மனதுக்கு உகந்தது முருகனின் நாமம்

சென்னையிலிருந்து கல்கத்தா செல்லும் பாதையில் 40 கி.மீ தொலைவில் உள்ளது அழகிய சிறுவை கிராமம். சுற்றிலும் வாழைத்தோப்பும் நெல்வயல்களுக்கு நடுவில் இருப்பது சிறுவாபுரி முருகன் கோவில்.வெகுநாட்களாகச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்ற சென்ற ஞாயிறு காலை காரில் மனைவியுடன் கிளம்பிச் சென்று வந்தேன். மிக அழகான கிராமம்,கோவில் சிறியதுதான் இருந்தாலும்சுத்தமாக இருந்தது. .
ஞாயிற்றுகிழமையானதால் கூட்டம் கொஞ்சம் அதிகம்.பக்தர்கள் வரிசையில் நின்று முறையாகத் தரிசனம் செய்தார்கள்.முருகன் நின்ற கோலத்தில் கம்பீரமாக மலர்மாலைகளுடன் அலங்காரமாக காட்சியளித்த அழகைக் காண கண் கோடி வேண்டும்.அருணகிரிநாதர் இந்த தலத்து முருகனின்மேல்நான்கு பாடல் பாடியுள்ளார்.
ஞாயிற்றுகிழமையானதால் கூட்டம் கொஞ்சம் அதிகம்.பக்தர்கள் வரிசையில் நின்று முறையாகத் தரிசனம் செய்தார்கள்.முருகன் நின்ற கோலத்தில் கம்பீரமாக மலர்மாலைகளுடன் அலங்காரமாக காட்சியளித்த அழகைக் காண கண் கோடி வேண்டும்.அருணகிரிநாதர் இந்த தலத்து முருகனின்மேல்நான்கு பாடல் பாடியுள்ளார்.
சிறுவாபுரிக்கு மிக அருகில் (3 கி மி) தொலைவில் ஆண்டார்குப்பம் என்ற ஊர் உள்ளது. இங்கும் ஒரு முருகன் கோயில் உள்ளது.
கோவிலும் சுற்றுப்புறமும் சுத்தமாக உள்ளது. நின்ற திருக்கோலத்தில் வள்ளி தெய்வயாணையுடன் அருள்புரிகிறார்.சென்னயில் உள்ள முருகனடியார்கள் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டியதலங்கள் .
முருகனின் கோலத்தையும் அழகையும் பார்த்தவுடன் இந்தப் பாடல்தான் மனத்தை நெகிழச்செய்தது.
ராகம்: சிந்துபைரவி தாளம்: ஆதி
பல்லவி
மனதுக்குகந்தது முருகன் ரூபம்
மனதுக்குகந்தது முருகன் ரூபம்
மாயயை நீக்குவது அவன் திருநாமம்
அனுபல்லவி
தினமும் காப்பது அவன் கைவேல்
தீரா வினைகளை தீர்க்கும் கதிர் வேல்
சரணம்
எண்ணும் எண்ணமெல்லாம் நிறைவேறும்
பண்ணும் பூஜையானால் பலன் உண்டாகும்
மண்ணில் நாம் படும் துயர் தீரும்
மாறா இன்பமும் மனதினில் சேரும்
உள்ளம் உருகி திரு.நெய்வேலி சந்தானகோபாலன் பாடும் பாடலை
நீங்களும் கேட்டுப் பருகஇங்கே கிளிக் செய்து அனுபவியுங்கள்
12 comments:
திராச ஐயா, ஆசையைக் கிளப்புகின்றீர்களே.....முருகா. சிறுவாபுரி முருகன் கோயில் தரிசனம் கிட்டும் நாள் எந்நாளோ!
பாடலைக் கேட்டு மகிழ்கிறேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
திராச,
திருமணம் முடிந்த பின்னர் இந்த அற்புதமான ஆலயத்துக்கு,
எங்கள் சிவா மாமா அழைத்துச் சென்றார்!
வள்ளி மணக்கோல முருகன் அழகோ அழகு! அவனைக் காட்டிலும் நாணுற்று முகம் சிவக்கும் வள்ளி அழகோ அழகு!
பல மணமக்கள் வந்து செல்லும் தலமும் கூட. கார் ஒத்தையடிப் பாதையில் தான் செல்கிறது! வாழைத் தோப்புகளைப் பார்க்கும் போது வயலூர் நினைவுக்கு வருகிறது!
ஆடகம் பயில் கோபுர மாமதில்
ஆலயம் பல வீதியுமே நிறை
வானதென் சிறு வாபுரி மேவிய பெருமாளே!
சிறுவாபுரி வாழ் முருகனின் ஊர், சைவ வைணவ ஒற்றுமைக்கும் ஒரு எடுத்துக்காட்டு. இவ்வூருக்கு ராம, லவ, குசர்களுடன் உள்ள தொடர்பு பற்றி அருணகிரியார் வேறொரு திருப்புகழ்ப் பாட்டில் அழகாக எடுத்துரைப்பார்!
@ஜிரா நமது பார்கவேண்டிய கணக்கில் 2 கோவில்கள் சேர்ந்துவிட்டது.சென்னை வரும்போது சொல்லுங்கள்.கருத்துக்கு நன்றி
@கேஆர்ஸ். பல தகவல்களைத் தந்ததற்கு நன்றி.திரு. வாரியார் ஸ்வாமிகள் கூட சிறுவாபுரி முருகனைப் பாடியுள்ளார்
சிறுவா புரிமேவும் தெய்வசிகா நாதன்
மறுவாழ்வு நல்கும் சுப்ரமணியன்- நறுமாலை சூடும் குமரனடி சூழ்ந்தோர்,
நிதி சூழ்ந்து நீடுலகில்வாழ்வார்நிறைந்து
சிறுவாபுரி முருகன் கொள்ளை அழகு.
நானும் போயிருக்கிறேன்.
ரவியும் நீங்களும் அளித்த தகவல்கள் நல்லதொரு பணி.
நன்றி.
//.....முருகா. சிறுவாபுரி முருகன் கோயில் தரிசனம் கிட்டும் நாள் எந்நாளோ!
//
விரைவிலேயே கிட்டும்!
தன்னை நாடும் அடியார்க்கு காட்சி தர வேலன் தயங்கியதுண்டா என்ன?
நானும் விரைவில் சென்று தரிசிக்க திட்டமிட்டுவிட்டேன்!
கோயில் ரொம்ப அருமையாக இருக்கிறதே....தலைப்பைப் பார்த்து திரசா சரியாகப் பாடலைக் கேட்கவில்லையா என நினைத்தேன். உள்ளே பாடல் சரியாக இருக்கிறது. தலைப்பை மாத்துங்கோ...
மிக நல்ல பாடல் தி.ரா.ச.
மனதிற்கு உகந்தது முருகனின் ரூபம் மட்டுமில்லை; அவன் நாமமும் தான். சரியா கொத்ஸ்? :-)
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அய்யா!
விருத்தம் பாடி விட்டு பாடும் பாடல் அல்லவா?
விருத்தத்தில் மனதை உருக்கி விட்டு, மனதிற்கு உகந்தது முருகன் ரூபம் என விளிக்கும் போது, ஆஹா, அந்த ஆனந்தத்திற்கு அளவேது?
ஆண்டற்குப்பம் பாலசுப்ரமணியர் கோயிலுக்கு பொன்னேரியிலிருந்து எப்படி செல்வது என்பதை கூற முடியுமா?
நன்றி
ஸ்ரீனி
மிக நன்று
மிக அருமையான பதிவு. எங்கள் ஊரை பற்றி இவ்வளவு சிறப்பாக பதிந்ததிற்கு நன்றி.
நன்றி
கிருஷ்ணமூர்த்தி. செ
Post a Comment