48. இளையராஜாவே எழுதிப் பாடியது
சில சமயங்களில் சில பாடல்கள் மிகவும் அபூர்வமாக அமைந்துவிடுவதுண்டு. ஆமாம். மிகப் பிரபலமான பாடகராக இருப்பார். மிகப் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பார். ஆனால் ஒரு பாட்டுதான் இருவரும் இணைந்து வெளிவந்திருக்கும்.
முருகன் மேல் பல பாடல்கள் பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன். இவர் இளையராஜா இசையில் இரண்டே பாட்டுகள்தான் பாடியிருக்கிறார். பத்ரகாளி படத்திற்காக ஒன்று. "ஆடுகிறாள் ஓடுகிறாள்" என்ற பாடல். தாய் மூகாம்பிகை படத்திற்காக ஒன்று. இது வேறொரு விதத்திலும் அபூர்வப் பாடல். மெல்லிசை மன்னர், பாலமுரளி கிருஷ்ணா, சீர்காழி கோவிந்தராஜன் ஆகிய மூவரும் இணைந்து பாடிய ஒரேயொரு பாடல். அதுவும் இசைஞானியின் இசையில்.
இன்னொரு அபூர்வப் பாடல் இளையராஜாவின் இசையில் உண்டு. ஆம். "சொல்லவல்லாயோ கிளியே சொல்ல நீ வல்லாயோ" என்ற பாரதியார் பாடல். கவரிமான் என்ற திரைப்படத்திற்காக வரலட்சுமி அவர்கள் பாடிய பாடல். வெள்ளிமலை மன்னவா என்று கணீர்க்குரலில் பாடிய இவர் இளையராஜாவின் இசையில் பாடிய முதற்பாடல் இது. இந்தப் பாடலின் எம்.பி.3 என்னிடம் இல்லை. யாரிடமாவது இருந்தால் gragavan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். இதற்குப் பிறகு குணா படத்திற்காக நான்கு வரிகள் பாடினார்.
இப்படி ஏதாவது காரணங்களால் அபூர்வப் பாடல்கள் அமைந்து விடுவதுண்டு. பல இசையமைப்பாளர்கள் இசையில் இப்படிப் பல பாடல்கள் இருந்தாலும் இப்பொழுது பார்க்கப் போகும் பாடல் இளையராஜாவின் பாடல். ஆம். அவரே எழுதி இசையமைத்துப் பாடிய....என்ன நிறைய பாடல்கள் இருக்கின்றனவா? சரி. முருகன் பாடல்? இசைஞானியின் இசையில் முருகன் பாடல் என்றால் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். மகராசன் படத்தில் ஒரு பாடல். அது தவிர அவரது கீதாஞ்சலி என்ற இசைக்கோர்ப்பில் உள்ள இந்தப் பாடல். "முருகனை நினை மனமே" என்று அவர் பாவத்தோடு பாடிய பாடல். அதைத்தான் இப்பொழுது கேட்கப் போகிறோம். கேட்கலாமா?
முருகனை நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம்தினமே
முருகனை நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம்தினமே
உருகிடும் மறுகணமே
உருகிடும் மறுகணமே
நெருங்கி வருவது அவன் குணமே ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
முருகனை......நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம்தினமே
ஒவ்வொரு நொடியிலும் அருகினில் இருப்பவன்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஒவ்வொரு நொடியிலும் அருகினில் இருப்பவன்
ஒவ்வொரு செயலிலும் பெருமை கொடுப்பவன்
உடலுக்கு உயிரென உயிருக்கு ஒளியவன்
உடலுக்கு உயிரென உயிருக்கு ஒளியவன்
உணர்ந்தவர் தொழுதிடும் உயர்ந்தவர் பரவிடும்
முருகனை......நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம்தினமே
அழகனின் அழகினில் இருவிழி குளிர்ந்திடும்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
அழகனின் அழகினில் இருவிழி குளிர்ந்திடும்
அவன் விழி அசைவினில் கலைகளும் மலர்ந்திடும்
அவனருள் மழையினில் உணர்வுகள் சிலிர்த்திடும்
அவனருள் மழையினில் உணர்வுகள் சிலிர்த்திடும்
அறிவுடன் பொருள் புகழ் அனைத்திலும் சிறந்திட
முருகனை......நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம்தினமே
உருகிடும் மறுகணமே
உருகிடும் மறுகணமே
நெருங்கி வருவது அவன் குணமே ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
முருகனை......நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம்தினமே
கேட்டீர்களா? இது போன்ற அபூர்வப் பாடல்கள் இருந்தால்...மறக்காமல் மயிலனுப்பவும்.
அன்புடன்,
கோ.இராகவன்
8 comments:
அதிர்வு இல்லாமல் காலைப்பொழுதில் முருகனை நினைக்க வைத்ததற்கு நன்றி ராகவன்.
இளையராஜா வர்களின் குரல் மென்மையும் இசையும் அமைதியாக ஆனந்தமாக இருந்தது.
இணையத்தில் அவ்வளவாகத் தேடும் பயிற்சி இல்லை. கிடைத்தால் உங்களுக்கும் மயிலுகிறேன்.
ராகவன்,
அருமை
இதே போல ராஜாவின் கீதாஞ்சலி பாமலைத் தொகுப்பில் "மறந்தேன் மறந்தேன் " என்று ஒரு அருமையான முருகன் பாட்டு உண்டு கேட்டீர்களா?
நீங்கள் கேட்ட கவரிமான் பாடல் தவிந்த அப்படத்தின் மற்றைய பாடல்கள் என்னிடம் இலகுவாக எடுக்கமுடியும், நீங்கள் கேட்ட பாடலைக் கட்டாயம் என் கையிருப்பில் தேடித்தருகின்றேன்.
கண்டேன்.. கண்டேன்.. என் முருகனைக் கண்டேன்.. ஜி.ரா. ஸார்.. இப்போதெல்லாம் தினமும் காலையில் என் முருகனை காண்கிறேன் பல்வேறு வடிவங்களில்.. இன்று உங்களது பாடலின் மூலமாக.. முருகா..
// வல்லிசிம்ஹன் said...
அதிர்வு இல்லாமல் காலைப்பொழுதில் முருகனை நினைக்க வைத்ததற்கு நன்றி ராகவன்.
இளையராஜா வர்களின் குரல் மென்மையும் இசையும் அமைதியாக ஆனந்தமாக இருந்தது. //
ஆமாங்க...அடுத்து பாருங்க..ஆர்ப்பாட்டமா ஒரு கண்ணன் பாட்டு வரப்போகுது :)
// இணையத்தில் அவ்வளவாகத் தேடும் பயிற்சி இல்லை. கிடைத்தால் உங்களுக்கும் மயிலுகிறேன். //
கண்டிப்பாங்க. நானும் தேடிப் பாக்குறேன்.
// கானா பிரபா said...
ராகவன்,
அருமை
இதே போல ராஜாவின் கீதாஞ்சலி பாமலைத் தொகுப்பில் "மறந்தேன் மறந்தேன் " என்று ஒரு அருமையான முருகன் பாட்டு உண்டு கேட்டீர்களா? //
கேட்டேன் பிரபா. அந்தப் பாட்டும் எங்கிட்ட இருக்குது. ஆனா இந்தப் பாட்டு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதான் போட்டாச்!!!!
// நீங்கள் கேட்ட கவரிமான் பாடல் தவிந்த அப்படத்தின் மற்றைய பாடல்கள் என்னிடம் இலகுவாக எடுக்கமுடியும், நீங்கள் கேட்ட பாடலைக் கட்டாயம் என் கையிருப்பில் தேடித்தருகின்றேன். //
தேடிப்பாருங்கள் பிரபா. அந்தப் பாடல் ஒரு அபூர்வப் பாடல். கிடைத்தால் மிகச் சிறப்பாக இருக்கும்.
// உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
கண்டேன்.. கண்டேன்.. என் முருகனைக் கண்டேன்.. ஜி.ரா. ஸார்.. இப்போதெல்லாம் தினமும் காலையில் என் முருகனை காண்கிறேன் பல்வேறு வடிவங்களில்.. இன்று உங்களது பாடலின் மூலமாக.. முருகா.. //
வாங்க உண்மைத்தமிழன். நோக்குமிடமெங்கும் நீக்கமற நின்ற நித்யானந்தனை எங்கும் எதிலும் எப்பொழுதும் காண்பதில் என்ன குறை இருக்க முடியும். முருகனருள் முன்னிற்கும்.
எதையோ தேடப் போய், கூகுள் மூலமா இந்தப் பக்கம் வந்தேனா...ராகவனின் கடைசிப் பின்னூட்டம் பார்த்து, ராத்திரி வேளை, பலமாச் சிரிச்சிட்டேன்! ராகவா ராகவா...
//நோக்குமிடமெங்கும் நீக்கமற நின்ற நித்யானந்தனை//
இது ரஞ்சிதனை-ன்னு இருந்திருக்குணுமோ? :))))
புத்தகக் கண்காட்சியில் கூட, கட்-அவுட் ஃபுல்லா நோக்குமிடமெங்கும் நீக்கமற நின்றிருப்பாரு நித்யானந்தனை, நீங்க தீர்க்கத்தரிசனமா எப்பவோ சொல்லிட்டீங்க :))
http://mp3.tamilwire.com/kavari-maan.html
Inku antha padalai download saeiyalam
Post a Comment