தைபூச நாயகனே!
பூசத்தின் நாயகனே பூவுலகம் காப்பாயா ?
புள்ளி மயில் ஏறி வரும் வடிவழகா
தை மாத ஒரத்திலே தங்க ரதம் கண்டவரே
காவடியில் உன் முகம் கண்டோம் கதிர்காமா (பூசத்தின்)
செந்தூர்க் கடலினிலும் பரங்குன்றத் தரையினிலும்
பழமுதிர்ச் சோலையிலும் பழனிமலை மீதினிலும்
தணிகை மலைக் காவடியில் தெய்வமகள் உடனுறையும்
சுவாமி மலை அருளினிலும் அரங்கேற்ற வந்தவரே (பூசத்தின்)
தைபூச விழா காணும் முருகனுக்கு அரோகரா
சித்ரம் அவர்கள் எழுதி அனுப்பியது...
2 comments:
பாட்டு நல்லா எளிமையா வந்திருக்கு சித்ரம்!
//தை மாத ஒரத்திலே தங்க ரதம் கண்டவரே//
:)
ரதம் ஓரமா ஓடாது! அதான் மாசத்தின் ஓரத்தில் ஓடுது-ன்னு அழகான கற்பனை!
தைப்பூச விழாக் காணும்
என் சிங்கார முருகனுக்கு
அரோகரா! அரோகரா!
ஆறுபடை வீடுகளையும் அழகாக சொன்னீர்கள்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
வீர வேல் முருகனுக்கு அரோகரா!
Post a Comment