"தல" பில்லா 2007! முருகப் பெருமான் குத்துப்பாட்டு!!
தல பில்லா படம் இதோ நாளைக்கு ரிலீசாகப் போகுது! முருகனருள் வலைப்பூவில் ஒரு குத்துப்பாட்டு போட்டா முருகன் கோவிச்சுக்குவாரா என்ன?
பில்லா 2007 படத்தில், "சேவல் கொடி பறக்குதடா"-ன்னு இந்த முருகன் பாட்டைக் கேட்டவுடன், என் மனசு ஜிவ்வுன்னு ஒரே உசரத்துக்குப் போயிடிச்சி!
பாட்டின் வரிகளை இணையத்தில் தேடினேன்...கிட்டவில்லை!
சரி, நாமளே உக்காந்து எழுதிடுவோம்-னு கேட்டுக் கேட்டு எழுதிட்டேன்!
அப்படியே மனப்பாடமா ஆகிப் போச்சு! - பின்னே வூட்டுல யாருக்கும் தெரியாம, கதவை சாத்திப்புட்டு, வால்யூமை ஃபுல்லா ஏத்தி வச்சி, ஆடு ஆடு-ன்னு ஆடிக்கிட்டே எழுதினேன்-ல! மனப்பாடம் ஆகாம என்ன செய்யும்? :-)
பால் வடியும் பால முகம், அமைதியான பையன் (அட...என்னைப் போலவே) - இப்படி எல்லாம் பேரு எடுத்த விஜய் ஏசுதாஸ் என்னமா குத்துப்பாட்டைக் குத்திக் குத்திப் பாடுறான்!
எலே, ஏசுதாஸ் பய புள்ள! கலக்கிட்ட போ! ஒன் கச்சேரி பாட்டையெல்லாம் கேட்டிருக்கேன். அதை எல்லாம் தூக்கிச் சாப்பிடப் போகுது இந்தப் பாட்டு!
பாடலை எழுதிய கவிஞர் பா.விஜய், பாட்டு வரிகள்-ல பிச்சி ஒதறி இருக்காரு! குத்துப்பாட்டில் கந்த சஷ்டிக் கவசமும், அருணகிரியும் கொண்டு வரணும்-னா சும்மாவா?
இசை = நம்ம யுவன்!
சும்மா நாதஸ், தவிலு, குத்திசைன்னு, கலக்கி இருக்காரு! அப்பா தான் நாதசுரம் தவிலுன்னு பல சமயம் கலந்து கொடுப்பாரு! பையனும் அடிச்சி ஆடி இருக்கான்!
குத்து குத்து கூர்வடி வேலால்!
குத்து குத்து குத்துப் பாட்டால்!! :-)
பாட்டின் வரிகளைக் கேட்டுக் கொண்டே படிங்க! ஆடணும்-னு நெனச்சாலும் தப்பில்லை! கொஞ்சம் அக்கம் பக்கம் பாத்துட்டு ஆடுங்க மக்கா! :-)
Seval Kodi.mp3 |
பாட்டை மேலே கேக்க முடியலைன்னா, இதோ MusicIndiaOnline சுட்டி
வேல்! வேல்!! வேல்! வேல்!!
சேவல் கொடி பறக்குதடா, சேர்ந்து இடி இடிக்குதடா,
வேலும் படி ஏறுதடா வேலய்யா!
காக்கக் காக்கக் காக்குமடா, நோக்க நோக்கத் தாக்குமடா,
பார்க்கப் பார்க்கப் பரவுமடா முருகய்யா!
தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான்! - இந்த
முப்பாட்டன் எங்களுக்குத் தலைவன் தான்! - நீ
காட்டுக்குள்ள நடமாடி, நாட்டுக்குள்ள முடிசூடி,
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா!
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?
(சேவல் கொடி பறக்குதடா)
கந்தனுக்கு அரோகரா! வேலனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா! குமரனுக்கு அரோகரா!
கந்தனுக்கு அரோகரா! வேலனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா! குமரனுக்கு அரோகரா!
தெருக்கூத்து தமிழனுக்கு முதலாட்டம்!
புலிவேஷம் எங்களுக்குப் புகழ்கூட்டும்!
வீரம்தான் கந்தனுக்குத் தாய்ப்பாலு!
சூரனையும் சுளுக்கெடுத்த நம்மாளு!
வேடன் அடா வேடன் - இவன் தணிகைமலை நாடன்!
வீரன் அடா வீரன் - நாம கந்தனுக்குப் பேரன்!
ஆதித் தமிழன் ஆண்டவன் ஆனான்!
மீதித் தமிழன் அடிமைகள் ஆனான்!! - நீ
காட்டுக்குள்ள நடமாடி, காட்டுக்குள்ள முடிசூடி,
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா!
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?
(சேவல் கொடி பறக்குதடா)
மனுஷன்தான் முருகனோட அவதாரம்!
வீரத்தைத் தத்தெடுத்தா சிவதாரம்!
வேல்குத்தி ஆடும்போது வெறியேறும்!
தேர்சுத்தி ஓடும்போது பொறியாடும்!
ஏறு மலை ஏறு! எங்கண்ணனை நீ பாரு!
ஆறு முகம் யாரு? நம்ம நண்பன்தானே கூறு!
தமிழன் பேசும் தமிழ்க்குல விளக்கு!
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு?
விண்ணும் மண்ணும் தடதடக்க,
காற்றும் புயலும் கடகடக்க,
வாரான் வாரான் மலையேறி வேலய்யா! - வேல் வேல்!!
வேலும் மயிலும் பரபரக்க,
காடும் மலையும் வெடவெடக்க,
வாரான் வாரான் வரிசையிலே முருகய்யா! - வேல் வேல்!!
தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான்! - இந்த
முப்பாட்டன் எங்களுக்குத் தலைவன் தான்! - நீ
காட்டுக்குள்ள நடமாடி, நாட்டுக்குள்ள முடிசூடி,
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா!
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?
(சேவல் கொடி பறக்குதடா)
பாட்டைக் கொஞ்சம் அசை போடலாம், வாரீயாளா?
காக்கக் காக்கக் காக்குமடா, நோக்க நோக்கத் தாக்குமடா,
பார்க்கப் பார்க்கப் பரவுமடா முருகய்யா!
= இது அப்படியே கந்த சஷ்டிக் கவசம்!
காக்கக் காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்கத் தாக்க தடையறத் தாக்க
பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட...ன்னு அதே வரிகள்!
தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான்! - இந்த
முப்பாட்டன் எங்களுக்குத் தலைவன் தான்!
= மிக அருமையான வரிகள்! தமிழ்க் கடவுள்-னு முருகனைச் சொன்னாலும், கடவுளையும் தாண்டி ஒரு பரம்பரைத் தலைவன் - பாட்டன் கணக்காத் தான் - எளிய மக்கள் முருகனைக் கருதறாங்க! காவடி தூக்கி ஓடியாறாங்க!
காட்டுக்குள்ள நடமாடி, நாட்டுக்குள்ள முடிசூடி,
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா!
= முருகன் காட்டுக்குள்ள வள்ளியை டாவடிக்க நடமாடினாரு! தெரியும்!
ஆனாக் கா(நா)ட்டுக்குள்ள எப்போ முடி சூடினாரு? வந்து சொல்லுங்க ஜிரா! :-)
சூரனையும் சுளுக்கெடுத்த நம்மாளு! = ஹிஹி - நெஜமாலுமே சூப்பரு!
இனி, திருச்செந்தூரில், சூர சம்ஹாரம்-னு சொல்றதுக்குப் பதிலா,
"சூரன் சுளுக்கெடுத்தல்"-னு அழகாத் தமிழ்லயே சொல்லலாம்! :-)
ஆதித் தமிழன் ஆண்டவனானான்!
மீதித் தமிழன் அடிமைகளானான்!!
= ஐயகோ! கவிஞர் இப்படிப் புட்டுப் புட்டு வைக்கிறாரே!
முருகா, நீ ஆண்டானாப் போயிட்ட! நாங்க எல்லாம் ஒத்துமையில்லாம அடிமையாப் போனோமா? - ஈழத்துல, தமிழன் ஆண்டாண்டு காலமா அல்லல்படுவதைப் பார்த்தும் கூட, போகட்டும் அடிமைகள்-னு எங்கள எல்லாம் நீ விட்டுட்டியோ?
மனுஷன்தான் முருகனோட அவதாரம்! - என்ன ஒரு ஒற்றுமை, ஆழ்வார்கள் கருத்துடன்!
மனிதனாய் அல்லவோ இறைவன் வருகிறான்! சிறையில் பிறக்கிறான், புழுதியில் வளர்கிறான், தாய் தந்தை இல்லாமல் தவிக்கிறான்; நண்பர்களோடு லூட்டியும் அடிக்கிறான், காதல்-னா என்னன்னு கற்றும் கொடுக்கிறான்!
மனிதன் தான் இறைவனோட அவதாரம்! மனித குல மேம்பாடே இறைப்பணி!!
வீரத்தைத் தத்தெடுத்தா சிவதாரம்! = பார்வதிக்கு எங்கூர்ல சிவதாரம்னு நாட்டு வழக்காச் சொல்லுவாய்ங்க! சிவதாரம் பெரியம்மா எங்க வூட்டுக்கு நாலு வூடு தள்ளி இருந்தாங்க!
சிவதாரம் வயித்துல பெக்காம, சிவன் கண்ணில் பெத்ததால், முருகனைத் "தத்து எடுத்தா சிவதாரம்"-னு கவிஞரு சிம்பிளாச் சொல்லிபுட்டாரு!
வேல்குத்தி ஆடும்போது வெறியேறும்! தேர்சுத்தி ஓடும்போது பொறியாடும்!
= அருமை! அருமை! அப்படியே திருவிழா கண்ணு முன்னால வருது!
தமிழன் பேசும் தமிழ்க்குல விளக்கு!
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு?
= நச்சுன்னு கேட்டாருப்பா!
பார்வதி பிரிய நந்தனாய நமஹ-ன்னு சொல்லுறவங்க சொல்லிக்கட்டும்! நம்ம புள்ளை முருகனை அடுத்தவங்க செல்லமாக் கூப்பிட்டா, அவிங்கள போடா டேய்-ன்னு சொல்லுவோமா? - ஆனா, நம்ம வூட்டுக்குள்ளார சிவதாரப் புள்ளையாண்டானே-ன்னு தாராளமாக் கூப்பிட எவன் வந்து தடை சொல்றது?
நம்ம புள்ளைய, பேச்சு வழக்குல, நம்ம வூட்டுல கூப்பிடாம, வேற எங்கன போயிக் கூப்புடப் போறோம்?
பெருமாக் கோயில்ல கூட, இடையறாது தமிழ்-ல ஓதறாங்க! - நீராட்டம் துவங்கி நிவேதனம் வரை பாசுரங்கள் ஓதக் காணலாம்! உற்சவப் புறப்பாடுகளில் தமிழ் முன்னால்...இறைவன் பின்னால்...அதற்கும் பின்னால் வடமொழி வேதங்கள்!
ஆனா தமிழ்க் கடவுள்-ன்னு சொல்லிக்கிட்டு முருகன் கோயில்ல மட்டும்...ஹூம்! இங்கும், தமிழ் இடையறாது ஒலிக்கும் நாள் எந்த நாளோ? முருகா, மனசு வையிப்பா, என் செல்வமே!
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா! நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?
= பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன்; உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன்-ன்னு கண்ணதாசனும் பாடினாரு!
ஆனா, "நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா"-ன்னு லோக்கலாப் பாடும் போதும், அதே கிக்கு இருக்கத் தான் செய்கிறது! என்னா சொல்றீங்க மக்களே?
குத்துப் பாட்டு முருகனுக்கு அரோகரா! பத்து மலை முருகனுக்கு அரோகரா!!
41 comments:
பாட்ட அப்படியே பிரிச்சு மேஞ்சுட்டீங்க. பாட்டும் நல்லாத்தான இருக்கு நீங்க சொன்னப்புறம் பாடல் வரிகளும் நல்லாத்தான் இருக்கு. விஜய் யேசுதாஸ்
பின்னி பெடலெடுத்துட்டாரு.
//தாமோதர் சந்துரு said...
பாட்ட அப்படியே பிரிச்சு மேஞ்சுட்டீங்க.//
பாட்டு அம்புட்டு நல்லா இருந்துச்சுங்க; அதான்!
//விஜய் யேசுதாஸ்
பின்னி பெடலெடுத்துட்டாரு//
ஆமா...மென்மையான குரலுக்குச் சொந்தக்காரரு, இப்படிப் பொளந்து கட்டி இருக்காரு!
மிகவும் நல்ல பாடல். கேட்கக் கொடுத்தமைக்கு நன்றி பல.
வாவ் !!!
இரவிசங்கர்.
முருகனுக்குக் குத்து பாட்டு போட்டீங்க; கண்ணனுக்கு காவடிச் சிந்து எப்ப போடப் போறீங்க? :-)
ஆடு ஆடுன்னு ஆடிக்கிட்டே எழுதுனீங்களா? என்ன சொல்றீங்க? ஓஓ ஆடும் முருகனோட ஊர்தின்னு சொல்றீங்களா? சரி தான். யாரும் வீட்டுல 911ஐ கூப்புடலையா? சென்னையில இருந்திருந்தா குறைஞ்சது கீழ்ப்பாக்கத்திற்காவது தொலைபேசி அழைப்பு போயிருக்கும். இல்லையா? :-)
முருகா...முருகா...உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்ன்னு எத்தனை தடவை பாடியிருப்பேன். இப்படி இந்த இரவிசங்கரோட போயி பழக விட்டியேப்பா?! பின்ன... ஆடாத ஆட்டமெல்லாம் போட்டுட்டு அப்புறம் தன்னை அமைதியான பையன்னு வேற சொல்லிக்கிறாரே?!
பாட்டு நல்லாத் தான் இருக்கு. அங்க அங்க சூட்சுமமா மெசேஜும் இருக்கு. :-)
திருப்பரங்குன்றமும் ஒரு காலத்துல காட்டா இருந்திருக்குமோ? அங்க தானே முருகன் தேவசேனாபதியா முடிசூடினாரு. அதைச் சொல்றாரோ கவிஞர். நீங்க ஜீராக்கிட்ட கேட்டிங்க. அவர் ஒன்னும் சொல்லாம போயிட்டாரு. அப்புறமா சொல்லுவாரோ என்னவோ?!
சூரனையும் சுளுக்கெடுத்த நம்மாளுன்னு படிக்கிறப்ப இன்னொரு எண்ணமும் ஓடியது (போகிற போக்கில் சொல்கிறேன் - தரவுகள் எதுவும் இல்லை). ஒரு வேளை சூரனும் முருகனும் இரு ஆதித் தமிழர்களாக இருந்து ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டு சூரனை முருகன் வென்றாரோ? அப்புறமா அவர் கடவுள் ஆயிட்டாரோ? இது ஒரு எண்ணம் தான். உறுதிப் படுத்த முடியுமான்னு தெரியலை. நமக்கு கிடைச்ச பழங்கால தமிழ் இலக்கியத்திலேயே முருகன் கடவுளாத் தான் சொல்லப்பட்டிருக்காரு.
மீதித் தமிழன் அடிமையானானுக்கு நீங்க நல்லாத் தான் பொருள் சொல்லியிருக்கீங்க. ஆனா கவிஞர் வேற ஏதோ மெசேஜைத் தான் குடுக்குறாரோன்னு தோணுது. :-) நெறைய மெசேஜ் சொல்லியிருக்காருப்பா இந்த பா.வி. :-) அந்த பா.வி. சொன்னதை இந்த பாவியும் நல்லா பிரிச்சு மேய்ஞ்சிருக்காரு. :-)
அப்ப அடுத்த வருஷம் தைப்பூசத்துக்கு இந்த பாட்டுதான் ஸ்பஷலா இருக்க போகுதுனு சொல்லுங்க...
//G.Ragavan said...
மிகவும் நல்ல பாடல். கேட்கக் கொடுத்தமைக்கு நன்றி பல.//
அலோ, ஜிரா..
இது என்ன பொத்தாம் பொதுவா ஒரு பின்னூட்டம்?
எங்க கேள்விக்கு என்ன பதிலு?
குமரன் வேற கேக்கறாரு பாருங்க!
Trendy.. Peppy song...
//அரை பிளேடு said...
வாவ் !!!//
தலைவா!!!
ரொம்ப நல்ல பாட்டு, கேக்க முடியல (ஆபீஸ்ல), சும்மா சொல்ல கூடாது நான் சொல்ல வந்தத தாமோதர் சொல்லிட்டாரு!.
அலோ ஜீரா!
உங்க விளக்கம் எந்த பதிவுல சொல்லப்போறீங்க?
தைப்பூசம் நெருங்கும் வேளையில் முருக பக்தர்கள் மனமகிழ ஒரு அருமையான பாடலை வலையுலகில் பதித்திருக்கிறீர்கள், ரவி!
செம குத்துப் பாட்டு!
வி.ஜே., பா.வி. யு.ச.ரா டீம் கலக்கோ கலக்குன்னு கலக்கியிருக்காங்க!
ஆதித் தமிழன் ஆண்டவன் ஆன போது, அவனது அடியார்களான மீதித் தமிழர்களெல்லாம் அவனது அடிமைகள்தானே!
இப்படியும் கொள்லலாமல்லவா!
பாட்டின் அந்த வரிகளைப் பலமுறை திருப்பிக்கேட்டபின் சொல்கிறேன்.
முதலில்,
"காட்டுக்குள்ளே நடமாடி"
அடுத்து,
""நாட்டுக்குள்ளே முடிசூடி"
இறுதியில்,
வீட்டுக்குள்ளே"
எனத்தான் வருகிறது!!
அதனால்தான் ஜி.ரா. சும்மா இருக்கிறார் என நினைக்கிறேன்.
முடி சூடிய இடம், சூரனை வென்ற பின் வந்து தேவயானையை மனந்த திருப்பரங்குன்றம்... குமரன் சொன்னது போல!
இப்போது சரியாக வருகிறது!
நீங்களும் இன்னொரு முறை கேட்டுவிட்டுச்சொல்லுங்கள்!
இல்லை, அதுதான் சரியெனப் பட்டால், தேவர்களுக்கு விஸ்வரூபம் காட்டியபின், கந்தவெற்பில் [மேரு மலையில்] இவருக்கு சிம்மாசனம் அளித்து தேவர்கள் பூஜித்த நிகழ்வாய் இருக்கலாம்!
எனக்கென்னவோ 'நாட்டுக்குள்ளே' என்பதே சரி எனப் படுகிறது!
ஒரே சொல்லை கவிஞர் இரண்டு முறை மட்டும் பயன் படுத்தி இருக்க மாட்டார்!
அப்படிச் செய்வதென்றால் மூன்றாவது இடத்திலும் காட்டுக்குள்ளே எனவே சொல்லியிருப்பார்!
மற்ற விளக்கங்கள் மிகச் சரியே!
மீண்டும் நன்றி!
பின்னீட்டிங்க .. போங்க :) வெளக்கவுரையத்தான் சொல்லுறன். வெளக்கம் புரியா பாட்டு லிஸ்ட்டு ஒன்னு இருக்கு அனுப்பிடிறேன். பிரிச்சுப் பதஞ்சொல்லிடுங்க. :))
//முருகனுக்குக் குத்து பாட்டு போட்டீங்க; கண்ணனுக்கு காவடிச் சிந்து எப்ப போடப் போறீங்க?
//
எங்கங்க அது ?
//குமரன் (Kumaran) said...
இரவிசங்கர்.
முருகனுக்குக் குத்து பாட்டு போட்டீங்க; கண்ணனுக்கு காவடிச் சிந்து எப்ப போடப் போறீங்க? :-)//
குமரன்
கண்ணனையும் குத்தாம விடக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்க போல! போட்டுத் தாக்கிருவோம்! :-)
//யாரும் வீட்டுல 911ஐ கூப்புடலையா? சென்னையில இருந்திருந்தா குறைஞ்சது கீழ்ப்பாக்கத்திற்காவது தொலைபேசி அழைப்பு போயிருக்கும். இல்லையா? :-)//
ஜனநாயக நாட்டுல டான்ஸ் ஆடக்கூடவா உரிமை இல்லை? தில்லைக் கூத்தா அடுக்குமா? :-)
//உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்ன்னு எத்தனை தடவை பாடியிருப்பேன். இப்படி இந்த இரவிசங்கரோட போயி பழக விட்டியேப்பா?! பின்ன... ஆடாத ஆட்டமெல்லாம் போட்டுட்டு அப்புறம் தன்னை அமைதியான பையன்னு வேற சொல்லிக்கிறாரே?!//
ஹிஹி
டாண்ஸில், ரூமுக்குள் உள்ளொன்று ஸ்டெப்பு வைத்து, வெளியொன்று ஸ்டெப்பு வைப்பது எல்லாம் கணக்கில் வராது குமரன்! நானும் மயிலாடும் முருகனைப் போல் அமைதியான பையன் தான்! யமுனை ஆடும் கண்ணனைப் போல் அடாவடிப் பையன் கிடையாது! :-))
//பாட்டு நல்லாத் தான் இருக்கு. அங்க அங்க சூட்சுமமா மெசேஜும் இருக்கு. :-) //
ஒரு வேளை பா.விஜய் யும் ஒரு பதிவரோ? :-)
//நீங்க ஜீராக்கிட்ட கேட்டிங்க. அவர் ஒன்னும் சொல்லாம போயிட்டாரு. அப்புறமா சொல்லுவாரோ என்னவோ?!//
அவருக்கு இப்பல்லாம் தெலுங்குப் பாட்டு கேக்கவே டைம் இல்லியாம்! அதுல இது வேறயா? :-)
//திருப்பரங்குன்றமும் ஒரு காலத்துல காட்டா இருந்திருக்குமோ? அங்க தானே முருகன் தேவசேனாபதியா முடிசூடினாரு//
ஓ...சேனாபதி முடிசூட்டல் செந்திலில் கிடையாதா?
திருமணத்துக்கு முன்னும் பரங்குன்றம்; திருமணத்துக்குப் பின்னும் பரங்குன்றமா?
பரங்குன்றம் பற்றிய ஒரு பதிவை இன்னிக்கிப் பார்த்தேன்!
பொன்னியின் செல்வன் யாகூ குழுமத்தில்!
அங்கு இருப்பது முருகனே இல்லைங்கிறாங்க! நொந்து போயிட்டேன்!
//ஒரு வேளை சூரனும் முருகனும் இரு ஆதித் தமிழர்களாக இருந்து ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டு சூரனை முருகன் வென்றாரோ? அப்புறமா அவர் கடவுள் ஆயிட்டாரோ? //
அட, நீங்களுமா குமரன்! இப்பிடி அடிச்ச ஆட ஆரம்பிச்சிட்டீங்களே! ஜிரா இப்போ வந்தே ஆகணும்!
அண்ணன் ஜிரா, எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்! :-)
//அந்த பா.வி. சொன்னதை இந்த பாவியும் நல்லா பிரிச்சு மேய்ஞ்சிருக்காரு. :-)//
பெருமாளைப் பாவிக்கும் பாவியா நானு! சரிசரி! அப்படியே இருக்கட்டும்! :-)))
"நான் மீண்டும்", செய் எதாவது" பாடல்களை தான் விரும்பி கேட்பேன். நீங்க சொன்னப்புறம் தான் இந்த பாடலை கேட்டேன். நன்றாகவே இருந்தது.
//போகிற போக்கில் சொல்கிறேன் - தரவுகள் எதுவும் இல்லை//
குமரனுக்கு ஓஓஓஓஓஓஒ(ம்) !!!
செம அலசல் :)
அருமைங்க ரவி! மெய் சிலிர்த்தேன் இந்த விளக்கங்கள் கண்டு
எனக்கும் நாட்டுக்குள்ள முடிசூடின்னு தான் கேக்குது எஸ்.கே.
அருமையா இருக்குங்க.
வாழ்த்துக்கள்.
//தமிழன் பேசும் தமிழ்க்குல விளக்கு!
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு?//
இந்த வரிகளுக்காவது, பாட்டைக் கேட்கலாம் :) ரொம்ப நல்லா இருக்குன்னும் சொல்ல முடியல. வரிகள் சூப்பர்!
சரி, அப்பிடியே நீங்க குத்தாட்டம் போட்டதையும் வீடியோ எடுத்துப் போட்டுருந்தா, நீங்க அமைதியான பையனா(?) இல்ல ஆர்ப்பாட்டமானவரான்னு தெரியும் :)
//பாட்டு நல்லாத் தான் இருக்கு. அங்க அங்க சூட்சுமமா மெசேஜும் இருக்கு. :-) //
உண்மைதான் மிக சூட்சுமமான பொருள், பொருரைத்து பெருமை படுத்தியமைக்கு நன்றி திரு. பாஷ்யம். :-)
சுப்ரபாத பொருள் சொன்னப்ப கூட உங்களுக்கு பாஷ்யகார பட்டம் கொடுக்க தோன்றவில்லை, இதனை படித்தவுடன் கொடுக்க தோன்றுகிறது. பாடலின் பெருமையே காரணம், :-)
//எனக்கென்னவோ 'நாட்டுக்குள்ளே' என்பதே சரி எனப் படுகிறது!//
SK
பாட்டை மீண்டும் கேட்டேன்!
எனக்கும் நாட்டுக்குள்ளே-ன்னு தான் படுது!
பதிவில் மாற்றி விட்டேன்!
நன்றி!
//Thamizhmaagani said...
அப்ப அடுத்த வருஷம் தைப்பூசத்துக்கு இந்த பாட்டுதான் ஸ்பஷலா இருக்க போகுதுனு சொல்லுங்க...//
அட, ஐடியா கொடுத்திட்டீங்களா!
ஸ்பீக்கர் எல்லாம் அலறப் போவது பாருங்க Thamizhmaagani! ;-)
//Srikanth said...
Trendy.. Peppy song...//
ஆமாங்க ஸ்ரீகாந்த்!
//சிவமுருகன் said...
ரொம்ப நல்ல பாட்டு, கேக்க முடியல (ஆபீஸ்ல),//
வீட்ல போயி கேட்டுச் சொல்லுங்க சிவா!
பாட்டை இது வரை இருவது முறை கேட்டுட்டேன்! :-)
//மலைநாடான் said...
பின்னீட்டிங்க .. போங்க :) வெளக்கவுரையத்தான் சொல்லுறன். வெளக்கம் புரியா பாட்டு லிஸ்ட்டு ஒன்னு இருக்கு அனுப்பிடிறேன். பிரிச்சுப் பதஞ்சொல்லிடுங்க. :))//
ஆகா...இது வேறயா மலைநாடான் ஐயா! சரி அனுப்பி விடுங்க! ஆனா பாட்டு எல்லாம் குத்துப்பாட்டா இருக்கோணும்! அதையும் சொல்லிப்புட்டேன்! :-)
//மலைநாடான் said...
//முருகனுக்குக் குத்து பாட்டு போட்டீங்க; கண்ணனுக்கு காவடிச் சிந்து எப்ப போடப் போறீங்க?
//
எங்கங்க அது ?//
கண்ணன் பாட்டில் மார்கழியில் வரும், வரும் வரும்! :-))
//செம குத்துப் பாட்டு!
வி.ஜே., பா.வி.
யு.ச.ரா டீம் கலக்கோ கலக்குன்னு கலக்கியிருக்காங்க!//
ஆமா! நல்ல பீட்டு SK!
//ஆதித் தமிழன் ஆண்டவன் ஆன போது, அவனது அடியார்களான மீதித் தமிழர்களெல்லாம் அவனது அடிமைகள்தானே!
இப்படியும் கொள்லலாமல்லவா!//
ஆனா...பா.விஜய் அப்படிக் கொள்ளலைன்னு தான் நினைக்கிறேன்!
ஆண்டவனுக்குக் கூட அடிமைகள் என்று கொள்வதை இக்காலம் ஒப்புக் கொள்ளாது என்று தான் என் எண்ணம் :-) அடியவர்கள், அட்யொற்றிச் செல்பவர்கள்-னு சொல்லலாமே அன்றி அடிமைகள் என்று சொல்வது சரியா வருமோ?
//முடி சூடிய இடம், சூரனை வென்ற பின் வந்து தேவயானையை மனந்த திருப்பரங்குன்றம்... குமரன் சொன்னது போல!
இப்போது சரியாக வருகிறது!//
ஆமாங்க SK
காட்டுக்குள்ள நடமாடி = படைகளுடன் காடுகளில் பயணித்து
நாட்டுக்குள்ள முடிசூடி = பரங்குன்றத்தில் முடி்சூடி
வீட்டுக்குள்ள வந்த வேலய்யா = பொண்ணு வீட்டுக்குள்ள வந்த மாப்பிள்ளை வேலய்யா!
காட்டியமைக்கு நன்றி!
//சீனு said...
"நான் மீண்டும்", செய் எதாவது" பாடல்களை தான் விரும்பி கேட்பேன்.//
சீனு
அதுவும் நல்லாத் தாங்க இருக்கு!
இங்கன முருகனருள் வலைப்பூ என்பதால் இதைப் போட்டேன்!
//கோவி.கண்ணன் said...
//போகிற போக்கில் சொல்கிறேன் - தரவுகள் எதுவும் இல்லை//
குமரனுக்கு ஓஓஓஓஓஓஒ(ம்) !!!//
ஹிஹி
கோவி அண்ணாவின் குறும்பா?
சரி சரி! நடக்கட்டும்!
ஓஓஓஓஓம்! :-)
//நாகை சிவா said...
செம அலசல் :)//
Danks புலி!
//மு.கார்த்திகேயன் said...
அருமைங்க ரவி! மெய் சிலிர்த்தேன் இந்த விளக்கங்கள் கண்டு//
நன்றி கார்த்தி!
மெய் சிலிர்க்கிறா மாதிரி குத்துப் பாட்டுன்னா, எல்லாருக்கும் சிலிர்க்குமே! :-)
//புதுகைத் தென்றல் said...
அருமையா இருக்குங்க.
வாழ்த்துக்கள்//
நன்றி தென்றலே! :-)
//தஞ்சாவூரான் said...
//தமிழன் பேசும் தமிழ்க்குல விளக்கு!
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு?//
இந்த வரிகளுக்காவது, பாட்டைக் கேட்கலாம் :)//
ஆமாங்க தஞ்சாவூரான்! சில நச் வரிகள் இந்தப் பாட்டில் இருக்கு!
//அப்பிடியே நீங்க குத்தாட்டம் போட்டதையும் வீடியோ எடுத்துப் போட்டுருந்தா, நீங்க அமைதியான பையனா(?) இல்ல ஆர்ப்பாட்டமானவரான்னு தெரியும் :)//
அவ்வ்வ்வ்!
இதுக்குன்னே கெளம்பி இருக்காங்கப்பா! :-)
வெவரணையாத் தான் கெளம்பி இருக்காங்கோவ்! ;-)
ம்ம்ம்ம் கேயாரெஸ் - அருமை - அருமை - நன்றி
அடக்கமான பையனா ?? நக்கலும் நையாண்டியுமாக ஆண்மீகத்தினை அள்ளித் தரும் ஆர்ப்பாட்டமான பையன் தான் - கண்ணபிரான் குறும்பு இக்கேயாரெஸ்ஸிடமும் உண்டு
குத்துப்பாட்டு ஒன்றும் கும்ரனுக்குப் புதிதில்லையே
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்
அங்கே கூடுதம்மா பெண்கள் கூட்டம் வண்டாட்டம்
பெங்களூர் ரமணி அம்மாள் பாடியதற்கு குத்தாட்டம் போட்டவர்கள் நாங்கள்
தல ரசிகர்கள் இந்த அலசலைப் பற்றி பேசியிருக்கிறார்...
http://www.mayyam.com/hub/viewtopic.php?t=10690&postdays=0&postorder=asc&start=1485&sid=aa96f9e23324a0122b022e2128a3db99
//மதுரையம்பதி said...
உண்மைதான் மிக சூட்சுமமான பொருள், பொருரைத்து பெருமை படுத்தியமைக்கு நன்றி திரு. பாஷ்யம். :-)//
இன்னாது...பாஷ்யமா? அப்படின்னா?
மெளலி அண்ணா,
என்னைய வச்சி காமெடி கீமெடி எதுவும் பண்ணலையே? :-)
//சுப்ரபாத பொருள் சொன்னப்ப கூட உங்களுக்கு பாஷ்யகார பட்டம் கொடுக்க தோன்றவில்லை, இதனை படித்தவுடன் கொடுக்க தோன்றுகிறது.//
அவ்வ்வ்வ்வ்
காமெடியே தான்! :-))
//cheena (சீனா) said...
அடக்கமான பையனா ?? நக்கலும் நையாண்டியுமாக ஆண்மீகத்தினை அள்ளித் தரும் ஆர்ப்பாட்டமான பையன் தான் - கண்ணபிரான் குறும்பு இக்கேயாரெஸ்ஸிடமும் உண்டு//
போச்சு! சீனா சார்! மெளலி அண்ணாவும் நீங்களும் செட்டு சேந்துக்கிட்டாச்சா? :-)
//பெங்களூர் ரமணி அம்மாள் பாடியதற்கு குத்தாட்டம் போட்டவர்கள் நாங்கள்//
ஆகா...ஆமாம் ஆமாம்!
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் பாட்டில் இல்லாத குத்தா? சூப்பர்! தக்க சமயத்தில் சொன்னீங்க!
//TBCD said...
தல ரசிகர்கள் இந்த அலசலைப் பற்றி பேசியிருக்கிறார்...//
ஆகா
நன்றி டிபிசிடி, சுட்டிக்கு!
Ajeeth Fans Club-la முருகன் பாட்டு பேசப்படுதா! சூப்பரோ சூப்பர்!! :-)
கலக்கி போட்டீங்க ரவி..
செம அலசல் தான் போங்க
//Arunkumar said...
கலக்கி போட்டீங்க ரவி..
செம அலசல் தான் போங்க//
நன்றி அருண்!
அலசல், அலம்பல் எல்லாம் போகட்டும் முருகனுக்கே! :)
KRS
இன்னிக்கு இந்தப் பாட்டைக் கேட்டுட்டு ரொம்ப சந்தோசமா இருந்தேன். வரிகள் தேடினப்போ உங்க வலைப்பூ பாத்தேன். இதைத் தாண்டி நான் எதுவும் எழுதிடப் போவதில்லை...
பாட்டக் கேக்கும் போது மனசுக்குள்ள அப்படியே ஒரு தைப்பூசத் திருவிழாவ நினைச்சுக்கிட்டு பக்தியோட மனசு ஒரு குத்தாட்டமே போட்டுடுச்சு (என்ன செய்ய, பேருந்துல இருந்தேன் பாட்டு ஓடும்போது)
அந்தப் பாட்ட நினைக்கும் போது வார்த்தை அருவி மாதிரி கொட்டுது, ஆனா எழுத நினைக்குப்போது.........
முருகா முருகா!
//தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான்! - இந்த
முப்பாட்டன் எங்களுக்குத் தலைவன் தான்//
வைரமுத்துவின் முருகன் கவிதை ஒன்று நினைவுக்கு வந்துப்போனதை தவிர்க்க முடியவில்லை... முதல்ல இது வைரமுத்து பாட்டுதானோன்னு நினைச்சுட்டேன். அப்புறம் தான் பா.விஜய் பாட்டுன்னு தெரிஞ்சுது :)
நன்றி & வாழ்த்துக்கள் KRS
Post a Comment