Tuesday, August 02, 2011

ஆண்டாள் பாசுரம்! - முருகனுக்கு!!

என் அந்தரங்கத் தோழியின் பிறந்தநாள்!
அந்த-ரங்கத் தோழியின் பிறந்தநாள்! (Aug-02, 2011)!
திரு ஆடிப் பூரத்துச் செகத்து உதித்தாள் வாழியே! Happy Birthday dee, Kothai! - from me & murugan :)

இவள் உறுதியே..............என் முருகனிடம் என் உறுதி!

இவள் தோழமை.............உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே...இடுக்கண் களைவது எனக்கு! எற்றைக்கும் இவளே தோழி!


என்னாது, ஆண்டாள் முருகன் மேல பாட்டு பாடி இருக்காளா?

மறந்தும் புறம் தொழா-எல்லாம் கிடையாதா? ha ha ha! நான் ஒன்னும் சொல்லலை! நீங்களே பாருங்க! - இது தமிழ் அர்ச்சனைப் பாடல்!

சுசீலாம்மாவின் குரலில், இதோ:

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி!


பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி!
கன்று குணில்ஆ எறிந்தாய் கழல் போற்றி!


குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின்கையில் "வேல்" போற்றி!

என்றென்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம், இரங்கு ஏல்-ஓர் எம்பாவாய்!!!



இப்போ தெரியுதா? ஏன் "முருகன்" பாசுரம்-ன்னு சொன்னேன்-ன்னு! இது "வேல்" பாசுரம்! :)

யோவ், கண்ணன் கையில் எங்கேய்யா வேல் வந்துச்சு?
இதுக்கு முன்னாடியும், முதல் திருப்பாவைப் பாட்டில், "கூர் வேல்" கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன்-ன்னு தான் பாடினா!
ஒரு வேளை கந்த-கோபன் அப்படிங்கறதைத் தான் நந்த-கோபன்-ன்னு பாடிட்டாளோ?:))

இந்தப் பாசுரத்துக்குப் பொருள் சொல்லும் ஆசார்யர்கள், இந்த "வேல்" கட்டம் வந்த போது, என்ன சொல்லுறாங்க-ன்னு பார்க்க குறுகுறு-ன்னு இருக்கு-ல்ல?:) பார்ப்போமா?

போற்றி, வாழி, பல்லாண்டு - இவை ஒரு பொருட்சொற்கள். அடிபோற்றி-தாளால் உலகம் அளந்த அசவு தீரவேணும் என்றபடி.
(வேல்போற்றி) = வெறுங் கையைக் கண்டாலே போற்றி என்னுமவர்கள், வேல்பிடித்த அழகைக் கண்டால் போற்றி என்னாது ஒழிவாரோ?
அடிபோற்றி, திறல்போற்றி, புகழ்போற்றி, கழல்போற்றி, குணம்போற்றி, வேல்போற்றி!


ஏய் முருகா, உனக்கு இளமையான மாமி போன்றவள்....என் தோழி கோதை!
உன் பால் நான் ஒட்டிக்கிட்டு இருக்கேன்னா, அதுக்கு அவ தமிழ் தான் காரணம்!

அவளுக்கு ஆய்ச்சியர்களின் முல்லைப்பூ-ன்னா ரொம்ப உசுரு!
அப்படியே மருக்கொழுந்தும் செண்பகமும்!
மாலை கட்டி அழகு பாக்கவே பொறந்தவ அவ!
கொத்து கொத்தா அவளுக்குப் பூ குடுக்கலாமா, நாம ரெண்டு பேரும்?

அவளுக்கு நல்ல பரிசா வாங்கிட்டு வாடா.....கொண்டு போய் குடுத்துட்டு, நம்ம ரெண்டு பேரும் ஒன்னா வாழ்த்திட்டு வரலாம்...
எனக்கு வாங்கிக் குடுத்தியே.......வைரம் பதித்த வாட்ச் - அதே போல, ஆனா உன் பேர் செதுக்காத வாட்ச் ஒன்னு அவளுக்கும் குடுப்போமா?

Happy Birthday Kothai - From, me & murugan!
அடிபோற்றி, திறல்போற்றி, புகழ்போற்றி, கழல்போற்றி, குணம்போற்றி, வேல்போற்றி!

12 comments:

sury siva August 02, 2011 11:38 PM  

சுசீலா அம்மாவோட பாட்டு சூபர் .


சுப்பு ரத்தினம்.

kaialavuman August 03, 2011 2:51 AM  

//இதுக்கு முன்னாடியும், முதல் திருப்பாவைப் பாட்டில், "கூர் வேல்" கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன்-ன்னு தான் பாடினா!
ஒரு வேளை கந்த-கோபன் அப்படிங்கறதைத் தான் நந்த-கோபன்-ன்னு பாடிட்டாளோ?:))//

”குமரன்” -தான் பதில் தர வேண்டும். அவரை இன்னும் காணுமே!!!

குமரன் (Kumaran) August 03, 2011 7:39 AM  

இல்லை இரவி. பானுகோபன்னு சொல்ல வந்து தப்பித் தவறி நந்தகோபன்னு சொல்லிட்டா. :-)

வேங்கட ஸ்ரீனிவாசன் ஐயா. இதுவும் குணானுபவத்தில் தான் சேர்த்தி.

Kannabiran, Ravi Shankar (KRS) August 03, 2011 9:45 AM  

@குமரன்

பானுபோபனா? சூரன் புள்ள! அவன் பேரு என்ன? அவன் எங்கிருந்து பாட்டுக்குள்ள வந்தான்?
பானுகோபன் குமரன் நமக்கே பறை தருவான்-ன்னா இராகவன் கூட ஒத்துக்க மாட்டானே! :)

குமரன் (Kumaran) August 03, 2011 6:42 PM  

அப்ப கந்தன்கிட்ட கோபிச்சுக்கிட்ட கந்த-கோபன் யாரு? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) August 03, 2011 8:54 PM  

கந்தன் கிட்ட கோபிச்சிக்க முடியுமா?
கோபத்துக்கு கிட்டயே எப்படிக் கோபிக்கிறது? கோவணப் பய! :)

கந்த கோபன் = கந்த+கோபு+அன்!

யாரந்த கோபு-ன்னு கேக்காதீங்க! செல்லப் பேராயிரத்தில் அதுவும் ஒன்னு! ஆனா யாரு-ன்னு சொல்ல மாட்டேன்!:)

Kannabiran, Ravi Shankar (KRS) August 03, 2011 8:58 PM  

முருகா...
கோழிக் கொடி ஏந்தும் கோக்கோ கோலா-ன்னு உன்னய என்னிக்கிச் சொன்னேனோ...
அன்னியில் இருந்து, கந்த கோபன், பலமுருகன், லூசுதேவன், அது இது-ன்னு செல்லப் பேராக் கொட்டுது!:)

குமரன் (Kumaran) August 03, 2011 9:00 PM  

சேந்தனுக்குக் கோவம் வரும் போதெல்லாம் ஒரு முறை முறைச்சுக்கிட்டு கைகளை இடுப்புல வச்சிக்கிட்டு விரைப்பா நிப்பான். நீங்க சொல்ற கோவணப்பய தான் நினைவுக்கு வருவான் ஒவ்வொரு தடவையும். :-)

Pavithra Srinivasan August 04, 2011 3:53 AM  

Dear Mr.ravi/kannabiran

முதல் பாசுரத்தில் ஆண்டாள் " கூர் வேல் கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன்-".அதாவது நந்தா கோபாலன் சிற்றரசர் ஆகையால் கையில் வேல் வைத்துக்கொண்டிருப்பார்.தந்தையின் கையில் உள்ள ஆயுதத்தை மகனும் உபயோகிக்கலாம் என்பது நம் புராணம் .அதைத்தான் இங்கு நம் சூடிக் கொடுத்த சுடர் கோடி குறிபிடுகிறாள்

adithyasaravana August 04, 2011 8:32 AM  

நேத்து த்தான் போய் திருவல்லிக்கேணியில இந்த பாட்டை பாடிட்டு வந்தேன்.. முருகனுக்கும் சேர்ந்து பாடினதா நெனச்சுக்கறேன்.. ( தங்கை டெலிவரி சென்னையில்- ஒரு நாள் பயணம்) ..வேல் போற்றி., அவன் தாள் போற்றி..

சித்ரவேல் - சித்திரன் August 06, 2011 6:13 AM  

சுசீலா அம்மாவோட பாட்டு ரொம்ப நல்லா இருந்துச்சி...மிக்க நன்றி

spiritual growth May 11, 2022 2:30 PM  

Thanks for writing this blog, You may also like the Murugan vel

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP