Thursday, August 08, 2013

வாவா!



ஆறுமுக வேலவனே வாவா – ஓர்
ஆறுபடை வீடுடையாய் வாவா
ஆனைமுகன் சோதரனே வாவா – எமை
ஆளும் சிவ பாலகனே வாவா!

கோல மயில் வாகனனே வாவா – எழில்
கொஞ்சும் வடி வேலவனே வாவா
கொண்டைச் சேவற் கொடியசைய வாவா – சின்னத்
தண்டைக் கால்கள் ஒலியெழுப்ப வாவா!

தேவர்களைக் காத்தவனே வாவா – உன்
தேவயானை வள்ளியுடன் வாவா
ப்ரணவப் பொருள் சொன்னவனே வாவா – எங்கள்
சரவணனே ஷண்முகனே வாவா!

கண்மணியே கதிர்வேலா வாவா – எங்கள்
அன்புமீற உனையழைத்தோம் வாவா
இனியதமிழ்ப் பாடல் கேட்டு வாவா – எங்கள்
இன்பமெல்லாம் நீதானே வாவா!


--கவிநயா

படத்திற்கு நன்றி: http://kandans.com/

4 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) August 09, 2013 2:24 AM  

//உன் தேவயானை வள்ளியுடன் வாவா//

:)
உன் "தேவையான" = வள்ளியுடன் -ன்னு அவசரத்தில் வாசித்து விட்டேன்-க்கா:)
ஓ, இவனுக்குத் தேவையான வள்ளியா? ரொம்ப தான் போடா-ன்னு அவன் குமட்டிலேயே குத்தியும் விட்டேன்:))

//வாவா//

வா வா வா -ன்னு பாரதியார் மூனு முறை சொல்லுவாரு! (ஒளி படைத்த கண்ணினாய்)
பாரதி போன்ற கவிஞரான தாங்கள், வா வா -ன்னு ரெண்டே வா-வில் முடிச்சிட்டீங்க:)

Kavinaya August 09, 2013 9:43 AM  

/
உன் "தேவையான" = வள்ளியுடன் -ன்னு அவசரத்தில் வாசித்து விட்டேன்-க்கா:)/

அது சரி... :) ஐ மீன்.. அதுவும் சரியாகத்தானே இருக்கு? தேவயானை என்பது தவறுன்னு நினைக்கிறேன். முதலில் தோணலை. தெய்வானை என்பதுதானே சரி?

/வா வா -ன்னு ரெண்டே வா-வில் முடிச்சிட்டீங்க:)/

ரெண்டு தரம் சொன்னாலே வந்துடுவான்னுதான்! செல்லக் குட்டிப் பயல் ஓடோடி வந்துட மாட்டானா!

வாசிச்சதுக்கு நன்றி கண்ணா.

பார்வதி இராமச்சந்திரன். August 09, 2013 9:40 PM  

'வா,வா' என்று முருகனைப் பரிந்து அழைக்கும் கவிதை அருமை.

/////தேவயானை என்பது தவறுன்னு நினைக்கிறேன். முதலில் தோணலை. தெய்வானை என்பதுதானே சரி?/////

தேவயானை என்பதற்கு பதில் தேவசேனை என்று இருந்திருக்கலாம் என்பது என் பணிவான அபிப்பிராயம். பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றி.

Kavinaya August 10, 2013 2:10 PM  

நன்றி பார்வதி! உங்கள் தனி மடலும் பார்த்தேன். 'ஒரு flow-ல வந்துட்டது' ன்னு சொல்வாங்கள்ல? அது இதுதான்! :)

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP