Friday, August 14, 2009

ஆடிக் கிருத்திகை! கும்மாளப் பாடல்! வேல்முருகா, வேல்முருகா, வேல்!

பெங்களூர் ரமணியம்மாள்-ன்னு கேள்விப்பட்டிருக்கீக தானே? குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் பாடலைப் பாடியவர்!
மேடைக் கச்சேரிகள் மட்டுமே பாடும் கிளாசிக்கல் பாடகர் என்றாலும் கூட, எல்.ஆர். ஈஸ்வரியை ஞாபகப்படுத்துவது போல் பாடக் கூடியவர்!
அந்த அளவுக்கு ரமணி அம்மாளின் பாடல்களில் குத்தும், கும்மாளமும், குதூகலமும் துஞ்சும்! கொஞ்சும்! மிஞ்சும்! :)

அது போல ஒரு சூப்பர் பாட்டைத் தான் இன்னிக்கிப் பார்க்கப் போறோம்!
நீங்கள் வாருமே பெருத்த பார் உளீர்-ன்னு துவங்குமே! அந்தப் பாட்டு!
சொல்லுங்கோ...
வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!-
ன்னு வரிக்கு வரி வரும்!
கேட்டு இருக்கீயளா? கேட்கலீன்னா, இன்னிக்கி கேட்டே ஆகணும்! :))

இதுக்கு ட்யூன் போட்டது யாரு தெரியுமா? சதா மற்ற பாடகர்களிடம் குற்றம் கண்டுபிடிக்கும் நக்கீர விமர்சகர் சுப்புடு! :))
ஒரு முறை இவர் பர்மாவில் போய்க் கொண்டிருந்த போது, அந்தப் படகோட்டி பாடிய பாடலின் மெட்டு, இந்த நக்கீர விமர்சகருக்கே மனதில் பதிந்து விட்டது!
அந்த மெட்டை ரமணி அம்மாளிடம் சுப்புடு கொடுக்க, அம்மாள் அதில் தன் பாட்டை இட்டுக் கட்டி நிரப்ப, ஒரு அபூர்வ முருகன் பாடல் உருவானது!



இன்னிக்கி ஆடிக் கிருத்திகை! (Aug-14-2009)! ஐந்தாம் படைவீடான திருத்தணிகையில் மிகவும் விசேடம்!
"கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்" என்னும் படிக்கு,
ஊரறிய உலகறிய, ஒரு பேதையைக் கரம் பற்றிய கல்யாணத் திருநகரம் தான் திருத்தணிகை!

வள்ளியை முருகன் மணந்த தலம் திருத்தணி! இதை ஏன், அதுவும் திருத்தணியிலேயே, பெரிதாக யாரும் எடுத்துச் சொல்ல மாட்டாங்கிறாங்க-ன்னு தான் தெரியலை! :(
* களவு மணமாவது? கற்பு மணமாவது?
* களவில் தான் கற்பில்லையா? கற்பில் தான் களவில்லையா?
எல்லாம் ஒரே மணம் தான்! திரு-மணம் தான்! வள்ளித் திரு-மணம் தான்!
இனி திருத்தணிகை என்றாலே வள்ளித் திருமணம் தான் நம் நினைவுக்கு வர வேண்டும்!



தினைப் புனத்திலே விளைந்த காதல் மணத்துக்கு, அந்தத் தினை அளவு தான் மதிப்பா?......என்று எவரும் கேட்டு விடாத படிக்கு...
பெற்றோர் முன்னும், மற்றோர் முன்னும், பெண்-மானத்தையும், தன்-மானத்தையும் காத்துக் கொண்டான் எங்கள் பெருமகன் முருகன்!

வள்ளியின் தவம் தான் எத்தனை எத்தனை காலம்? பெருமாள்-திருமகளின் திரு மகளான இவள், முருகனையே மணக்க வேண்டி, காலமெல்லாம் கல் போல் அல்லவா காத்துக் கிடந்தாள்?
பிறவி எடுத்தே மணக்க வேண்டும் என்ற நிலை வந்த போது, அதற்கும் தயங்கவில்லை! நம்பி ராசனுக்கு மகவாய்த் தோன்றி, நம்பிக் கொண்டிருந்தாள்!

இத்தனைக்கும் முருகன் அவளை ஏற்றுக் கொள்வானா என்று கூட அவளுக்குத் தெரியாது!
அப்படிக் காதலில் வீழ்ந்தவள் தான்! உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் முருகனே என்றிருப்பேன்!

இத்தனைக்கும் முருகனை நேரில் பார்த்தது கூட இல்லை! அவனும் அவளுடன் ஏதும் பேசியதும் இல்லை!
ஆனாலும், கனவிலும் கற்பனையிலுமே, அவனுடன் பேசிப் பேசிக் காதலை வளர்த்தாள்!
அவன் வருவானா என்று கூடத் தெரியாமல், அளி ஒத்த மேகங்காள், ஆவி காத்து இருப்பேனே!

பார்க்காத முருகனுக்காக, பார்த்த மாப்பிள்ளையை விரட்டிய வீராங்கனை வள்ளி! :)
மானிடர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் என்னும் படிக்கு, அரங்கனுக்கு ஒரு கோதை போல், முருகனுக்கு ஒரு கோதையே பேதையே = வள்ளி!

அந்தக் காதல் வேள்வியின் தீ, தீந்தமிழனை அவளிடமே இட்டுக் கொண்டு வந்தது!
குறவாணர் குன்றில் உறை பேதை கொண்ட
கொடிதான துன்ப மயல் தீர
குளிர் மாலையின் கண் அணி மாலை தந்து
குறை தீர வந்து குறுகாயோ?


குறுகினான்! வந்து உருகினான்! அவளைப் பருகினான்! அவளுள் பெருகினான்!
கனிந்தது தணிந்தது தணிகையில்!

* தணிகையில் தான் என் முருகனுக்கு இரண்டுமே தணிந்தது!
* அன்று கோபம் தணிந்தது! இன்று தாபம் தணிந்தது! :)
* இப்படி, ஒரு தனி கை வேலனுக்கு, இரு தணிகை = அது திருத் தணிகை!



அருமையான பாடல் வரிகளைப் பார்க்கலாம் வாங்க! வேல்முருகா, வேல்முருகா, வேல்! - பாடலை இங்கு கேளுங்கள்! - கேட்டுக் கொண்டே பதிவைப் படியுங்கள்!

நீங்கள் வாருமே...பெருத்த பாருளீர்!
நீங்கள் வாருமே...பெருத்த பாருளீர்!

பஜனை செய்யலாம்...பாடி மகிழலாம்!
முருகனைப் பாடலாம்...வள்ளியைப் பாடலாம்!
கண்ணனைப் பாடலாம்... மீராவைப் பாடலாம்!

மயிலையும் அவன் திருக்கை
அயிலையும் அவன் கடைக்கண்
இயலையும் நினைந்திருக்க வாருமே!

சொல்லுங்கோ...
வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!
சொல்லுங்கோ...
வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!
*****************************************

அலைகடல் வளந்தொடுத்து
எழுபுவி புரந்திருக்கும்
அரசென நிரந்தரிக்க வாழலாம்!
சொல்லுங்கோ...
வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!

அடைபெறுவ(து) என்று முக்தி?
அதி மதுரச் செந்தமிழ்க்கு
அருள்பெற நினைந்து சித்தி ஆகலாம்!
முக்தி அடையலாம்! சித்தி ஆகலாம்!!
முருகனைப் பாடினால்...முக்தி அடையலாம்!
சிவனைப் பாடினால்...சித்தி அடையலாம்!!


வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!
சொல்லுங்கோ...
வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!
***************************************

எம படர் தொடர்ந்(து) அழைக்க
அவருடன் எதிர்ந்(து) இருக்க
இடியென முழங்கி வெற்றி பேசலாம்! - எமனுடன்
இடியென முழங்கி வெற்றி பேசலாம்!
முருகனைப் பாடினால்...எமனுடன் பேசலாம்!
சிவனைப் பாடினால்...எமனை எதிர்க்கலாம்!!


வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!
சொல்லுங்கோ...
வேல்வேல் முருகா! வெற்றிவேல் முருகா!
வேல்வேல் முருகா! வெற்றிவேல் முருகா!


உள்ளத்திலே...இன்ப வெள்ளத்திலே...
முருகன்....மெல்லத் தவழ்ந்து வரும் பாலனாம்
தெள்ளித் தெளித்த தினை... அள்ளிக் கொடுத்த புனை...
வள்ளிக்(கு) இசைந்த மண வாளனாம்!

சொல்லுங்கோ...
வேல்வேல் முருகா! வெற்றிவேல் முருகா!
வேல்வேல் முருகா! வெற்றிவேல் முருகா!
வேல்வேல் முருகா! வெற்றிவேல் முருகா!

********************************************************

வேதத்திலே...திவ்ய கீதத்திலே...
பஜனை நாதத்திலே...முருகன் தோன்றுவான்!
பஜனை நாதத்திலே...முருகன் தோன்றுவான்!
உங்கள் உள்ளத்திலே...முருகன் தோன்றுவான்!
ஒவ்வொருவர் பக்கத்திலே...முருகன் தோன்றுவான்!


அவன் பாதத்தையே என்றும் பற்றிக் கொண்டால்
உங்கள் பக்கத்திலே முருகன் தோன்றுவான்!


சொல்லுங்கோ...
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா!
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா!
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா!


வேலனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா!
கந்தனுக்கு அரோகரா! எங்கப்பனுக்கு அரோகரா!
சிவ பாலனுக்கு அரோகரா! வடி வேலனுக்கு அரோகரா!
வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!


வெற்றி வேல் முருகனுக்கு.....அரோகரா!


வள்ளி வேல் முருகனுக்கு அரோகரா!
வயலூர் முருகா-என்னை வாரிக் கொள்! உன்னிடம் வாரிக் கொள்!
செந்தூர் முருகா-என்னைச் சேர்த்துக் கொள்! உன்னிடம் சேர்த்துக் கொள்!

21 comments:

ஆயில்யன் August 14, 2009 5:01 AM  

ஆடிக்கிருத்திகையில் மிக நீண்ட் நாட்களுக்கு பிறகு கேட்டு ரசித்தேன் ”வேல் முருகா வேல்முருகா “ பாடலினை


பகிர்தலுக்கு நன்றி!

முருகனருள் துணை நிற்க !

வாழ்க வளமுடன்...!

Subbiah Veerappan August 14, 2009 5:05 AM  

மாற்றம் மனதைத் தொடுவதாக உள்ளது. நன்றி கே.ஆர்.எஸ்!
முருகனருள் நம்க்கு எப்போதும் உண்டு.

வல்லிசிம்ஹன் August 14, 2009 5:15 AM  

கண்ணனுக்கு ,தியாகராஜர்.
முருகனுக்கு ரமணி அம்மாள். வெகு அருமை ரவி. வெகு நாட்களுக்குப் பிறகு இந்தப் பாடல்களைக் கேட்டதி மிகவும் மகிழ்ச்சி.'

தி. ரா. ச.(T.R.C.) August 14, 2009 5:44 AM  

கேஆர்ஸ் என்ன பொருத்தம் நம் இருவருக்கும். இருவரும் வட ஆற்காடு மாவட்டம். ஆடிகிருத்திகைபதிவு அதிலும் பெங்களூர் ரமணி அம்மாள் பாட்டு, திருத்தணிகை தலவரலாறு.எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் இது எத்தனை கண்களுக்கு வருத்தம்
எப்படியோ இதிலாவது உங்க ரேஞ்சுக்கு கொஞ்சம் கிட்டே வரமுடியுதேன்னு ஒரு அல்ப சந்தோஷம்தான்
பதிவு தூள். அதுவும் ரமணி அம்மாள் முழுப்பாட்டும் போட்டு இருக்கும் விதம் சூப்பர். அப்படியே நம்ப வீட்டுக்கும் வந்து முருகனை வணங்கீட்டு போங்க.தணிகை புராணம் முழுக்க படிக்க வேண்டாமா?

தி. ரா. ச.(T.R.C.) August 14, 2009 5:54 AM  

கேஆர்ஸ் எதோ நாங்களே ஆடி அம்மாவாசைக்கொருநாள் ஆடிகிருத்திகைக்கு ஒரு நாள்ன்னு பதிவு போடறோமன்னிக்கி நீங்களும் போட்ட எங்க பதிவை யார் படிப்பாங்க. ரஜினி படம் ரீலீஸ் அன்னிக்கி மத்த சதா படம் ரீலீஸ் ஆனா மாதிரி ஆயிடும்.

கோபிநாத் August 14, 2009 10:03 AM  

முருகனுக்கு ஆரோகரா ;))

Kannabiran, Ravi Shankar (KRS) August 14, 2009 10:34 AM  

திராச ஐயா,
அடியேனை மன்னிக்கவும்! நீங்க பதிவை scheduleல்ல போட்டு வச்சிருந்தீங்களா என்ன? அதை நான் கவனிக்கவே இல்ல! ஒன்னுமே காணோமே, எல்லாம் Draft-ல இருக்கே-ன்னு நான் தான் விறு விறு-ன்னு எழுதிப் போட்டேன்! அதுவும் விடிகாலை 03:30 மணி! தூக்கக் கலக்கம்! :)

கடைசீல பாத்தா இதுவும் ரமணி அம்மாள் பாட்டு தானா? ஆகா!
அடியவர் இச்சையில் எவை எவை உற்றன
அவை தருவித்து அருள் பெருமாளே-ங்கிற திருப்புகழ் இன்னிக்கி நல்லாவே பொருந்திடிச்சி! எந்நாளும் பொருந்த ஆசி கூறுங்கள்! சேவித்துக் கொள்கிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) August 14, 2009 10:35 AM  

//SP.VR. SUBBIAH said...
மாற்றம் மனதைத் தொடுவதாக உள்ளது. முருகனருள் நமக்கு எப்போதும் உண்டு//

நன்றி வாத்தியார் ஐயா!
என்னமோ தெரியலை! நைட் ஃபுல்லா முருகனருள்-ல்ல தான் உட்கார்ந்து கிட்டு இருந்தேன்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) August 14, 2009 11:27 AM  

//ஆயில்யன் said...
ஆடிக்கிருத்திகையில் மிக நீண்ட் நாட்களுக்கு பிறகு கேட்டு ரசித்தேன் ”வேல் முருகா வேல்முருகா “ பாடலினை//

நானும் தான் ஆயில்ஸ் அண்ணாச்சி! இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்! வெறும் ஒரு பிரபல பாடகரே பாடாது, மொத்த அடியார்களும் உடன் பாடுவதால்! சீர்காழி, டி.எம்.எஸ், கேபி சுந்தராம்பாள் அம்மா, ரமணி அம்மாளே கூட, இப்படி கூட்டமாப் பாடியது ரொம்ப ரொம்ப கொறைச்சல் தான்!

//முருகனருள் துணை நிற்க !
வாழ்க வளமுடன்...//

பெரியவங்க ஆசீர்வாதம் எல்லாம் கொடுக்கறீங்க! சந்தோசமா வாங்கிக்குறேன்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) August 14, 2009 11:33 AM  

//வல்லிசிம்ஹன் said...
கண்ணனுக்கு ,தியாகராஜர்.
முருகனுக்கு ரமணி அம்மாள்//

:)
ரமணி அம்மாள் சிறந்த பாடகி! ஆனா ரொம்ப எழுதனதில்லை!
கண்ணனுக்கு தியாகராஜர்! முருகனுக்கு அருணகிரி! :)

//வெகு அருமை ரவி. வெகு நாட்களுக்குப் பிறகு இந்தப் பாடல்களைக் கேட்டதி மிகவும் மகிழ்ச்சி//

எனக்கும் தான் வல்லீம்மா! பதிவை இடும் போதே கொறைஞ்சது ஆறு முறையாச்சும் கேட்டிருப்பேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) August 14, 2009 11:34 AM  

//கோபிநாத் said...
முருகனுக்கு ஆரோகரா ;))//

வள்ளி வேல் முருகனுக்கு அரோகரா-ன்னு சொல்லு கோபி மாப்பி! :)

Kannabiran, Ravi Shankar (KRS) August 14, 2009 11:38 AM  

//தி. ரா. ச.(T.R.C.) said...
கேஆர்ஸ் என்ன பொருத்தம் நம் இருவருக்கும். இருவரும் வட ஆற்காடு மாவட்டம். ஆடிகிருத்திகைபதிவு அதிலும் பெங்களூர் ரமணி அம்மாள் பாட்டு, திருத்தணிகை தலவரலாறு.எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் இது எத்தனை கண்களுக்கு வருத்தம்//

ஹா ஹா ஹா
ஆடிக் கிருத்திகை என்பதால் கட்டாயம் திருத்தணி சொல்லப்படும்!
ஆனால் நான் நினைச்சே பார்க்கலை! ரெண்டு பதிவிலும் அதே ரமணி அம்மாள் வருவாங்க-ன்னு! :)

//எப்படியோ இதிலாவது உங்க ரேஞ்சுக்கு கொஞ்சம் கிட்டே வரமுடியுதேன்னு ஒரு அல்ப சந்தோஷம்தான்//

இதெல்லாம் டூ மச்! :)
என்னிக்கும் எங்க கிருத்திகை காலண்டராசான் நீங்க தான்! :)

//பதிவு தூள். அதுவும் ரமணி அம்மாள் முழுப்பாட்டும் போட்டு இருக்கும் விதம் சூப்பர்.//

நன்றி திராச ஐயா! பாட்டு நீளமா இருந்தாலும், கும்மாளமும் உவகையும் கூட அதே நீளம் தான்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) August 14, 2009 11:40 AM  

//தி. ரா. ச.(T.R.C.) said...
கேஆர்ஸ் எதோ நாங்களே ஆடி அம்மாவாசைக்கொருநாள் ஆடிகிருத்திகைக்கு ஒரு நாள்ன்னு பதிவு போடறோமன்னிக்கி நீங்களும் போட்ட எங்க பதிவை யார் படிப்பாங்க//

ஹிஹி!
அடக்கம் = திராச
திராச = அடக்கம்!

/ரஜினி படம் ரீலீஸ் அன்னிக்கி மத்த சதா படம் ரீலீஸ் ஆனா மாதிரி ஆயிடும்//

சதா படம்-ஆஆ? ஹைய்யோ! நீங்க சதா ரசிகரா? சொல்லவே இல்ல? :)))

நம்ம அனைவரின் பதிவையும் முருகன் படிப்பான் திராச ஐயா! பின்னூட்டம் கூடப் போடுவான்! :)

குமரன் (Kumaran) August 14, 2009 1:17 PM  

வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
வேல் முருகா வேல் முருகா வேல்
வேல் முருகா வேல் முருகா வேல்

இந்தப் பாடலைக் கேட்கும் போது 'வையத்து வாழ்வீர்காள்' பாசுரமும் 'ஷண்முக நாயகன் தோன்றிடுவான்' பாடல்களும் தான் நினைவிற்கு வந்தன.

Kannabiran, Ravi Shankar (KRS) August 14, 2009 3:10 PM  

//குமரன் (Kumaran) said...
இந்தப் பாடலைக் கேட்கும் போது 'வையத்து வாழ்வீர்காள்' பாசுரமும்//

வையத்து வாழ்வீர்களா? அதுக்கும் இந்தப் பாட்டுக்கும் என்ன தொடர்பு குமரன்? புரியலையே! புதசெவி! :)

கேஆரெஸ்-ன்னு ஒருத்தன் இருக்கானே! அவன் கூட அடிக்கடி பேசறீங்களோ? அதான் குழப்பமா இருக்கு போல! :))

குமரன் (Kumaran) August 14, 2009 3:12 PM  

நீங்கள் வாருமே...பெருத்த பாருளீர்! = வையத்து வாழ்வீர்காள்

Kannabiran, Ravi Shankar (KRS) August 14, 2009 3:17 PM  

//குமரன் (Kumaran) August 14, 2009 3:12 PM
நீங்கள் வாருமே...பெருத்த பாருளீர்! = வையத்து வாழ்வீர்காள்//

அடா அடா அடா,
எப்படியெல்லாம் கனெக்சன் கொடுக்குறாங்கப்பா! :))
ஸ்பின் டாக்டர் திருவடிகளே சரணம்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) August 14, 2009 3:28 PM  

//பஜனை செய்யலாம்...பாடி மகிழலாம்!// = வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து

//உங்கள் உள்ளத்திலே...முருகன் தோன்றுவான்!
ஒவ்வொருவர் பக்கத்திலே...முருகன் தோன்றுவான்!//
= திருமாலிருஞ் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்! :)

தி. ரா. ச.(T.R.C.) August 17, 2009 2:27 AM  

அதுவும் விடிகாலை 03:30 மணி! தூக்கக் கலக்கம்! :)

அம்மாடி ! தூக்க கலகத்துகேலேயே இப்படி ஒரு அபார பதிவுன்னா நல்லா முழுச்சுகிட்டே போட்டா எப்படியிருக்கும் நினைச்சுப் பாத்தாலே பயம்மா இருக்கே

Kavinaya August 17, 2009 11:03 PM  

வேல்முருகா வேல்முருகா வேல்!

நன்றி... நன்றி.

Earn Staying Home August 21, 2009 5:45 AM  

அருமை

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP