உனைப் பாடும் "தொழில்"!
இந்தப் பதிவு, நாமக்கல் சிபி என்னும் சிபி அண்ணாவை, முருகனருளில் வாழ்த்தும் பொருட்டு, தாமே பெற வேலவர் தந்ததினால்...
முருகனருள் வலைப்பூவை முதன் முதலில் 2006-இல் துவக்கியவர் இவரே! = அவரே நாமக்கல் சிபி!
அப்பறம் தோழன் இராகவன், குமரன், TRC, VSK, வாத்தியார் ஐயா எல்லாம் இணைய...
அப்பறமா வந்து சேர்ந்த வந்தேறியும் "கந்தே"றியும் தான் அடியேன்! :)
பணி நிமித்தமோ என்னவோ சிபிக்கு! ஆளு பிஸியாகி விட்டார்! இந்தப் பக்கமே வரதில்லை :)
1. இனி, அப்பப்ப வந்து, முருகனருளில் பதிவிடவும்
2. சிபி சேர்ந்துள்ள புதிய அலுவலகத்தில், பணியில் சிறந்து, வளர்ச்சி காணவும்...
முருகனருள் அன்பர்கள் அனைவரும், கூடி இருந்து குளிர்ந்தேலோ வாழ்த்திடுவோம்!
பாடும் பணியே பணியாய் அருள்வாய்! - உனைப் பாடும் "தொழில்"!
பாடலைக் கேட்டுக் கொண்டே படியுங்கள்! சுட்டி இதோ!
குரல்: TMS
வரிகள்: தமிழ் நம்பி
இசை: VR மாணிக்க விநாயகம்
உனைப் பாடும் தொழில் இன்றி வேறு இல்லை!
எனை காக்க உனையின்றி யாருமில்லை!
முருகா! முருகா! முருகா! முருகா!
கற்பனையில் வருகின்ற சொற்பதமே - அன்பு
கருணையில் உருவான அற்புதமே!
சிற்பச் சிலையாக நிற்பவனே - வெள்ளைத்
திருநீறில் அருளான விற்பனனே!
முருகா! முருகா! முருகா! முருகா!
(உனைப் பாடும் தொழில் இன்றி)
அமுதம் இருக்கின்ற பொற்குடமே - இயற்கை
அழகு வழிகின்ற எழில் வனமே!
குமுத இதழ் விரிந்த பூச்சரமே - உந்தன்
குறுநகை தமிழுக்கு திருவரமே!
முருகா! முருகா! முருகா! முருகா!
(உனைப் பாடும் தொழில் இன்றி)
13 comments:
//உனைப் பாடும் தொழில் இன்றி வேறு இல்லை!
எனை காக்க உனையின்றி //
உனை -> எனை -> உனை.
This progression is often called 'Self Realisation'!!!
கே.ஆர்.எஸ்,
ரொம்ப நன்றி!
முதல் படத்தில் உள்ள முருகன் படம் எந்த கோவிலில் உள்ளது? திருப்பத்தூர்?
//சீனு said...
முதல் படத்தில் உள்ள முருகன் படம் எந்த கோவிலில் உள்ளது? திருப்பத்தூர்?//
அது என்னோட விருப்பப் பேழையில் உள்ள படம்-ங்க!
எந்தக் கோயில்-ன்னு தெரியாது! ஆனால் எளிமையான கோயில்-ன்னு மட்டும் தெரியுது!
ராஜ அலங்காரம் செஞ்சிப் பார்க்கணும்-ன்னு ஆசை போல! அதனால் துணியில் சரிகை ஒட்டி, வேலுக்கும் அதே போல் செய்து...சந்தனக் காப்புக்குப் பதிலா மஞ்சள் காப்பில், ஒத்தை மாலை சூடி, ஒய்யாரமா நிக்கும் என் முருகன்! - இதை அடிக்கடி பார்த்துப்பேன்! :)
ஓ! என் ஊரு திருப்பத்தூர். அங்க இருக்குற தண்டபானி கோயில் கருவரையில் உள்ள முருகன் இப்படித்தான் இருப்பான். அதான் கேட்டேன். படம் கிடைத்தால் சொல்றேன்...
எப்படி இருக்கீங்க ஜீவா? ரொம்ப நாளாச்சு உங்க பதிவு பார்த்து! பார்த்தீங்களா, முருகன் அழைச்சிக்கிட்டு வந்துட்டான்! :)
//உனை -> எனை -> உனை.
This progression is often called 'Self Realisation'!!!//
:)
நானே ஒரு ட்யூப்லைட்! எனக்குப் புரியறாப் போலச் சொல்லுங்க ஜீவா! :)
உனை-எனை-உனை-ன்னு மறுபடியும் உனை-ன்னு தானே முடியுது? "எனை"-ன்னு முடிஞ்சாத் தானே "Self" Realization?
ஒரு வேளை இப்படியும் இருக்குமோ...
நீ வெளியே இருக்கிறாய் என்று நினைத்துக் கொண்டு...
முதலில், உன்னில் ஆரம்பித்து
பின்பு, என்னில் ஆழ்ந்து
பின்பு, என்னில் ஆழ்ந்ததே உனக்குத் தான் என்று...
என்னை எனக்குக் கொள்ளாது
என்னை உனக்குக் கொள்வது-வா?
உனை->எனை->உனை
//சீனு said...
ஓ! என் ஊரு திருப்பத்தூர். அங்க இருக்குற தண்டபானி கோயில் கருவரையில் உள்ள முருகன் இப்படித்தான் இருப்பான்//
வேலூர்/வாணியம்பாடி தாண்டி உள்ள திருப்பத்தூரா? Sacred Heart College, ஏலகிரி, ஜலகம்பாறை - அந்தத் திருப்பத்தூர் தானே?
//படம் கிடைத்தால் சொல்றேன்...//
நன்றி சீனு!
இந்தப் படம் பாருங்க! இது செல்வச் செழிப்புள்ள ராஜ அலங்காரம்! :)
எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன் இந்தப் பாடலை. சேந்தனுக்கும் பிடித்த பாடல்! 'முருகா முருகா' என்று வருவதால் இந்தப் பாடலும் 'அழகென்ற சொல்லுக்கு முருகா' பாடலும் அவனுக்குப் பிடிக்கும். பாவம் அவனுக்குப் புரிவது பாடல்களின் அந்தப் பகுதிகள் மட்டும் தான்! :-)
எத்தனை முறை கேட்டிருந்தாலும் பல்லவியின் அழகைக் கவனிக்காமல் விட்டிருக்கிறேன். ஜீவாவின் பின்னூட்டம் தான் அதன் அழகைக் கவனிக்க வைக்கிறது. 'பாடும் பணியே பணியாய் அருள்வாய்' என்று வேண்டிய தெய்வீக வரியும், 'நீ என்னைக் காக்க மனம் வைத்துவிட்டால் அதனை யாரால் தடுக்க முடியும்? நீ என்னை காப்பதில்லை என்று மனம் வைத்துவிட்டால் வேறு யார் தான் என்னைக் காக்க முடியும்?' என்று கேட்ட ஆசார்ய வரிகளும், 'என் உள்ளான்' என்று சொல்லாமல் 'அடியேன் உள்ளான்' என்று சொன்ன அருளிச்செயல் வரியும் அடுத்தடுத்து நினைவிற்கு வருகின்றன!
//வேலூர்/வாணியம்பாடி தாண்டி உள்ள திருப்பத்தூரா? Sacred Heart College, ஏலகிரி, ஜலகம்பாறை - அந்தத் திருப்பத்தூர் தானே?//
அதே...அதே...அதேதான். அது என் ஊருதான். வந்திருக்கீங்களா?
//இந்தப் படம் பாருங்க! இது செல்வச் செழிப்புள்ள ராஜ அலங்காரம்! :)//
அட! எங்க ஊரு முருகனா இது!!
//சீனு said...
அதே...அதே...அதேதான். அது என் ஊருதான். வந்திருக்கீங்களா?//
வந்திருக்கேன்! கனமந்தூர் என்னும் கிராமத்துக்கு (kanamandal)! நண்பரின் வீட்டுக்கு! ஆனால் கோயிலுக்குப் போக முடியலை! காலேஜ் & சர்ச்சுக்கு மட்டும் தான் போக முடிந்தது! :)
//அட! எங்க ஊரு முருகனா இது!!//
:)
இது சென்னை ஸ்கந்தாஸ்ரமம்
//எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன் இந்தப் பாடலை. சேந்தனுக்கும் பிடித்த பாடல்! 'முருகா முருகா' என்று வருவதால்//
எனக்கும் அதே காரணத்துக்குத் தான் பிடிக்கும் குமரன்! சேர்ந்தாப் போல நீறைய முருகா வரும்! :)
//பாவம் அவனுக்குப் புரிவது பாடல்களின் அந்தப் பகுதிகள் மட்டும் தான்! :-)//
பாவமா? எதுக்குப் பரிதாபப்படுறீங்க? அவனுக்கு "அது மட்டுமே" புரிவது எவ்ளோ பெரிய சந்தோஷம்!
நாம தான் "அது மட்டுமே" புரியாமல், தமிழ்க் கடவுள் அல்ல-ன்னும், அதை மறுக்க தமிழ்க் கடவுள்-ன்னும், ஆசாரம்-ன்னும், கர்மா-ன்னும், இன்னும் என்னென்னமோ...கண்டதையும் இழுத்துப் போட்டுக்கறோம் அறிவுப் பிணியாலும் பசியாலும்! :)
முருகா, முருகா-ன்னு "அது மட்டுமே" புரிவதும், அவனுக்கு மட்டுமே ஆளாய் இருப்பதுவும்...வரங்களுள் எல்லாம் வரம்!
//'பாடும் பணியே பணியாய் அருள்வாய்' என்று வேண்டிய தெய்வீக வரியும்//
இது அனுபூதி! பதிவில் சொல்லி இருக்கேன்!
//'நீ என்னைக் காக்க மனம் வைத்துவிட்டால் அதனை யாரால் தடுக்க முடியும்? நீ என்னை காப்பதில்லை என்று மனம் வைத்துவிட்டால் வேறு யார் தான் என்னைக் காக்க முடியும்?' என்று கேட்ட ஆசார்ய வரிகளும்//
என்ன ஆசார்யர்? என்ன வரி குமரன்? இது நிஜமாவே தெரியலையே!
//'என் உள்ளான்' என்று சொல்லாமல் 'அடியேன் உள்ளான்' என்று சொன்ன அருளிச்செயல் வரியும் அடுத்தடுத்து நினைவிற்கு வருகின்றன!//
இதுவும் என்ன வரி குமரன்? திருவாய்மொழியா?
Post a Comment