முருகா இங்கே வா வா!
"அம்மா இங்கே வா வா! ஆசை முத்தம் தா தா"-ன்னு எப்பவோ வெட்கத்தை விட்டுக் கத்தி பாடியிருக்கோம்-ல்ல? :)
அது போல கவிநயா அக்கா ஒரு பாட்டு எழுதி இருக்காங்க! அதை இன்னிக்கி முருகனருளில் போடுறேன்!
இந்தப் பாட்டை யாரு கிட்ட பாடப் போறீக? எந்தக் குழந்தை? = கந்தக் குழந்தை! :)
சின்னச் சின்ன முருகா
சிங்கார முருகா
வண்ண எழில் முருகா வாடா
வந்து அன்பு முத்தம் ஒன்றெனக்கு தாடா
செல்லச் செல்ல முருகா
செந் தமிழின் தலைவா
பண்ணில் உன்னைப் பாடுகிறேன் வாடா
வந்து பாச முத்தம் ஒன்றெனக்கு தாடா
சின்னச் சிலம் பொலிக்க
‘கல்கல்’ என்று சிரிக்க
துள்ளித் துள்ளி என்னிடத்தில் வாடா
வந்து வெல்ல முத்தம் ஒன்றெனக்கு தாடா
எண்ண மெல்லாம் இனிக்க
உள்ள மெல்லாம் களிக்க
வண்ணமயில் ஏறி இங்கு வாடா
வந்து வாய் மணக்க ஆசை முத்தம் தாடா
9 comments:
இந்த பாட்டை எப்ப பாடினாங்க !!
ரொம்ப நல்லா இருக்கே ! நான் பாடுறேன் அப்படின்னு
எங்க வீட்டுக்காரி, அதுதான், கிழவி மீனாட்சி பாட்டி
இங்ஙன பாடுது.
எல்லோரும் வந்து கேளுங்க.
http://kandhanaithuthi.blogspot.com
சுப்பு ரத்தினம்.
டிசம்பர் சங்கீத சீஸன் இல்லையா !
சுப்பு தாத்தா கான சபாவிலே ஒரு 50 வருஷத்திற்கு முன்னாடி பிரபலமான
வித்வான்கள் எல்லாரும் தினமும் ஒருவரா வந்து பாடுகிறார்கள்.
அது இங்கே ;
http://movieraghas.blogspot.com
//"அம்மா இங்கே வா வா! ஆசை முத்தம் தா தா"-ன்னு எப்பவோ வெட்கத்தை விட்டுக் கத்தி பாடியிருக்கோம்-ல்ல? :)//
ஹாஹா :) இப்ப மட்டும் என்ன வெட்கம்? அம்மாகிட்ட எப்பவுமே வெட்கம் தேவையில்லை குழந்தாய்! அது போல முருகக் குழந்தைகிட்ட முத்தம் கேட்பதில் எனக்கும் வெட்கமில்லை :)
பாடலை இட்டமைக்கு நன்றி கண்ணா.
//இந்த பாட்டை எப்ப பாடினாங்க !!//
பாடலை தாத்தா. எழுதினேன், அவ்ளோதான் :)
பாட்டியோட நீங்களும் சேர்ந்து பாடியிருப்பது அருமையாக இருக்கு. மிக்க நன்றி.
அருமை!
// அருணையடி said...
அருமை!//
மிக்க நன்றி.
கசக்குமா
அதுவும் மழலையின், முருகனின்
தர சொல்லுங்கள்
பெற காத்திருக்கிறோம்
உங்களுக்கு மட்டும் என்றால்
ஒத்துக் கொள்ள முடியாது'
எங்களையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள் :)))
//எங்களையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள் :)))//
அன்போடு யார் கேட்டாலும் குழந்தை தந்து விடும் :) அதுவும் கருணை மிகுந்த கந்தக் குழந்தையல்லவா? அள்ளி அள்ளித் தருவான் :)
வருகைக்கு நன்றி திகழ்.
இந்தப் பதிவில் இருக்கும் படம் பற்றி:
அருணாசலம் படத்திற்காக ஒரு முருகன் படம் தேவைப்பட்டது. கைகூப்பி வணங்கும் பக்தர்களுக்குப் பொதுவாகத் தெய்வங்கள் அபய ஹஸ்தம் காட்டும் படங்களே நாம் நிறையப் பார்த்திருக்கிறோம். இதில் பதில் வணக்கம் போலக் கடவுளும் கை கூப்புவது ரஜினிக்குப் பிடித்துப் போனது. கொஞ்சம் உற்றுப் பார்த்தீர்களானால் இந்தப் படத்தை அருணாசலம் படத்தில் நீங்கள் பார்க்கலாம்.
முருகன் ஆசை முத்தம் தருவான் என்றால் எனக்கு இரு கன்னங்கள் போதாது.
கவிநயா, அம்பாளுக்கு வேறொரு வலைப்பூவில் பாமாலை, இங்கே அவர்தம் புதல்வரிடம் ஆசை முத்தம். ம்ம்ம் நடத்துங்கள், நடத்துங்கள்! இன்னும் மிச்சமிருப்பது விநாயகரும் சிவனும்தான். அவர்களையும் பாடுங்கள். ஒட்டு மொத்தக் குடும்பத்திடமும் நல்ல பெயர் வாங்குங்கள்!
தகவலுக்கு நன்றி கோபி :)
//இன்னும் மிச்சமிருப்பது விநாயகரும் சிவனும்தான். அவர்களையும் பாடுங்கள். ஒட்டு மொத்தக் குடும்பத்திடமும் நல்ல பெயர் வாங்குங்கள்!//
ஹாஹா :) ஆமா... நானும் முயற்சி செய்துகிட்டுதான் இருக்கேன் :)
Post a Comment