ஆடிக்கிருத்திகையில் ஆடிவரும் அழகன்
பல்லவி
கந்தா வந்தருள் தரலாகாதா கதிவேறேது.. ........( கந்தா வந்தருள்)
அனுபல்லவி
செந்தூர் வளர் குஹா அடிமையின்
சிந்தாகுலம் தீர நீ வலிய
வந்தால் உந்தன் மஹிமை குறையுமோ
வள்ளி மணவாளா புள்ளி மயிலேரும்....(கந்தாவந்தருள்)
சரணம்
பச்சிளங் குழந்தையைப் பெற்ற தாய்
பரிந்தணைப்பது கடனன்றோ
பரம தயாகரன் என்று பேர் புகழ்
படைத்தவன் நீயன்றோ
ஸச்சிதானந்த மூர்த்தி சரவணோத்
பவ குஹனே சங்கரன் மகனே
தயவுடனே திருமால் மருகா-- மன
மிரங்கி உனதடிமை என்னிடம் பரிந்து...(கந்தாவந்தருள்)
கந்தனே எனக்குமுன் வந்து நின்று உன் அருள்மழையைப் பொழியக்கூடாதா.எனக்கு உன்னைவிட்டால் வேறு யார் கதி. திருச்செந்தூர் வளர் குஹா என்னுடைய சிந்தனையில் எப்போது இருக்கும் பயத்தை தீர்க்க வரக்கூடாதா உன்னை இவ்வளவுதூரம் வருந்தி வருந்தி நான் அழைத்தால் தான் வருவாயோ ஏன் என்மீது அன்பு கொண்டு
நீயே வலிய வந்து என்னைக் காத்தால் அதனால் உன் மஹிமை என்ன குறைந்துவிடுமோ. சிசுவை ரக்ஷிப்பது தாயின்கடமை. உனக்கு பரம தயாகரன் என்ற பேர் அதை காப்பாறிக்கொள்ள வேண்டும் என்ற எண்ண்ம் இருந்தால், திருமாலின் மருமகனே, நீயே மனமிரங்கி தயவோடு உன் அடிமையான என்னை காத்தருள வா என்று உரிமையோடு அழைக்கிறார் திரு.சிவன் அவர்கள்
சரி அழகன் தரிசனம் ஆயிற்று பாடலையும் பார்த்தாகி விட்டது இனி இந்தப்
பாடலை மும்பை ஜெய்ஸ்ரீ தன் இனிய குரலிசையால் உருகி உருகிப் பாடுவதை இங்கே கேட்டு மகிழுங்கள்">
எல்லாம்வல்ல திருத்தணிமுருகன் எல்லாருக்கும் நன்மைகளைத் தந்து அருளட்டும்.!
8 comments:
//அருணகிரியாருக்கும் சிவனுக்கும் ஒரு ஒற்றுமை. இருவரும் முருகனை நேரடியாக பாடமாட்டார்கள்.
மால்மருகனை சொல்லிய பிறகுதான் மருகனைச் சொல்லுவார்கள்//
ஹிஹி
மாலிடம் மாலை (மயக்கத்தை) வாங்கிக் கொண்டால் தானே முருகனிடம் மயங்க முடியும்! :-)
அழகான பாபநாசம் சிவன் பாடலை, ஆடிக் கிருத்திகையில் கொடுத்தமைக்கு நன்றி திராச!
திருத்தணி முருகனுக்கு அரோஹரா வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா
அருமையான பாடல். மிகவும் ரசித்தேன் திராச. சிவனாரின் பாடல்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ. முருகன் புகழைச் சிவன் பாடுவது பொருத்தமே.
நன்றி கேஆர்ஸ்.மாலும் மருகனும் ஒன்றுதான் என்ற பெரிய தத்துவத்தை
சிவன் அறிந்தவர் சிவனும் அருண்கிரியாரும்
வாருங்கள் இளா.நக்ஷ்த்திர பதிவை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வெற்றிவேல் போடவந்தாச்சா!
முருகன் புகழைச் சிவன் பாடுவது பொருத்தமே
ஜீரா வந்தாலே சிலேடையும் வந்துவிடும் போல இருக்கு
சிவனுக்கும் அருணகிரிக்கும் பிடித்தவர் ராகவந்தான் முதலில்
அருமையான பாடல், மற்றும் படம்....நன்றி சார்.
முதல் வருகைக்கு நன்றி.அடிக்கடி வாருங்கள்
Post a Comment