்! ஆஆஆ....

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்.
அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன் - அவன்
அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)


பனி பெய்யும் மாலையிலே, பழமுதிர் சோலையிலே,
கனி கொய்யும் வேளையிலே, கன்னி மனம் கொய்து விட்டான்!
பன்னிரெண்டு கண்ணழகைப் பார்த்திருந்த பெண்ணழகை,
வள்ளல் தான் ஆளவந்தான், பெண்மையை வாழ வைத்தான்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)


மலை மேல் இருப்பவனோ, மயில் மேல் வருபவனோ!
மெய்யுருக பாடி வந்தால் தன்னைத் தான் தருபவனோ!
அலை மேல் துரும்பானேன், அனல் மேல் மெழுகானேன்,
அய்யன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)


படம்: பஞ்சவர்ணக்கிளி
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள்: வாலி
குரல்: பி.சுசீலா


அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன் !
"உனக்கே என்னை விதி"யென்ற இம்மாற்றம், நாங்கடவா வண்ணமே நல்கு!

அச்சோ! 10:00 மணி ஃபிளைட் பிடிக்கணும் பிரேசிலுக்கு!
ஆல்ரெடி லேட்டு! ஓடு......
இந்தக் கல்யாணப் பதிவின் பின்னூட்டங்களைக் குமரன் அண்ணா கொஞ்சம் பாத்துக்கோங்க! :) Bfn!

7 comments:

கானா பிரபா July 02, 2011 9:06 PM  

முருகா

முத்துக்குமரன் என்று பெயர் தாங்கிய உன் பக்தன் ஆயில்யனுக்கு ஆயுசு பூராவும் நீ அவனுக்கு "அனு" தினமும் அருள் புரிய வேண்டுகிறேன்

பிரேசில் பறக்கும் கே.ஆர்.எஸ் அடிகளுக்கு நன்றியோ நன்றி

சிவ.சி.மா. ஜானகிராமன் July 02, 2011 9:16 PM  

இல்லற வாழ்வை ஏற்கும்
ஆயில்யன் அவர்கள்

16 பேறுகளும் பெற்று
பெருவாழ்வு வாழ
திருமுருகன் திருவருளால்
வாழ்த்துகிறோம்...

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர்
குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

http://sivaayasivaa.blogspot.com

திகழ் July 02, 2011 10:00 PM  

வாழ்த்துகள்

adithyasaravana July 02, 2011 11:14 PM  

vaazhththukkal... aayilyan- anu-thirumana bandham ...cha.. pora avasarathila.. onnum ezhutha varamaattenguthu.. naalla irukkanum.. innaikku..college irukku..9 manikku finger print vekkanum..

கிரி July 04, 2011 7:28 AM  

வாழ்த்துக்கள் ஆயில்யன் :-)

குமரன் (Kumaran) July 06, 2011 8:50 AM  

வாழ்த்துக்கள் ஆயில்யன்.

Kannabiran, Ravi Shankar (KRS) July 10, 2011 6:56 PM  

@காபி
Back from Brazil :)
Me not adigaL! Only adi podigaL :)

@ஜானகி ராமன்
தேவார வாழ்த்துக்கு மிக்க நன்றி!

@திகழ், @கிரி, @சரவணன் அண்ணா, @குமரன் - வாழ்த்துக்களுக்கு நன்றி:)

ஆயில்யன் ஆடி மாச அவசரத்தில் இருக்காரு என்பது தான் லேட்டஸ்ட் தகவல் :))

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP