Wednesday, September 03, 2008

எனக்கும் இடம் உண்டு



c
எனக்கும் இடம் உண்டு
அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு
அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு

கார்த்திகை விளக்குப் பெண்களுடன்
திருக் காவடி சுமக்கும் தொண்டருடன்
கார்த்திகை விளக்குப் பெண்களுடன்
திருக் காவடி சுமக்கும் தொண்டருடன்
தினம் சூட்டிடும் ஞான மலர்களுடன்
ஒரு புல்லாய் முளைத்து தடுமாறும்
புல்லாய் முளைத்து தடுமாறும்

எனக்கும் இடம் உண்டு

நேற்றைய வாழ்வு அலங்கோலம்
அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்
நேற்றைய வாழ்வு அலங்கோலம்
அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்
வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்
அருள் கந்தன் தருவான் எதிர்காலம்
கந்தன் தருவான் எதிர்காலம்

எனக்கும் இடம் உண்டு

ஆடும் மயிலே என் மேனி - அதில்
அழகிய தோகை என் உள்ளம்
ஆடும் மயிலே என் மேனி - அதில்
அழகிய தோகை என் உள்ளம்
நான் உள்ளம் என்னும் தோகையினால்
கந்தன் உறவு கண்டேன் ஆகையினால்
உறவு கண்டேன் ஆகையினால்

எனக்கும் இடம் உண்டு

5 comments:

Kavinaya September 04, 2008 9:41 AM  

//கார்த்திகை விளக்குப் பெண்களுடன்
திருக் காவடி சுமக்கும் தொண்டருடன்
கார்த்திகை விளக்குப் பெண்களுடன்
திருக் காவடி சுமக்கும் தொண்டருடன்
தினம் சூட்டிடும் ஞான மலர்களுடன்
ஒரு புல்லாய் முளைத்து தடுமாறும்
புல்லாய் முளைத்து தடுமாறும்

எனக்கும் இடம் உண்டு//

நல்ல பாடல். பகிர்ந்தமைக்கு நன்றி சிபி.

குமரன் (Kumaran) September 19, 2008 5:50 AM  

நல்ல பாடல் சிபி. சிறு வயதில் அடிக்கடி விரும்பி கேட்ட பாடல்.

Unknown January 26, 2021 9:49 PM  

பிடித்த வரி அருள் மணக்கும் முருகன் மலரடி இடையில் எனக்கும் இடம் உண்டு

Alagu Radhakrishnan February 07, 2021 8:29 PM  

கவிஞர் வாலி ... நான் ஸ்ரீரங்கத்தில் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். எப்படி எங்கள் குடும்பம் இருந்திருக்கும் என்று சொல்ல தேவையில்லை. ஆனால், நான் இன்று நெற்றியில் குங்குமமும், விபூதியும் பூசுகிறேன். இது என் வாழ் நாள் முழுவதும் இருக்கும். காரணம், நான் ஸ்ரீரங்கத்தில் இருந்த போது, சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டு, கடன்கள் பட்டு பல வருடங்களாக வாழ்ந்த நேரம் அது. ஒருநாள் மதியம் திருவானைகா சிவன் கோவிலில் கொடுக்கும் பிரசாதத்தை வாங்கி சாப்பிட நடந்தே சென்றுவிட்டேன். சாப்பிட்டுவிட்டு அகிலாண்டேஸ்வரி சன்னதியில் வெளியே உள்ள மண்டபத்தில் "அம்மா நீ ஒருத்தி தான் எனக்கு உதவ முடியும்" என்று மனதில் கூறி அவளை வெளியில் இருந்தவாறே வேண்டி கும்பிட்டுவிட்டு களைப்பாற அமர்ந்தவன் எப்படியோ படுத்து உறங்கிவிட்டேன். அன்னையின் மடியில் படுத்து உறங்கியது போன்ற உணர்வு அன்று எனக்கு ஏற்பட்டது. கனவிலே முருகன் வந்து என்னைப் பற்றி பாடு என்றான். அன்னையின் எச்சில் என் உதட்டிலும், நாவிலும் பட்டு தெறித்தது. திடுக்கிட்டு விழித்துக்கொண்டேன். அம்மா, முருகா என்று சொல்லி வணங்கிவிட்டு நடையாகவே வீடு வந்து சேர்ந்தேன். வீட்டில் அனைவரும் எங்கே சென்றுவிட்டாய்? சாப்பிட்டாயா என்று கேட்டார்கள். நண்பன் வீட்டில் அம்மா சாப்பாடு கொடுத்தார்கள் என்று சமாளித்து விட்டேன். வீட்டில் சொல்ல முடியாது. அதுவும் சிவன் கோவிலுக்கு போனியா என்று வேற கேள்வி வரும். நண்பர்களிடம் மெதுவாக சொன்னேன். அங்கு கொடுத்ததோ ஒரு கையளவு பிரசாதம் தான், ஆனால் எனக்கு வயிறு நிறைய சாப்பிட்ட உணர்வு, பிறகு சாப்பிட்ட களைப்பு போல அங்கேயே தூங்கியதையும் சொன்னேன். கிண்டல் அடித்தார்கள், கற்பனை, கற்சிலை என்று எல்லாம் என்னிடம் நகையாடினார்கள். ஆனால் என் உள்ளுணர்வு சொல்லியது இது உண்மை என்று. . கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்..
அகிலாண்டேஸ்வரி அம்மன் குங்குமத்தை தினமும் நெற்றில் வைத்துக் கொள்வார். வாலி கடைசிவரை முருகா, முருகா என்று அடிக்கடி சொல்லுவார்,
இவரை திரை உலகில் அடையாளம் காண வைத்து. ..

Anonymous May 10, 2024 8:15 AM  

உண்மை

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP