காவலுக்கு வேலுண்டு! ஆடலுக்கு மயிலுண்டு!
அன்பர்களுக்கு இனிய தைப்பூச நன்னாள் வாழ்த்துக்கள்! அருட்பெருஞ் சோதி, தனிப்பெருங் கருணை!!
* முருகன் தோன்றிய நாள் = வைகாசி விசாகம்
* அறுவரும் ஒருவர் ஆன நாள் = கார்த்திகையில் கார்த்திகை
* அன்னையிடம் வேல் வாங்கிய நாள் = தைப்பூசம்
* அசுரரை அழித்தாட்கொண்ட நாள் = ஐப்பசியில் சஷ்டி
* வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் = பங்குனி உத்திரம்
இப்படி...
அன்னையிடம் வேல் வாங்கி, முதன் முதலாக, திருக்கையில் வேல் ஏந்திய நாளே = தைப்பூசம்!
இன்றைய பாடல் = சீர்காழி சினிமாப் பாடல்! கேட்டுக் கொண்டே வாசியுங்கள்!
மனிதனும் தெய்வமாகலாம் என்ற சிவாஜி-செளகார் ஜானகி படம்! பல இனிய முருகன் பாடல்கள் இந்தப் படத்தில்...
இன்பத் தமிழ்க் குமரா, வெற்றிவேல் வெல்லுமடா போன்ற பாடல்கள்!
ஆனால் சீர்காழி பாடிய இந்தப் பாடல், Hit பாடல்! - kaavalukku vel undu, aadalukku mayil undu!
காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு
கோவிலுக்கு பொருளென்னடா - குமரா
நீயிருக்கும் இடம் தானடா!
(காவலுக்கு)
நதிகளிலும் மலர்களிலும் நடந்துவரும் தென்றலிலும்
உன்முகம் கண்டேனடா - எங்கும்
சண்முகம் நின்றானடா!
(காவலுக்கு)
ஓம் முருகா என்றவுடன் உருகுதடா உள்ளமெல்லாம்
ஒருகணம் சொன்னேனடா - அங்கே
சரவணன் வந்தானடா!
(காவலுக்கு)
தெய்வயாணை தேடிவந்தாளே விழி வண்டோடு
கந்தனுன்னைக் காண வந்தாளோ அருள் கண்ணோடு
பக்தனென்னைப் பார்க்க வந்தாளோ
(காவலுக்கு)
ஆடுவதும் தொட்டிலடா அன்புமகன் கட்டிலடா
பாடுவது வள்ளி அல்லடா - என் கந்தையா
ஏழையுடன் பள்ளி கொள்ளடா!
(காவலுக்கு)
திருப்பாதம் நான் தாங்கத் தாலேலோ
புவியாவும் நீ தாங்கத் தாலேலோ
கந்தைய்யா வேலையா தாலேலோ
தங்கையா முருகையா தாலேலோ
............நீ தாலேலோ
படம்: மனிதனும் தெய்வமாகலாம்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
வரிகள்: கண்ணதாசன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
5 comments:
மிக அழகான பாடலும் வரிகளும். நன்றி கண்ணா.
என்ன சொல்றதுன்னே தெரியலை!முருகா!!!
உங்க வலைப்பூ பார்த்ததுக்கு பிறகு நிறைய படிக்க ஆரமிச்சிருக்கேன். உங்க கிட்ட ஒரு உதவி கேட்கணும். எனக்கு குருந்தொகை படிக்கணும் னு இருக்கு ரவி. எந்த உரை எளிமையா இருக்கும் னு சொன்னீங்க னா ரொம்ப உதவியா இருக்கும். நன்றி
Shruthi
முருகன் தோன்றிய மாதம் - ஆவணி, நட்சத்திரம் - பூசம் ஒன்றாம் கால், தினம் - திங்கள் கிழமை.
தகவலுக்கு "போகர் சித்தர் பாடலை தேடுக".
ஐயா,
முருகன் 'மால் மருகன்' என்று கூறப்படுகிறானே, அப்படியானால் யார் திருமாலின் மகள்? இதற்குக் கதை ஏதும் உண்டா?
Post a Comment