எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு...
எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு!
எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு!
அத்தனை பாடலுக்கும் பெரும் பக்திச் சுவையிருக்கு!
சித்தம் இனித்திட வேலனை நினைத்திடுவோம்!
பக்திக்கருள் தரும் பாலமுருகனைப் பாடிப் பணிந்திடுவோம்!!
பிள்ளைத்தமிழ் பாடக் குமரன் உள்ளம் களித்தாடும்! - அந்தப்
புள்ளி மயிலோடு வடிவேல் துள்ளி விளையாடும்!
வள்ளி தெய்வானை சூழ்ந்திருக்கத் திருக்காட்சி அளித்திடுவான்! - கொடை
வள்ளலைப் போலக் கருணை எல்லாம் அள்ளி வழங்கிடுவான்!
எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு!
அத்தனை பாடலுக்கும் பெரும் பக்திச் சுவையிருக்கு!
சித்தம் இனித்திட வேலனை நினைத்திடுவோம்!
பக்திக்கருள் தரும் பாலமுருகனைப் பாடிப் பணிந்திடுவோம்!
ஆற்றுப்படைவீடு, திருமுறுகாற்றுப்படைவீடு! - சுவை
ஊட்டும் தமிழோடு முருகனைப் போற்றிப் புகழ்பாடு!
சந்தநடைத்தமிழ் திருப்புகழ்தனில் கந்தனவன் வருவான்!
சிந்தை குளிர்ந்திட சந்தன முருகன் நல்லருளைத் தருவான்!
எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு!
அத்தனை பாடலுக்கும் பெரும் பக்திச் சுவையிருக்கு!
சித்தம் இனித்திட வேலனை நினைத்திடுவோம்!
பக்திக்கருள் தரும் பாலமுருகனைப் பாடிப் பணிந்திடுவோம்!
எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு!!
பாடலைக் கேட்க...
எத்தனை அருமையான பாடல்! எத்தனை அருமையான பாவம்! சீர்காழி கோவிந்தராஜன் ஐயா பாடிய இந்தப் பாடல் முருகனருள் பதிவைப் பார்த்துவிட்டுப் பாடியது போல் இருக்கிறது! :-) இந்தப் பாடலின் ஒலி வடிவத்தையும் வரி வடிவத்தையும் இங்கே இடுவதற்குத் தந்த பிரகாசம் ஐயாவிற்கு நன்றி!
5 comments:
இது போன்ற அழகான அபூர்வமான பாடலை அனுப்பிய பிரகாசம் ஐயாவுக்கு நன்றி!
//சீர்காழி கோவிந்தராஜன் ஐயா பாடிய இந்தப் பாடல் முருகனருள் பதிவைப் பார்த்துவிட்டுப் பாடியது போல் இருக்கிறது! :-)//
ஹா ஹா ஹா
சந்தேகம் என்ன? முருகனருள் வலைப்பூ என்பதே எண்ணில் அடங்காத, எண்ணிலும் அடங்காத முருகப் பாடல்கள் தானே! எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக் குமரனுக்கு! அத்தனை பாடலுக்கும் பெரும் பக்திச் சுவையிருக்கு!
//பக்திக்கருள் தரும் பாலமுருகனைப் பாடிப் பணிந்திடுவோம்!!//
பக்திக்கருள் தருமா? அப்படீ-ன்னா என்ன குமரன்?
முத்தைத் தரு பத்தி = பத்திக்கு முத்தைத் தரு = பக்திக்கு அருள் தரு-வா?
//சந்தன முருகன்//
:)
இவன் எந்தக் காட்டுல ஒளிஞ்சிருக்கான்? மனக் காட்டிலா?
இவன் கிட்டக்க வரும் போதே நினைச்சேன்! இவன் மேல இம்புட்டு வாசனை வீசுதே, என்னமோ பண்ணுதே-ன்னு! இப்பத் தான் தெரியுது பேரே சந்தன முருகன்-ன்னு! Mysore Sandal Soap Muruga :)
பக்தின்னா ஒரு பொண்ணு பேரு. அவளுக்கு அருள் தரும் பாலமுருகன்னு பொருள். :-)
ஐயா, இந்த பாடல் சீர்காழி கோவிந்தராஜன் ஐயாவின் தவப்புதல்வரான டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் பாடியது. பல்லவி பிரகாஷ் என்பவர் இசை அமைக்க, பூவை செங்குட்டுவன் பாடல் எழுத வெளியானது.
உண்மை.....இதன் ராகம் சிவரஞ்சனியா ?
Post a Comment