Monday, January 16, 2012

திருச்செந்தூர் பிள்ளைத்தமிழில் @nchokkan பிறந்தநாள்!

முருகா, நாளும் வலையில் நற்றமிழ் பரப்பும் நா.சொக்கனுக்கு (@nchokkan) இன்று பிறந்தநாள்! (Jan-17-2012)

இன்னிக்கு நீயும் பிறந்தநாள் குழந்தையாய் மாறித் தவழ்ந்து வாடா:)
உன்னை வழக்கம் போல் கொஞ்சி...Side Gap-இல் சொக்கனுக்கும் பிறந்தநாள் வாழ்த்தை, நாம ரெண்டு பேரும் சேர்ந்து சொல்லீறலாமா?:)

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொக்கரே! 
நாளும் நற்றமிழ் போல், நலஞ் சூழ வாழி! - From Me & My Murugan Guy:)

இதோ..."சொக்கன்" என்று வரும் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்!



பிறந்த (முருகக்) குழந்தையைக் கொஞ்சுதல் 
ஆசிரியர் - பகழிக் கூத்தர்!  நூல் - திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்



தொழுதும் துதித்தும் துயர் ஆற்றிச்
சுரருக்கு இறையும் சுரரும் உடன்
சூழ்ந்த கடம்பா டவியில் உறை
சொக்கக் கடவுள் தனைமூன்று

முருகா, உன்னைத் தொழுது (கையால்) + துதித்து (வாயால்), துயர் ஆற்றிக் கொள்ளலாம்!
அமரர்க்கு இறைவனான நீ, அந்த அமரர்களுடன் சேர்ந்து இருக்கே! எங்கே? கடம்படாவி என்னும் கடம்ப வனமான மதுரையில்!
அங்கு....சொக்கன், சொக்கன் -ன்னு இருக்கிறாரே, உன்னோட அப்பா...

பொழுதும் பரவி எழுத்துச்சொற்
போலப் பொருளும் புகறி எனப்
புகலும் ஆறஞ்சு இரட்டி திணைப்
பொருட்சூத் திரத்தின் பொருள்மயங்கா(து)

அந்தச் சொக்கனை, நாளும் போற்றினோம்...
எழுத்து-சொல்-பொருள் என்று தமிழ் இலக்கணம் வகுத்தாரு அந்தச் சொக்கன் (எ) இறையனார்!
தானும் ஒரு புலவராகத் தமிழ்ச் சங்கத்தில் அமர்ந்து, "இறையனார் அகப்பொருள்" எழுதினாரு!
மொத்தம் ஆறு * அஞ்சு * இரட்டி = 60 பாட்டு! (இந்த நா.சொக்கனோ 365 பாட்டு:))))))))))

எழுதும் பனுவற் பரணன் முதல்
ஏழேழ் பெருமைக் கவிப்புலவர்
இதயங் களிக்க விருப்பமுடன்
இறையோன் பொருட்குப் பொருள்விரித்து

அந்தச் சொக்கன் எழுதிய இறையனார் அகப்பொருளை முதலாக வைத்தே...பொருள் மயங்காது...பரணன் முதலிய 49 தமிழ்ப் புலவர்கள், சங்கத்தில் பாடல் எழுதுறாங்க!
அந்தப் புலவர்களோடு, நீயும் சேர்ந்து கொண்டாயே முருகா!
சங்கத்தில் நீயும் தமிழ்நூல் விரித்து, இதயம் களித்து, சொக்கன் நூலுக்கு விளக்கஞ் சொன்னாயே!

முழுதும் பகர்ந்த கனிவாயான்
முருகா முத்தம் தருகவே
மொழியுஞ் சமயம் அனைத்தினுக்கும்
முதல்வா முத்தம் தருகவே.

* இறையனார் அகப்பொருளை முழுதும் விரித்துச் சொன்ன கனிவாயா! என் மேல் கனிவாயா? - முருகா முத்தம் தருகவே!
* பல நெறிகளை மொழியும் பல சமயங்களுக்கும் கொள்முதலான முதல்வா, முருகா முத்தம் தருகவே!

என் ஆருயிர்ப் பொற்க்கீ, முத்தம் தருகவே!:)

உன்னைச் சைட் அடிக்கத் தான், திருப்போரூர்-க்கு வந்துக்கிட்டே இருக்கேன்! 
காரில் கூட பதிவு எழுத வைக்கும் படவா, பிச்சிருவேன் பிச்சி:) - இப்படிக்கு, உன் பிச்சி


பகழிக் கூத்தர், பிறப்பால் வைணவர்! ஆனால் முருகன் பால் மாளாத காதல் கொண்டவர்!
அவரைத் திருச்செந்தூரில் சைவப் பெருமக்களான கோயில் பூசாரிகள் தடுத்தாலும், அவரும் முருகனைச் சேவித்தார் - எப்படி? - கதை இங்கே இருக்கு!

5 comments:

pvr January 16, 2012 10:23 PM  

அழகு.

sury siva January 19, 2012 10:19 AM  

// உன்னைச் சைட் அடிக்கத் தான், திருப்போரூர்-க்கு வந்துக்கிட்டே இருக்கேன்!
காரில் கூட பதிவு எழுத வைக்கும் படவா, பிச்சிருவேன் பிச்சி:) - இப்படிக்கு, உன் பிச்சி//

அந்தக்காலத்திலேந்து நான் அடிக்காத ஸைட்டா நீங்கள் அடிக்கப்போகிறீர்கள் ?

போங்க போங்க...போனவங்க எல்லாமே அவங்க காலடிலே விழுந்து கிடக்காக.

சுப்பு தாத்தா.

இராஜராஜேஸ்வரி January 20, 2012 9:10 PM  

இறையனார் அகப்பொருளை முழுதும் விரித்துச் சொன்ன கனிவாயா! என் மேல் கனிவாயா?

கனிந்து அழகிய பகிர்வு.. பாராட்டுக்கள்..

Anonymous January 26, 2012 8:28 AM  

neengale muruganai pola alagaka irukkireerekal iyya sorry paiya.
valarga nin muruga thondu

Sakthivel
Tiruppur

Bharathi February 28, 2012 3:37 AM  

உங்களின் பதிவுகளை படிக்கும்பொழுது எனக்கு என் மனதோடு பேசுவது போல தோன்றுகிறது! மிக அருமையான எழுத்துக்கள். இறைவனை உள்ளில் காணவைக்கும் எழுத்துக்கள் - எழுதிக்கொண்டே இருங்கள்!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP