கந்தன் வருவான்
கந்த சஷ்டித் திருநாள் வாழ்த்துகள்!
கற்றுக் கொண்ட பாடமெல்லாம் மறந்து போகுது
கந்தா உந்தன் அழகில் சிந்தை கிறங்கிப் போகுது
பச்சை மயில் கண்டால் மனசு மயங்கிப் போகுது, அதில்
பாலவேலன் பவனி வரும் காட்சி தோணுது
(கற்று)
ஆண்டிக் கோலம் கொண்டாலும் அழகு கொஞ்சுமே, எந்த
அணிகலனும் இல்லாமலே மதனை விஞ்சுமே
ஆறுமுக விழிகளிலே கருணை பொங்குமே, அவனை
அண்டித் தொழும் பக்தருக்கு அருளைப் பொழியுமே
(கற்று)
மாம்பழத்தைத் தோற்று வந்தான் மக்களுக்கெனவே
பழனி மலை இருந்து நமக்கு அருள் புரிந்திடவே
பாசமுடன் அழைத்து விட்டால் ஓடி வருவான், கந்தன்
பச்சை மயில் மீதில் ஏறிப் பறந்து வருவான்
(கற்று)
--கவிநயா
2 comments:
முருகா சரணம்...
முருகா சரணம்...
முருகா சரணம்...
பாடல்கள் அருமை ... கந்தனுக்கு அரோகரா... முருகன் அருள் பெற இதையும் கிளிக்குங்க.
Post a Comment