அம்மையானவன் எமக்கு அப்பனானவன்!
முருகன் அடிமை -ங்கிற படம்!
கே.ஆர்.விஜயா - முத்துராமன்; தேவர் பிலிம்ஸ்!
இந்தப் படத்தில் வரும் "கால்சட்டைப் பையன்" ஒருவன்... என் தோழன் போலவே இருப்பான்!
சிறு வயது புகைப்படம்; அதுக்காகவே, இந்தப் படத்தைப் பலமுறை பார்த்தது:)))
நாகேஷ், தேங்காய் சீனிவாசன், AVM ராஜன், விஜயகுமார், ஜெய்கணேஷ் -ன்னு இன்னும் ஏகப்பட்ட நடிகர்கள்!
* கே.ஆர்.விஜயா = முருக பக்தை;
* முத்துராமன் = திருடன் (ஆகிய) முருக பக்தன்
கோட்-சூட் போட்டுக்கிட்டு, திருநீறு பூசத் தயங்கியதால், ஒரு மாப்பிள்ளையை வேண்டாம் -ன்னு சொல்லும் கே.ஆர்.விஜயா:)
பண்டாரம் ஆனாலும் முருக பக்தனா இருந்தாப் போதும்-ன்னு நினைக்குற பொண்ணு! omg! same as you, my heart - loosu:))
அவளிடமே, அவன் வழிப்பறி செய்ய...
காதலாகி, கசிந்து.. எப்படியோ திருமணம் நிகழ்ந்து விடுகிறது;
அறிவுள்ள ஒரு பையன் பொறக்கிறான்; ஆனால் அல்பாயுசு;
அம்மா-அப்பாவைப் பிரிந்து, சிறுவனே, முருகனிடம் நியாயம் கேக்கக் போறான்!
நியாயம் கிடைத்ததா? = ஒங்க முருகன் ரொம்ப "நியாயஸ்தன்" பாருங்க:)
நடுவில் காரைக்காட்டு நங்கை, பொய்யாமொழிப் புலவர் கதையெல்லாம் கூட வரும்! அன்றாட வாழ்க்கைக் கதையில், புராணக் கதைகளின் flashback:)
முருக விரதத்துக்காக, பெற்ற பிள்ளையையே கொல்லும் தாய் - இது போன்றவையெல்லாம் எனக்கு இசைவில்லாத "கதை"கள்:))
மார்க்கண்டேயன், சிறுத்தொண்டர் கதைகளையெல்லாம், முருகன் பேரில் "உல்ட்டா" பண்ணி இருப்பாங்க:)
கடைசியில், மாமனையே மிஞ்சும் அளவுக்கு, மால் மருகன் முருகன், "விஸ்வரூபம்" எடுப்பான்!:)
அப்போ, மூக்கு மேல கோவம் பாருங்க முருகனுக்கு! அந்த "மூக்கு" எனக்கு ரொம்பப் பிடிக்கும்:))
இருந்தாலும், பல அருமையான பாடல்கள் கொண்ட படம்! சிறுவனின் over acting இல்லாத இயல்பான நடிப்பும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்!
"அம்மையானவன் எமக்கு அப்பனானவன்" என்று TMS கணீர்க் குரலில் உருகும் முருகப் பாடல், இன்னிக்கி!
அம்மையானவன் எமக்கு அப்பனானவன்!
நன்மையானவன் உலகில் உண்மையானவன்!
(அம்மையானவன்)
தாய்மை வென்றது - பிள்ளை தவமும் வென்றது
வாய்மை வென்றது - பக்தி வலிமை வென்றது
நேர்மை வென்றது - முருக நீதி வென்றது
சுவாமி சக்தியால் - எங்கள் தருமம் வென்றது
(அம்மையானவன்)
அச்சம் தீர்ந்தது - எங்கள் அன்பும் வென்றது
ஐயம் தீர்ந்தது - ஐயன் அருளும் வென்றது
கவலை தீர்ந்தது - எங்கள் காலம் வென்றது
காலம் காலமாய் - செய்த சேவை வென்றது
(அம்மையானவன்)
படம்: முருகன் அடிமை
இசை: கே.வி.மகாதேவன்
குரல்: TMS
வரி: கண்ணதாசன்
இது போன்ற பல சினிமாக்கள்!
தமிழ்ச் சினிமாவிலே முருகன் சினிமாக்கள் = பதிவு இங்கே..
2 comments:
இவை கண்ணதாசன் வரிகளா? கவிநயா அக்கா கவிதை வரிகளைப் போலவே இருக்கின்றன.
Kannadhasan
Post a Comment