முருகன் ஒரு மலைவாசி
முருகனும் ஒரு மலைவாசி. பெருவாரியாக அவன் மகிழ்ந்து, சினத்து, சினம் தணிந்து, மணந்து இருந்த இடம் மலைப் பிரதேசம்தான்.இன்றே கொஞ்சம் கிருத்திகை வந்து விட்டது. சில காலண்டர்களில் இன்றைக்கும் சிலவற்றில் நாளக்கும் கிருத்திகை விரதம் என்று போடப்பட்டு இருக்கிறது.நாளைக்கு ஊரில் இல்லாததால் இன்றைக்கே பதிவை போட்டுவிடலாம்.
நேற்று ஒரு கச்சேரிக்கு சென்று இருந்தேன். அதில் பாடப்பெற்ற ஒரு பாடல் என்னை மிகவும் பாதித்தது. அருமையான சொல்லாற்றல், கற்பனைத்திறன், கவனப்படுத்தி வழங்கிய விதம் எல்லாமே சிறப்பாக இருந்தது. அதை அப்படியே வாங்கி கீழே அளிக்கிறேன். பாடல் எழுதியவர் யார் என்றும் தெரியவில்லை.கேட்கவும் படிக்கவும் நன்றாக இருந்ததால் அதை முருகன் அடியார்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவாவினால் இடுகிறேன்
ராகம்:- சிம்மேந்திர மத்யமம் தாளம்: ஆதி
பல்லவி
கந்தா நீ ஒரு மலைவாசி
கந்தம் கமழும் நல்ல சுகவாசி......(கந்தா நீ......)
அனுபல்லவி
தந்தையின் கோலமோ பரதேசி
தத்தை சிவகாமி அம்மையோ தில்லை நகர்வாசி......(கந்த நீ ஒரு.....)
சரணம்
சோதரன் விநாயகனோ குளக்கரைவாசி
மந்தகாச மாமனோ திருமலைவாசி
அந்தமிகு மாமியோ செங்கமலவாசி
நீ எந்தவாசியானாலும் பக்தரை நேசி .......(கந்தா நீ ஒரு....).
பாடல் ஒலி அமைப்புதடை செய்யப்பட்டதால் இடமுடியவில்லை மன்னிக்கவும்.யாரவது பாடி இணைக்கலாம்
அதனால் என்ன இந்த வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கர் சொன்னாலும் என்ற கிராமிய காவடிசிந்துவை கேட்டு,பார்த்து.ரசியுங்கள்
-
'
(திராச உத்தரவு கொடுத்துட்டாரு! இதோ அதே மலைவாசிப் பாட்டு - அதே நித்ய ஸ்ரீ - ராகம் மட்டும் வேற! - krs)
14 comments:
கந்தா - சுகந்த மணம் வீசும் கந்தா!
இந்தப் பாடலை இதுவரைக் கேட்டதில்லை. அறிமுகத்திற்கு நன்றி!
பாடலைப் பாடியது யாரோ?
@ஜிவா பாடலைப் பாடியது திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன். பாடலைக் கேட்கும்போதே எழுதியது.
நன்றாக இருக்கிறது திராச. இந்தப் பாடலைக் கேட்டாலும் சுகமாகத்தான் இருந்திருக்கும். கொடுத்து வைத்தவர் நீங்கள். அதே போல வரிகளைக் கேட்டு எழுதிக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி
வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும் உள்ளம் குழைவதால்தானே இந்த வலைப்பூவில் நாமெல்லாம் கூடியிருக்கிறோம். :)
வாசி வாசி ன்னு அருமையா வாசிக்க வைச்சிருக்கீங்க திராச. நித்ய ஸ்ரீ-யின் குரலில் கேட்டீங்களா? அதுவும் சிம்மேந்திர மத்யமம்! அப்படியே கம்பீரமா, அசைந்தாடும் மயில் ஒன்று காணும்-னு வந்திருக்குமே!
எளிமையான பாடலில் தான் எத்தனை இனிமை!
மலைவாசி என மலைக்க மலைக்க வாசித்தேன்!
அவன் நேசி என நேர்ந்து நேர்ந்து சுவாசித்தேன்!
தைக் கிருத்திகை அன்று இட்டமைக்கு நன்றி!
//பாடல் ஒலி அமைப்புதடை செய்யப்பட்டதால் இடமுடியவில்லை மன்னிக்கவும்//
இதே பாடலை நித்யஸ்ரீ முன்பே பாடியது வீடியோவாகவும் இருக்கு! ஆனா அஹீர் பைரவி ராகத்தில்! இடலாம்-னு சொன்னீங்கனா இடுகிறேன்!
நல்ல பாடல்...நன்றி திராச சார்
கேஆர் ஸ் ஆஹீர்பைரவியில் இடுங்கள். மும்பை ஏர்போர்ட்டில் இருந்து இடுகிறேன். பேட்டரி பேகப் தீர்ந்துவிட்டது. சென்னை போய் தொடருகிறேன் மன்னிக்கவும்.
'வாசி'ச்சாச்சு!!
@இலவசம் மொத்த வாசி ப்போரும் வாசி ச்சாச்சா அதைச் சொல்லு.
@ ஆமாம் ராகவன் வழிப்போக்கர் சொன்னாலே உள்ளம் குழையும் முருகன் அன்பர்கள் சொன்னால் நிச்சியம் "வருவான் வடிவேலன் வண்ண மயில்மீது வாடிய பயிருக்கு வான் மழை போல"
இங்கு வழிப்போக்கர் என்பது தைப்பூசத்தன்று நகரத்தார் பழனி நடைப்பயனமாக காவடி எடுத்துச் செல்லுவார்கள் அவர்களைத்தான் வழிப்போக்கர் என்று குறிப்பிடுகிறார்கள்.
இன்றும் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் மிகப்பெரிய விழாவாக இந்துக்கள் மட்டுமின்றி மலாய்,சைனாக் காரர்களும் காவடி எடுத்து அலகு குத்தி கொண்டாடும் விழா ஆகும்.அரசாங்கமே இதில் பங்கெடுத்துக்கொள்ளும்.அரசாங்க விடுமுறையும் உண்டு.
@ கேஆர் ஸ் உங்களுடைய பின்னுட்டத்தை பார்த்தால் கே பி ஸ்
வாசிவா என்று வாசித்த சொல்லினழகும் பாடல் ஞாபகத்திற்கு வருகிறது
@மௌளி சார். வாங்க நன்றி. நிறையபேர்கள் பகிர்ந்து கொண்டது சந்தோஷமாக இருக்கிறது
@கே ஆர் ஸ் நன்றி, தேங்ஸ், பகுத்தன்யாவாத் தெரிமாகாசி(இந்தொனிஷியா)
சுகந்த மணம் வீசும் கந்தன்.
சந்தனம் மணக்குதுனு பாடவைக்கும் போல ஒரு குரல்.
மிக்க நன்றி தி.ரா.ச
Post a Comment