Sunday, August 21, 2011

கிருத்திகைபதிவுமாலோன் மருகன் மன்றாடி மைந்தன் என்றபடி மாமனுக்கும்
 மருகனுக்கும் உகந்த நாள் இது.மாலுக்கு சிறப்பான கோகுலாஷ்டமியும்,மருக​னுக்கு உகந்த கிருத்திகையும் சேர்ந்த நாள் இது.அருணகிரிநாதர்முத​ல் தொடங்கி தமிழ்த்தியாகய்யா பாபனசம் சிவன் வரை இருவரையும் சேர்த்து பாடாதவரே கிடையது.மாலும் மருகனும்  ஒருவர்தான் என்பதை நமக்கு உணர்த்தும் நாள்

ஊத்துகாடு வேங்கடகவி கண்ணனின்மீது பல மனதைக் கவரும் பாடல்களைப்பாடியுள்ளார்.ஆராய்ந்து பார்த்ததில் ஒரு அருமையான பாடல் முருகனின் மீது பாடியுள்ளார் வழக்கம்போல் தமிழ் அருவிபோல் கொட்டுகிறது. சொற்களின் அணிவரிசையும் அடுக்கு வரிசையும் அபாரம். பாட்டைப் பார்ப்போம்

ராகம்: ஷண்முகப்பிரியா    தாளம் :ஆதி

பல்லவி

வரமொன்று தந்தருள்வாய் வடிவேலா
எங்கள் மரகத மாமயிலேறும் ஆறுமுக வடிவேலா அந்த....(வரமொன்று)
அனுபல்லவி
பரமென்ற சொல்லுக்கொரு பொருளே
பரத்தில் பரமென்ற சொல்லுக்கொரு பொருளே
இளம்பச்சைக்கும் இச்சைக்கும் நடுப்பொருளே
பலபொருள் கேட்டுன்னை அது இது என்னாது
பட்டென்று ஒரு பொருள் கேட்டிடுவேன் அந்த........(வரமொன்று)
சரணம்
பொன்னும் மணியும் எந்தன் புத்தியிலே பட்டு அவை புளித்துப் புளித்து போச்சே
ஏனென்றால் உந்தன் புன்னகை முகம்கண்டதாலாச்சே
இன்னும் உலகம் ஒரு இன்பம் என்றது எப்படியோ மறந்துபோச்சே
உன் ஏறுமயில் நடனம் கண்டலாச்சே
முன்னும் மனம் உருக முருகா முருகா என்று மோகமீறி தலைசுற்றலாச்சே
சொல்லவந்த மொழிகூட மறந்துதான்போச்சே
எதோ பொன்னார் மேனியன் காதில் சொன்னாயே
அந்தரங்கம் போதுமென்று கேட்கவும் ஆசையாச்சே
புனிதமான அறுபடை வீடுடையாய் புகுமதக் களிறு நடையுடையாய்
இனித்த நறும் எக்கலவை எதிலும் இனித்த விளைதினை சுவையுடையாய்
எனக்கு ஒரு பதம் தந்தருளும் மண மணக்க வரும் தமிழ் அருளடையாய் 
அன்னயினும் சிறந்ததான அருளோடு நிறைந்ததான அறுமுகவடிவே.....(வரமொன்று)

 வேங்கடகவி வாழ்ந்த காலமோ 1700 -௧765. ஆனால் அந்த கொஞ்சும் தமிழைப் பாருங்கள் எவ்வளவு எளிமை. இப்போதுள்ள பேச்சுத்தமிழ்போலவே இருக்கும் பொருள் விளக்கமே தேவையில்லை சரளமான வரிகளும், அடுக்கு வரிசைகளும், வார்த்தை வண்ணஜாலங்களும். அதில்மிகையாக இருக்கும் அவரது கோரிக்கையும், பக்தியும், மெய்சிலிர்க்கவைக்கும் சங்கீதமும், மனதை கவரும் வண்ணம் இருக்கிறது.எனக்கு பிடித்த இந்தப் பாடல் உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன் அதுவும் குறிப்பாக கேஆர்ஸ்க்கு.

 இனி பாட்டை பார்த்து கேட்டு ரசியுங்கள்.  மறைந்த திரு. மஹாராஜபுரம் சந்தானம் அவர்கள் ஒரு 5 மணித்துளிகள் ஷண்முகப்பிரியா ராகத்தை பிழிந்து ரசமாக கொடுத்துவிட்டு பின்பு கீர்த்தனையை தன் மதுர குரலில் தேனைக் குழைத்து ரசிக்கும் வகையில் வழங்கியுள்ளார். இந்த கிருத்திகை நன்னாளில் முருகனின் ஆசிபெற்றுச் செல்லுங்கள்13 comments:

தி. ரா. ச.(T.R.C.) August 21, 2011 9:00 AM  

krs this is for You and your family

kannabiran, RAVI SHANKAR (KRS) August 22, 2011 10:58 AM  

வணக்கம் திராச! இப்போது தான் கண்டேன்! In Rio on an oppice visit :)

அழகான பாடல்!
அதுவும் கண்ணனையே பாடும் ஊத்துக்காடு நடனக் கவி, முருகன் மீது இசைந்து இசைக்கும் கவி-ன்னா சும்மாவா? எங்கிருந்து தான் இப்படி அரிய கருவூலத்தை எடுக்கறீங்களோ? மிக்க நன்றி!

kannabiran, RAVI SHANKAR (KRS) August 22, 2011 11:02 AM  

கண்ணன் பிறந்தநாள் அதுவுமா என்னாசை முருகன் பாட்டு...கண்ணன் கவி பாடுவது...எனக்குன்னே குடுத்த பரிசு போல இருக்கு:)

//இளம்பச்சைக்கும் இச்சைக்கும் நடுப்பொருளே//

அழகு! இதுக்கு என்ன பொருள்? சொல்லுங்க பார்ப்போம்!

//பட்டென்று ஒரு பொருள் கேட்டிடுவேன் அந்த...
வரமொன்று தந்தருள்வாய் வடிவேலா//

முருகா...
நீ தந்த வரம் கனிய எத்தனை காலம் தான், நான் காத்திருப்பது?
கண்களின் வார்த்தைகள் புரியாதா?
காத்திருப்பேன் என்று தெரியாதா??

kannabiran, RAVI SHANKAR (KRS) August 22, 2011 11:06 AM  

//புளித்து போச்சே
முகம்கண்ட தாலாச்சே
மறந்துபோச்சே
நடனம் கண்டலாச்சே
தலைசுற்றலாச்சே//

இதைப் பார்த்தாலே சொல்லிடலாமோ, ஊத்துக்காடு கவி-ன்னு?:)
போச்சே, ஆச்சே-ன்னு எத்தனை பாட்டு எழுதி இருக்காரு! ஆகா!

திருத்தணிகை முருகன் படம் இட்டமைக்கும் நன்றி!
முருகனருளில், திருத்தணியான் படம் அதிகம் இட்டவர் நீங்களாத் தான் இருப்பீங்க! :)

தி. ரா. ச.(T.R.C.) August 23, 2011 3:46 AM  

வாங்க கேஆர்ஸ் எனக்குத் தெரிந்த வரை ஊத்துக்காடு பாடிய முருகன் பாட்டு இது ஒன்றுதான்.இன்னொரு பாட்டு கதிர்காம கந்தன் மலரடி பணி மனமே ஆனால் இது ஆனால் சரியாக தெரியாது இவரா என்று

தி. ரா. ச.(T.R.C.) August 23, 2011 4:14 AM  

இளம்பச்சைக்கும் இச்சைக்கும் நடுப்பொருளே
இதற்கு பொருள் எனக்குத் தெரியாது. இருந்தாலும் இப்படி இருக்கலாமோ என்று யோஜனை செய்தாதில் வந்தது.
இளம் பச்சை என்று அவர் பச்சை நிறமுடைய வள்ளியை குறிப்பதாக வைத்துக்கொண்டால் இச்சையாகிய தேவயனைக்கும் வள்ளிக்கும் நடுவில் நிற்பவர் என்ற வெளிக்கருத்தாகக்கொள்ளலாம். உட்கருத்து மனிதர்களிடம் மிகுதியாக காணப்படும் இச்சா சக்தியிடத்திலிருந்து மீட்டு ஞான மார்கத்திற்கு வழிகாட்டும் நடுப்பொருளான ஞானபண்டிதன் முருகன்கான் என்பதை சொல்லுவது போல் இருக்கிறது. வல்லார்க்கும் மாட்டார்க்கும் நடு நின்ற நடுவே என்று வள்ளலாரும் பாடியுள்ளார். என்ன சரியா?

தி. ரா. ச.(T.R.C.) August 23, 2011 4:21 AM  

பலமுறை கூறியது போல் என்னுடய குலதெய்வம் திருத்தணி முருகன் அவருடைய படத்தைஎத்தனை தடவை போட்டாலும் எனக்கு அலுப்பு வரவில்லை. மேலும் கிருத்திகை என்றாலே திருத்தணிதான் நினைவுக்கு வரும் அதுவும் ஆடி தை மாதங்களில் சிறப்பாக

தி. ரா. ச.(T.R.C.) August 23, 2011 4:27 AM  

இதில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்
எனக்கு ஒரு பதம் தந்தருள
மண மணக்க வரும் தமிழ் அருளடையாய்
அன்னயினும் சிறந்ததான அருளோடு நிறைந்ததான அறுமுகவடிவே

Lalitha Mittal August 23, 2011 7:25 AM  

அருமை!மீண்டும் மீண்டும் பலமுறை கேட்டுக் கேட்டு ரசித்தேன்!

sury August 23, 2011 9:28 AM  

தேன்!
ரசித்தேன்!

subbu rathinam

தி. ரா. ச.(T.R.C.) August 23, 2011 11:54 AM  

வாங்க லலிதம்மா. நான் இதுவரை 5 தரம் கேட்டு விட்டேன்

தி. ரா. ச.(T.R.C.) August 23, 2011 11:55 AM  

வரனும் சூரி அண்ணா தேனும் தினை மாவும் தின்னும் வள்ளியின் கணவனான முருகன் பாட்டல்லவா தேனாகத்தான் இருக்கும்

குமரன் (Kumaran) August 26, 2011 12:42 AM  

நீண்ட பாடல். ஆனால் பாடல் எழுதியவரும் பாடியவரும் (இட்டவரும்) அசத்திவிட்டார்கள்.

இளம்பச்சைக்கும் இச்சைக்கும் நடு என்றவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது சோமாஸ்கந்தர்.

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP