அன்பிற்கு இல்லை பஞ்சம்!
=================================================
அன்பிற்கு இல்லை பஞ்சம்!
இன்று ஷஷ்டி தினம். எம்பெருமான் முருகனுக்கு
உகந்த நாள். முருகனின் பெருமையைச் சொல்லும்
பாடல் ஒன்றின் வரி வடிவத்தையும் ஒலி வடிவத்
தையும் பதிவிட்டு மகிழ்கின்றேன்.
அன்பர்கள் அனைவரையும் பாடலைப் படித்தும்,
கேட்டும் இன்புற வேண்டுகிறேன்.
"உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை -
அங்கு உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!"
என்று கவிஞர் குறிப்பிட்டுள்ளது பாடலின்
முத்தாய்ப்பான வரிகளாகும்
-----------------------------------------------------------
"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருச்செந்தூரிலே வேலாடும்
திருப்புகழ்பாடியே கடலாடும்
திருச்செந்தூரிலே வேலாடும்
திருப்புகழ்பாடியே கடலாடும்
பழநியிலே இருக்கும் கந்தப்பழம் - நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப்பழம்
பழநியிலே இருக்கும் கந்தப்பழம் - நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப்பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்தபழம் -
பக்திப்பசியோடு வருவோர்க்கு ஞானப்பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்தபழம் -
பக்திப்பசியோடு வருவோர்க்கு ஞானப்பழம்
சென்னையிலும் கந்த கோட்டமுண்டு - உன்
சிங்கார மயிலாடத் தோட்டமுண்டு
சென்னையிலும் கந்த கோட்டமுண்டு - உன்
சிங்கார மயிலாடத் தோட்டமுண்டு
உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை - அங்கு
உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!
உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை - அங்கு
உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!"
பாடல் ஆக்கம்: கவிஞர். பூவை செங்குட்டுவன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்
பாடியவர்கள்: சூலம்ங்கலம் சகோதரிகள்.
அன்புடன்,
அடியார்க்கு அடியவன்,
SP.VR.சுப்பையா
கோயமுத்தூர்.
===========================================
6 comments:
முருகா.. வாத்தியார் புண்ணியத்தால் நானும் உன்னைப் பாடி விட்டேன்..
நித்தம் நித்தம் உன்னை நினைத்தாலும், எப்போது நினைத்தாலும் புதிதாகவே தெரிகிறாயே வேலவா..
அடியேனுக்கும், என அன்பர்களுக்கும் அன்பையும், அருளையும் காட்டு..
வெற்றி வேல் முருகா.. வெற்றி வேல் முருகா..
அருமையான பாடல். பாடப் பாட இனிமை. கேட்கக் கேட்க அருள்.
இந்தப் பாடல் முதலில் குன்னக்குடி இசையில் முருகன் பாடல்கள் இசைத்தட்டில் வந்தது. சூலமங்கலம் சகோதரிகள் பாடியிருந்தார்கல். இதே பாடலை...கந்தன் கருணை படத்தில் பி.சுசீலாவையும் சூலமங்கலம் ராஜலட்சுமியையும் பாட வைத்து எடுத்தார்கள்.
அண்ணா!
இனிய பாடல்,பொருள் செறிந்த பாடல்
எப்போதும் கேட்கலாம்.
ராகவன் கூறுவது போல் தனிப்பாடலாக வந்து திரைப்பாடலானது என அறிந்தேன்.
சுப்பைய்யா சார் மிகவும் இனிமையான பாடல். நன்றி.
Hey, That's was Awesome song. Thank you very much, can you share some more songs.
Thanks
Purushotham
Pittsburgh
வாத்தியார் ஐயா. மிக அருமையான பாடல் இது. நன்றி.
Post a Comment