ஓம் முருகா
இன்று கிருத்திகை நாள். முருகனுக்கு உகந்த நாள். இந்நாளில் குமரனின் படத்தையும் பார்த்து, மற்றும் அவன் மீது உள்ள ஒரு பாடலையும் கேட்டு அவனை நினைப்போம்.தணிக்கை விஷயமாக சுற்றுப்பயணத்தில் இருப்பதால் விரிவாக எழுத முடியவில்லை
.ராகம்: ஷண்முகப்பிரியா
விருத்தம்
ஓம் முருகா
ஒரு முகம் சலித்தால்
மருவு ஷண்முகத்தில் ஒரு முகம் இரங்குவது இல்லையோ
நின் ஒருசெவி மறுத்தால் பன்னிரு செவியில் ஒருசெவி கேட்பதுமில்லையோ...முருகா
ராகம்:ஸஹாணா
ஒருகரம்(நின்) அடித்தால் பன்னிருகரத்துள் ஒருகரம் அணைப்பதில்லையோ முருகா
ஓம் முருகாவென நான் ஓலமிட்டழைக்க ஓடிவந்து அருள்புரிந்தவனே...முருகா
ராகம் :-ஹம்ஸநாதம்
ஓராறு முகமும பன்னிருகையும் ஓங்காரமாய் வந்த குஹனே
திருத்தணி மணிவிளக்கே முருகா நான் ஓலமிட்டழைக்க
நீ ஏன் எனாதிருக்க ஓஹோ ஈது என்ன சோதனையோ...முருகா
-
10 comments:
முன்னம் ஓடிவந்து அருள் புரிந்தவன் இன்று வாராமலிருப்பதும் அவன் கருணையே!!
பாடல் நன்றாக இருக்கிறது.
நல்ல பாடல்...நன்றி திரச.
சக்திவேல் முருகனுக்கு அரோகரா....
//////நீ ஏன் எனாதிருக்க ஓஹோ ஈது என்ன சோதனையோ...முருகா/////
வருவான்! தன் அடியார்களுக்கு வராமல் இருப்பவனில்லை அவன்!
பாடல் நன்றாக உள்ளது. தி.ச.ரா அவர்களே!
//ஒரு கரம் அடித்தால் பன்னிரு கரத்துள் ஒருகரம் அணைப்பதில்லையோ//
சஹானா ராகத்தில் பாடினாலே உருகாத உள்ளமும் உருகும்! முருகாத மனமும் முருகா எனாத மனமும் முருகா என்னும்!
பாட்டு நல்லாருக்கு. மனமுருகி அழைத்தால் இன்றில்லா விட்டாலும் என்றேனும் ஒருநாள் வந்தே தீருவான்தானே?
கார்த்திகை பாலனுக்கு அரோகரா!
முழுக்க முழுக்க விருத்தமாகவே அமைந்தது போல் ஒரு தோற்றம். இராக தாளங்கள் தெரியாததால் அப்படி தோன்றுகிறது என்று நினைக்கிறேன்.
பாடலில் பொருள் மிக நன்றாக இருந்தது தி.ரா.ச. நன்றிகள்.
விருத்தம் பாடுவதில் அருணா சாய்ராமுக்கு நிகர் அவர் தான். அதுவும் முருகன் பாடல் என்றால் தனி குழைவு வந்து விடுகிறது, பாடுபவருக்கும், கேட்பவருக்கும்.
கந்தன் கை வேல் காக்கட்டும்.
ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.
"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"
http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html
அன்புடன்,
விஜய்
கோவை
அன்பர்களே,
கீழ்க்கண்ட வலைத்தளம் முருகனுக்காக நிர்மாணிக்கப்பட்டது. கந்தர் ஷஷ்டி கவசத்தின் ஆங்கிலப்பதிவும் அதன் ஆங்கில உரையும் இருக்கின்றன. கச்சியப்ப சிவாச்சாரியாரின் தமிழ் கந்தபுராணத்தின் ஆங்கிலச் சுருக்கம், அருணகிரியார் முதல் சில முருகனடியார்கள் வரலாறு, பெரிய மருது சேர்வைக்காரரின் குன்றக்குடி திருப்பணி போன்ற விரிவான விரிவான கட்டுரைகள் படங்களுடன் இருக்கின்றன.
முருகனடியார்களாகிய நீங்கள் அன்புடன் வரவேற்கப்படுகிறீர்கள்.
தங்கள் வலைப்பக்கத்திற்கு சுட்டி http://www.skandaweb.com தந்ததில் மிக்க நன்றி ஜேபி ஐயா. தங்களின் மற்ற வலைப்பக்கங்களைப் பார்த்திருக்கிறேன். சில கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். மிக்கச் சுவையாக இருக்கின்றன. தொடர்ந்து மற்றவற்றையும் படிக்கிறேன்.
Post a Comment