015: என்னைக் கா வா வா! முருகா வா வா!
கந்தனே! கடம்பனே!
கருத்தினில் உறைந்திடும்
கருணை வடிவான குஹனே!
கண்களோ பன்னிரண்டிருந்திடினும்
ஏழையைக் காக்க ஒரு கண்ணும் இல்லையோ?
சரண் என்று கொண்டு உனை
சந்ததமும் பாடினேன்
செவிகளில் விழவில்லையோ?
நற்கதியை அருட்பதம் அண்டினேன்
அடியனை ஆண்டருள் செய்தருள்!
பழனி மலை உறையும் முருகா வா வா!
முருகா வா வா!
கந்தா வா வா!
எனை கா வா வேலவா!
சண்முகா வா வா!
கந்தா வா வா!
எனைக் கா வா வேலவா! (பழனி)
தேவாதி தேவன் மகனே வா!
பரதேவி மடியில் அமரும் குஹனே வா!
வள்ளி தெய்வயானை மணவாளா வா!
சரவண பவ! பரம தயாளா! (முருகா வா வா)
ஆபத்து இருள் அற அருள் ஒளி தரும்
அப்பனே அண்ணலே ஐயா வா வா!
பாபத் திரள் தரும் தாபம் அகல வரும்
பழனி வளர் கருணை மழையே வா!
தாபம் தரு வெயில் அற நிழல் தரும் வான் தருவே
குல குருவே வா!
ஸ்ரீ பத்மனாபன் மருகா! ராம தாசன் வணங்கும்
முத்தைய்யா வா வா!
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
பாடியவர்: சுதா ரகுநாதன்
இராகம்: வராளி
தாளம்: ஆதி
13 comments:
//அடுத்த பகுதி சரியாகப் புரியவில்லை//
குமரன்,
இதோ கீழே; சரியா எனப் பாருங்கள்!
ஆபத்து இருள் அற
அருள் ஒலி தரும்
அப்பனே அண்ணலே
ஐய வா வா
பாபத் திரள் தரும்
தாபம் அகல வரும்
பழனி வளர் கருணை மழையே வா
தாபம் தரு வெயில் அற
நிழல் தரும் வான் தருவே
என் குல குருவே வா
ஸ்ரீ பத்ம னாபன் மருகா
ராம தாசன் வணங்கும்
முத்தைய்யா வா வா
***
//ராம தாசன்// = பாபநாசம் சிவன் அவர்களின் கீர்த்தனை முத்திரை
அன்புக் குமரன்!
மிக அருமையான பதிவு;அடிக்கடி இப்படிப் போடவும்.சுதாவின் இனிமையான குரல்;ஒர் முழுமையான குழு(இந்நாளின் அருகிக்கொண்டு போகும் விடயம்) வின் கச்சேரி கேட்பதே சுகம். ஒளிப்பதிவும் அருமை!!!
நன்றி ;நன்றி
யோகன் பாரிஸ்
நன்றி குமரன்!
பாபநாசம் சிவனின் பாடல்களை தி.ரா.சவிடம் கேட்டிருந்தேன். குமரனே தருகிறார். அதுவும் முருகனருளில். சுவைத்து ரசிக்கிறேன்.
// Johan-Paris said...
அன்புக் குமரன்!
மிக அருமையான பதிவு;அடிக்கடி இப்படிப் போடவும்.சுதாவின் இனிமையான குரல்;ஒர் முழுமையான குழு(இந்நாளின் அருகிக்கொண்டு போகும் விடயம்) வின் கச்சேரி கேட்பதே சுகம். ஒளிப்பதிவும் அருமை!!!
நன்றி ;நன்றி
யோகன் பாரிஸ் //
யோகன் ஐயா, அடுத்த பாடலுக்குக் கொஞ்சம் காத்திருங்கள். ஒரு சிறப்பு விருந்து காத்திருக்கிறது. :-)
அன்பு இராகவா,
குறவஞ்சி.comக்கு இணைப்பு கொடுத்தமைக்கு நன்றி.
இயன்றால் தங்களின் மின்னஞ்சல் முகவரியினை என் njaanam@gmail.comக்கு அனுப்பித் தரவும்
வராளி சற்று பயிற்சி செய்தபின்னே பழக்கத்தில் வரும் ராகம். சுதா அனாயாசமாய் பாடுகிறார். இசை செவிக்கும் வார்த்தைவரிகள் மனதிற்கும் நிறைவினை தருகிறது குமரன். நன்றி
ஷைலஜா
சரியாகப் புரியவில்லை என்று எண்ணிய பகுதியை கொடுத்ததற்கு மிக்க நன்றி இரவிசங்கர். அதனை உடனே எடுத்துப் பதிவினில் இட்டுவிட்டேன்.
ஆமாம் பாடலைக் கேட்கும் போதே பாபநாசம் சிவன் அவர்களின் முத்திரையான இராமதாசன் வருவதைக் கவனித்தேன். ஆனால் அதற்கு முன்புள்ள வரிகள் தான் புரியவில்லை.
// குஹனே //
இது குகன்/குகனே இல்லையா?
யோகன் ஐயா. சுதாவின் பாடல்கள் உங்களுக்குப் பிடிக்கும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறீர்கள். நீங்களும் இப்போது யூ டுயூபிற்குச் சென்று பாடல்களைக் கண்டும் கேட்டும் கொண்டிருக்கிறீர்கள் என்று இன்னொரு பதிவில் சொல்லியிருக்கிறீர்கள். ஏதாவது நல்ல பாடல்களைக் கண்டால் உங்கள் பதிவில் இடுங்கள்.
நன்றி ஜீவா.
இராகவன். தங்களின் சிறப்பு விருந்தைப் பார்த்தேன். அங்கே வருகிறேன்.
ஷைலஜா. எனக்கு இராகங்களைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. உங்கள் குரலை அடுத்தப் பதிவில் கேட்டேன். நீங்கள் சொன்னால் சரி. நன்றி ஷைலஜா.
குறும்பன்,
குறும்பன் என்ற சொல் சில நேரம் குசும்பன் ஆவது போல் குகனே என்ற சொல்லும் சில நேரங்களில் குஹனே ஆவதுண்டு. பாடியவர் எப்படிப் பாடியதாக எண்ணினேனோ அதனையே இங்கே எழுதிவிட்டேன். அவ்வளவு தான். கோவித்துக் கொள்ளாதீர்கள்.
Post a Comment