Sunday, June 12, 2011

முருகன் பிறந்தநாள்! - கற்பனை என்றாலும்,கற்சிலை என்றாலும்..

இன்று என் ஆசைத்திரு முருகனுக்குப் பிறந்தநாள்! (Jun 13-2011 வைகாசி விசாகம்)
Happy Birthday da, MMMMMMuruga! :)
இனிய பிறந்தநாளில் இனியது கேட்டு, உனக்கு என்றும் பல்லாண்டு பல்லாண்டு!

ஒவ்வொரு ஆண்டும் மூன்று பிறந்தநாட்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்! - முருகன், தோழி கோதை, ..... !
முருகன் 'பிறவான் இறவான்' என்கிற வசனம் உள்ளதால், அவன் 'உதித்த' நாள் என்றும் கொள்ளலாம்! எதுவானாலும் என்னவனுக்கு "Happy" Birthday!:)

வைகாசியில் வரும் விசாக நட்சத்திரத்தில் உதித்ததால், விசாகன் என்ற பெயரும் அவனுக்கு உண்டு!
அருவமும் உருவும் ஆகி, அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பு அதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்து, ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய!!!

அந்த விசாக-விசால மனத்தவனுக்கு, என் மேல் மட்டும்...அப்பப்போ ஊடல் வரும்! போடா-ன்னு எனக்கும் கோவம் வரும்!
அந்த நேரம் பார்த்து, சில பேர் என்னிடம் வந்து கேட்பாய்ங்க! - "முருகன்-ன்னு ஒருத்தரு இருக்காரு-ன்னு நல்லாத் தெரியுமா? இதெல்லாம் கற்பனை தானே?"

ஹா ஹா ஹா!
கற்பனை என்றாலும்...கற்சிலை என்றாலும்...
கந்தனே என் சொந்தனே!
ஊடலும் உனக்கே,
கூடலும் உனக்கே,
ஆவியும் உனக்கே,
நான் மொத்தமாய் உனக்கே!

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ
(கற்பனை என்றாலும்)

அற்புதம் ஆகிய அருட்பெரும் சுடரே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
(கற்பனை என்றாலும்)

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனி மொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண் விழியாலே
(கற்பனை என்றாலும்)

குரல்: TMS
வரிகள்: வாலி


திருச்சி ரயில் நிலையம்! வண்டியில் உட்கார்ந்து கொண்டு இருந்தவர் பிரபல பாடகர் TMS! அவரிடம் இளைஞர் ஒருவர் தயங்கித் தயங்கித் தான் எழுதிய பாட்டைக் காட்டுகிறார்!
பாட்டைப் பார்த்தவுடனேயே TMS-க்கு பிடித்து விட்டது! ஏன்-னா பாட்டிலேயே சந்தமும் இருக்கு! அங்கேயே மெல்லிதாய்ப் பாடிப் பார்க்க....கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்...
இளைஞர், கவிஞர், வாலி.....பலருக்கும் அறிமுகமாகி, பெரும்புகழ் பெற்றார்!

வைகாசி விசாகம், இன்னும் இரண்டு பேரின் பிறந்தநாளும் கூட!
* ஒரு குழந்தை = முத்தமிழ் முருகன்
* இன்னொரு குழந்தை = அத்தமிழில் வேதம் செய்த மாறன் - நம்மாழ்வார்!
இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

முருகா.....
என் மேல ரொம்ப கோவப்படாதே-ன்னா?
நான் நினைப்பதும் நீ நிகழ்வதும்.....நின் செயலாலே! கரெக்ட்டு தான்!
ஆனா இதையும் தெரிஞ்சிக்கோ...
காண்பதெல்லாம் உந்தன் கண் விழியாலே!

நான் உன் கண்களின் வழியாகவே! = கண்களின் வார்த்தைகள் புரியாதோ? காத்திருப்பேன் என்று தெரியாதோ? Happy Birthday Honey! :)

19 comments:

cheena (சீனா) June 12, 2011 9:13 PM  

அன்பின் கேயாரெஸ்

அழகு முருகனுக்கு அன்பான - இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

நம்மாழ்வாருக்கும் சேர்த்துத்தான்

Lalitha Mittal June 12, 2011 10:35 PM  

விசாகனுக்கு 'உதித்த நாள்' வாழ்த்துக்கள்!

நம்மாழ்வாருக்கு 'பிறந்தநாள்' வாழ்த்துக்கள்!

குமரன் (Kumaran) June 12, 2011 10:51 PM  

Happy Birthday Muruga!

-From Malli family.

kannabiran, RAVI SHANKAR (KRS) June 13, 2011 1:47 AM  

@சீனா ஐயா
//அன்பின் கேயாரெஸ்//

அன்பின் முருகா-ன்னு வாழ்த்து சொல்லாம அன்பின் கேயாரெஸ்-ன்னு சொல்றீங்களே?:)

kannabiran, RAVI SHANKAR (KRS) June 13, 2011 1:48 AM  

@லலிதாம்மா
'உதித்த நாள்' வாழ்த்துக்களா? ஹிஹி! இது நல்லாருக்கே!:)

kannabiran, RAVI SHANKAR (KRS) June 13, 2011 1:49 AM  

@குமரன்
மல்லி ஃபேமிலி-ன்னு சொன்னது 'மல்லி' நாடாண்ட மடமயில் தானே? :)

Narasimmarin Naalaayiram June 13, 2011 3:30 AM  

அரோகரா! கோவிந்தா! அரோகரா!

adithyasaravana June 13, 2011 8:44 AM  

முருகக்குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..வாரியார் ஸ்வாமிகள் குழந்தைன்னு தானே சொல்லுவாரு?

kannabiran, RAVI SHANKAR (KRS) June 13, 2011 7:04 PM  

@ராஜேஷ்!
உங்க வம்பு ஓவராப் போச்சு! அரோகரா சரி! கோவிந்தா எதுக்கு?:)
இது என் முருகன் போஸ்ட்! எங்கப்பாரு பேரை எதுக்கு இழுக்கறீங்க?:)

kannabiran, RAVI SHANKAR (KRS) June 13, 2011 7:07 PM  

@சரவணன் அண்ணா
//முருகக்குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..//

:)
மீசை முளைக்காத குழந்தை! :)
ஆனா ஆசை முளைச்ச குழந்தை!:)

//வாரியார் ஸ்வாமிகள் குழந்தைன்னு தானே சொல்லுவாரு?//

ஆமாம்! அவருக்கு இவன் குழந்தை தான்!
டேய் முருகா, வாரியாரைக் கும்பிட்டு, அவர் கையால திருநீறு வாங்கிக்கோ!

கவிநயா June 13, 2011 10:14 PM  

ச்செல்லக் குழந்தைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

நம்மாழ்வாருக்கு பணிவன்பான வணக்கங்கள்.

நான் சின்னப் பிள்ளையா இருக்கப்பவே மனப்பாடம் செய்த பாடல். மிக்க நன்றி கண்ணா.

கடம்பவன குயில் June 14, 2011 2:57 PM  

நான் இப்போதான் முதல்தடவையாக உங்கள் பிளாக் பக்கம் வந்திருக்கிறேன். பதிவு நன்றாய் இருக்கிறது. முருகன்மேல் உங்களக்குள்ள அன்பு கண்டேன். நன்று .

cheena (சீனா) June 15, 2011 7:36 AM  

அன்பின் முருகா - இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

In Love With Krishna June 15, 2011 11:35 AM  

i always loved this song! thanks for posting! btw, murugar pic is really nice :)

kannabiran, RAVI SHANKAR (KRS) June 15, 2011 8:43 PM  

@கவிக்கா
பாட்டு மனப்பாடமா தெரியுமா? அடுத்த முறை பாடிக் காட்டவும்:)

kannabiran, RAVI SHANKAR (KRS) June 15, 2011 8:46 PM  

@கடம்பவனக் குயில்

பேரே நல்லா இருக்கு! கடம்ப வனம், அவன் வனம் அல்லவா! அதில் உள்ள குயில் முருகனருள் வலைப்பூவுக்கு முதலில் வந்தது மகிழ்ச்சியே! அடிக்கடி வாருங்கள்! இது முருகச் சோலை!

//முருகன்மேல் உங்களக்குள்ள அன்பு கண்டேன்//

அப்பன் திருவேங்கடமுடையான் மேல் தான் 'அன்பு'!
முருகன் மேல் 'காதல்'! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) June 15, 2011 8:47 PM  

@சீனா ஐயா
முருகனுக்கு நேரடியா வாழ்த்து சொல்லிட்டீங்க! பலே பலே!:)

kannabiran, RAVI SHANKAR (KRS) June 15, 2011 8:49 PM  

@ilwk
அட, கண்ணனின் குயில் முருகச் சோலைக்கு வந்திருக்குப்பா! வருக வருக! ஜில்-ன்னு என்ன சாப்படறீங்க? :)

அந்த முருக'ன்' படம் ஓவியர் கோபுலு வரைஞ்சது!
நான் வரைஞ்ச முருகன்/கண்ணன்/கோதை படங்களை எல்லாம் பார்த்து இருக்கீங்களா?:)

Anonymous August 10, 2011 5:19 AM  

Very nice blog

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP