Thursday, December 23, 2010

பழமுதிர் சோலையிலே தோழி! - ஜெய்சங்கர், ஜமுனா!

இந்தச் செவ்வாயில் விட்டுப் போன பதிவு, ஆனால் அவன் பேர் என் செவ் வாயில் விட்டுப் போகுமா? இதோ, வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!


அன்புள்ள மான் விழியே, ஆசையில் ஓர் கடிதம்...பாட்டு தெரியும் தானே? அந்தப் படத்தில் இருந்து ஒரு முருகன் பாடல்! பார்க்கலாமா?

குழந்தையும் தெய்வமும் என்ற படம்! ஜெய்சங்கர், ஜமுனா நடிச்சது! குட்டி பத்மினி பாடுற பாட்டு ஞாபகத்துக்கு வந்திருக்குமே?

கல்லூரிக் குறும்பில் தொடங்கி, கல்யாணம் ஆகி, பெண்ணின் அம்மாவால் குழந்தைகளைப் பிரிந்து, ஒரு குழந்தை தனியே வளர்ந்து.....
அது நாட்டியம் கற்கும் இடத்தில், ஜெய்சங்கருக்கு மீண்டும் ஒரு காதலா?

நடன ஆசிரியை யாரை நோக்கிப் பாடுகிறார் - முருகனையா? ஜெய்சங்கரையா? :) நீங்களே கேளுங்கள்! சுசீலாம்மா பாடும் அழகிய பரதநாட்டியப் பாடல்களில் இதுவும் புகழ் பெற்ற பாடல்!





பழமுதிர் சோலையிலே தோழி
பார்த்தவன் வந்தானடி - அவன்
அழகுத் திரு முகத்தில் இளைய நகை எடுத்து
ஆரம்பம் சொன்னானடி தோழி!
(பழமுதிர் சோலையிலே தோழி)

கன்னி விழி வேலைக் கண்ட வடி வேலன்
தன்னை மறந்தானடி - நானும்
தஞ்சம் புகுந்தேனடி!

வள்ளிக் குற மாது, பள்ளி வரும் போது
சொன்ன கதை தானடி - நானும்
சொல்லப் புகுந்தேனடி!
(பழமுதிர் சோலையிலே தோழி)

ஆறு முகவேலன், ஆசை மனதோடு
ஏறு மயிலாக, மாறி வருவேனோ?
வண்ண மலரும், கன்னி இதழும்,
தந்த உறவு, என்ன பெறுமோ?

நிலவிலே...அழகிலே...உறவிலே...
நெருங்கி நெருங்கி மயங்குமோ?
(பழமுதிர் சோலையிலே தோழி)

படம்: குழந்தையும் தெய்வமும்
குரல்: பி.சுசீலா
இசை: எம்.எஸ்.வி
வரி: வாலி


பி.கு: கவிநயா அக்கா, இப்பல்லாம் நான் பதிவே எதுவும் போடுறதில்லை-ன்னு குறைபட்டுக்கறாங்க! :) நான் என்னத்த சொல்ல! என் தோழன் இராகவன் கூடத் தான் பதிவே போடுறதில்ல!
முருகா, நீயே நியாயத்தைக் கேளுடா! பந்தல்-ல்ல பல்சுவை நகைச்சுவை கூட்டி ஆன்மீகம் எழுதுனாத் தான் பதிவா? அதான் என் சொந்தச் சரக்கை எல்லாம் குறைச்சிக்கிட்டு, சினிமாப் பாட்டு மட்டும் உனக்கு முருகனருள்-ல்ல போடறேன்-ல்ல? கவி-க்கா கிட்ட எடுத்துச் சொல்லு! அவுங்க கூட சேர்ந்து நீயும் பந்தலில் பதிவு போடு-ன்னு கட்சி மாறினே...பிச்சிருவேன் பிச்சி! :)

5 comments:

R. Gopi December 23, 2010 9:52 PM  

ரவி, நான் எழுதலாம்னு இருந்தேன்பா. கஷ்டப்பட்டு லிரிக்ஸ் எல்லாம் தேடித் புடிச்சு.

பரவாயில்லை. இனிமே முந்திக்கணும்:)

Kannabiran, Ravi Shankar (KRS) December 23, 2010 10:05 PM  

கோபி, பந்திக்குத் தான் முந்து! பதிவுக்குமா? :)

வரிகள் தேடிப் புடிச்சாலும், வீடியோ வேணும்-ல்ல? Youtube-ல்ல காணோம்! அப்பறம் என் கிட்ட இருந்த சிடியில், கட் பண்ணி, வலையேத்துனேன்! டேய் முருகா, என்னை ரொம்ப வேலை வாங்குறியே...போடா...ச்சீ என் கிட்ட வாடா :)

sury siva December 23, 2010 10:25 PM  

// பந்தல்-ல்ல நகைச்சுவை எல்லாம் கூட்டி ஆன்மீகம் எழுதுனாத் தான் பதிவா?//
//கவி-க்கா கிட்ட எடுத்துச் சொல்லு! அவுங்க கூட சேர்ந்து நீயும் கட்சி மாறினே...பிச்சிருவேன் பிச்சி! :)//

நயமான நகை இருப்பின் அதைச்
சுவையாத நாவும் உண்டோ !

ஆனாலும்,
நகையும் புன்னகையும்
'நவில்தொறும் நூல்போல்' ஆம்.
இதயத்திற்கு இதமளிப்பதால் அதில்
மென்மை இருக்கவேண்டும்.

விருந்தில் ஒரு ஊறுகாய் போல்
ஊறுகாயே விருந்தாமோ ?
வரம்பு மிகின் உறைக்கும்
விருந்தினர் முகம் சுளிக்கும்.

உண்மை நிலை அது.
உவர்ப்பின் எனைப்
பொறுத்திடுக.


வடுவூர் ராமன்
வாடாத புன்னகை மன்னன்
கோதண்ட ராமனைப்
பார்த்ததுண்டோ !!

நகைச்சுவை என்பது
அந்த ரகம்.

ஆனால், சிலரோ
ஆண்டாளைப் பாட வந்தேன் எனச்சொல்லி
அனுஷ்காவை நினைக்கவைப்பர்.
ஆன்மீகம் அதுவோ ?

பந்தல் ஒரு நீர்ப்பந்தல்.
கந்தனும் கண்ணனும்
காந்தமென எனை இழுக்கும்
சுந்தரச்
சிற்றோடை.
அதில்,
கந்தலுக்கு இடமுண்டோ ?


சுப்புரத்தினம்.
http://movieraghas.blogspot.com

Kannabiran, Ravi Shankar (KRS) December 24, 2010 12:47 PM  

@சூரி சார்
அச்சோ! தப்பாப் புரிஞ்சிக்கிட்டீங்க-ன்னு நினைக்கிறேன்! கவி-க்கா, காமெடி கலந்தெல்லாம் எழுதச் சொல்லலை! எழுதாமலேயே இருக்கியே, பந்தல் பதிவு வந்தே நாளாச்சே! கந்தர் அலங்காரம் அப்படியே நிக்குதே, எழுதுப்பா-ன்னு தான் சொன்னாங்க!

நான் தான் முருகனருள்-கண்ணன் பாட்டு மட்டும் போதும்! சொந்தமா எதுவும் எழுத வேணாம்! சும்மா இரு சொல் அற-ன்னு...
வெறும் பாட்டு மட்டும் எடுத்துப் போட்டுக்கிட்டு இருக்கேன்! :)

Kavinaya December 25, 2010 4:02 PM  

//கந்தர் அலங்காரம் அப்படியே நிக்குதே, எழுதுப்பா-ன்னு தான் சொன்னாங்க!//

இப்பவும் அதேதான் சொல்லுறேன். முருகன் கட்சி மாறிட்டேன்னு உங்ககிட்ட சொல்லச் சொன்னான். உங்ககிட்ட நேர்ல சொல்ல பயமாம். பாவம், சின்னக்குழந்தையை இப்படி பயப்படுத்தி வச்சிருக்கீங்களே! :)

//சும்மா இரு சொல் அற-ன்னு...//

அப்படி இருந்தாலும் ஆன்மீகம் மட்டும் பேசலாம் :) சத்சங்கம் பற்றி உங்களுக்குத் தெரியாததா?

நான் போன முறை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடக்கறப்ப ஒரு பெரியவரை சந்திச்சேன். நடக்கிற 5 நாளும் அவர் மௌன விரதம். ஆனால் வழிநடை பக்திப் பாடல்கள் மட்டும் பாடுவார். அதே மாதிரிதான் :)

உங்க எழுத்தை, நீங்க பொருள் சொல்லும் விதத்தை, எவ்வளவு பேர் அனுபவிக்கிறாங்க! பக்தி இலக்கியமெல்லாம் பொருள் தெரிஞ்சு அனுபவிக்கும்போதுதான் பக்தி இன்னும் அதிகமாகுது. அதற்கு உங்களால் உதவ முடியும்னு தெரியறப்போ, ஏன் உதவக்கூடாது? :)

பாடலையும் கேட்டேன், பார்த்தேன் :) அழகான பாடல். நன்றி கண்ணா.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP