Thursday, July 12, 2012

ஆறுமுகத்தரசே! யார் உந்தனைப் போல் ஆதரிப்பவர்?!



யார் உந்தனைப் போல் ஆதரிப்பவர்
ஆறுமுகத்தரசே (யார்)


பார் புகழும் பழனி மலை மேவிய
பரமனே திவ்ய பரஞ்சுடரே (யார்)


அல்லல் செய்யும் என் வினையை தீர்த்து
அன்பு கொண்டு என்னை வந்து காத்து
பொல்லா சூரன் உடலை வெடித்து
புரம் எரித்தவன் திருமதலையாய் உதித்து (யார்)




இந்தப் பாடலின் சரணத்தைக் கேட்கும் போது கொஞ்சம் வியப்பாக இருக்கிறது. புரம் எரித்தவனான சிவபெருமானின் திருமதலையாக உதித்து என்பதைத் தான் முதலில் சொல்லி, பின்னர் சூரனை வென்றதை சொல்லி, பின்னர் வினை தீர்த்து அன்புடன் காப்பதைச் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். இந்தப் பாடலில் அது தலைகீழாக வருகிறது. என்ன காரணமோ?! :-)

13 comments:

பார்வதி இராமச்சந்திரன். July 12, 2012 9:46 PM  

திருமுருகனின் புகழ்பாடும் மிக அருமையான பாடலை, மீண்டும் படிக்கத் தந்தமைக்கும், தமிழ்த் திரைப்பட உலகின் முதல் பின்னணிப்பாடகியான, பி.ஏ. பெரியநாயகியின் கணீர்க்குரலில், ஸ்ரீ வள்ளி திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலைப் பார்க்கத் தந்தமைக்கும் மிக்க நன்றி.

kaialavuman July 13, 2012 4:17 AM  

முதலிலேயே (திரி)புரத்தை எரித்ததையும் சூரனை வதைத்ததையும் கூறினால் அவனை நாடி வரும் புது பக்தர்கள் பயந்து விடக் கூடாது என்பதற்காகவும், அவன் அருளை (முருகனருளை என்றால் இன்னும் பொருந்தும் அல்லவா?) முதன்மைப் படுத்தவும் அவ்வாறு கூறியிருக்கலாம்.

Lalitha Mittal July 13, 2012 8:35 AM  

old is gold!

ஆறுதலையான் பாட்டைக் கேட்கும்போது மனத்துக்கு ஆறுதல்!

தலைகீழ்,தலைமேல் என்றெல்லாம் அலசிப்பார்க்கத் தோணலை!

குமரன் (Kumaran) July 13, 2012 10:28 AM  

பாடியவர் பி.ஏ. பெரியநாயகி என்ற தகவல் முக்கியமானது. என் மாமனார் யூட்யூபில் அவரது பாடல்களைத் தேடிக் கேட்பதைக் கவனித்திருக்கிறேன். சொன்னால் இந்தப் பாடலையும் கேட்பார் என்று நினைக்கிறேன்.

நன்றி பார்வதியம்மா.

குமரன் (Kumaran) July 13, 2012 10:29 AM  

நன்கு சொன்னீர்கள் வெங்கட ஸ்ரீநிவாசன். :-)

நன்றி.

குமரன் (Kumaran) July 13, 2012 10:30 AM  

குணானுபவத்தில் பலவகைகள் லலிதாம்மா. முழுக்கச் சுவைப்பது ஒரு வகை. ஒவ்வொரு சொல்லாக அலசிச் சுவைப்பது இன்னொரு வகை. :-)

Kavinaya July 14, 2012 6:33 PM  

பாடல் ரொம்ப அழகு. நடனமும் :) நன்றி குமரன்.

குமரன் (Kumaran) July 14, 2012 9:59 PM  

நடனத்தைப் பார்க்கும் போது உங்களைத் தான் நினைத்துக் கொண்டேன் அக்கா. :-)

அபிநயமெல்லாம் ரொம்பத் தெளிவா இருக்கு; உங்களுக்கும் பிடிக்கும்ன்னு தெரியும். :-)

sury siva July 17, 2012 10:21 PM  

பாடல் ரொம்ப அழகு. நடனமும் அழகு.
pattudaitha thalaivan
குமரன் athai vida azhaku.

subbu rathinam.

குமரன் (Kumaran) July 17, 2012 11:40 PM  

நன்றி ஐயா.

VSK July 24, 2012 2:51 PM  

துன்பம் வரும்போதுதான் ஆண்டவனை நினைக்கிறோம்.
"ஆண்டவா காப்பாத்து!" எனப் பொதுவாகக் கூவி இவர் அழைத்ததும் உடனே குரல் கொடுப்பவன் முருகன்!
அப்படி அன்பு கொண்டு வந்து இவரது வினையைத் தீர்த்து, இவரைக் காத்த பின்னரே வந்தவன் யார்? எனத் தேடத் தோன்றுகிறது இவருக்கு!
அட! அவனா? மயில் மேல வந்தானே, அவன்தானே! அவன்தான் அந்தப் பொல்லாச் சூரனின் உடலை இரண்டாகப் பிளந்து வெடிக்கச் செய்தவன் எனத் தெரிகிறது!
இன்னும் தேடல் தொடர, புரம் எரித்தவன் திருமதலையாய் வந்தவனே இவன் எனவும் புரிகிறது!

வினை தீர்ந்ததும் அவனை மறந்துவிட்டு, மற்ற வேலைகளைக் கவனிக்கச் செல்லாமல், தேடல் அங்கிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்பதை மறைமுகமாக உணர்த்தவென இப்படி எழுதியிருப்பாரோ?

யானறியேன் பராபரமே!

முருகனருள் முன்னிற்கும்!
.

குமரன் (Kumaran) July 24, 2012 8:18 PM  

நல்ல விளக்கம் ஐயா. இதை இதைத் தான் எதிர்பார்த்தேன். :-)

VSK July 25, 2012 12:07 PM  

இதுவும் 'நிமலர் அருளே'! :)) முமு.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP