மயில் மீதில் வருவாயே முருகா!
மயில் மீதில் வருவாயே முருகா
மனமார அழைக்கின்றேன், இரங்காயோ குமரா?
(மயில் மீதில்)
சிலையாக ஆனாயோ முருகா
மலைதோறும் மயிலோடும் வேலோடும் அமர்ந்தமர்ந்து
(சிலையாக)
வினை தீர்க்க வருவாயே முருகா, என்
வினை தீர்க்க வருவாயே முருகா, பழ
வினை தீர்க்க வருவாயே முருகா
தாய் தந்த வேலோடு கணங் கூடச் சுணங்காமல்
(வினை தீர்க்க)
தேவர் குறை தீர்க்க விரைந்து வந்தாயே
சூரன் உயிர் மாய்க்க வீறு கொண்டாயே
அருணகிரிக்கு ஒரு வாழ்வு தந்தாயே
ஔவைப் பாட்டிக்கு அருள் புரிந்தாயே
(மயில் மீதில்)
தந்தைக் குபதேசம் செய்தவன் நீயே
தாயின் வேல்தாங்கப் பிறந்தவன் நீயே
தமிழின் தாலாட்டில் வளர்ந்தவன் நீயே
தரணி யெங்கும்புகழ் சிறந்தவன் நீயே
(மயில் மீதில்)
--கவிநயா
1 comments:
பாடல் அருமை ... குரல் இனிமை...
Post a Comment