003 : தவமிருந்தாலும் கிடைக்காதது
தவமிருந்தாலும் கிடைக்காதது நிம்மதி
தவமிருந்தாலும் கிடைக்காதது நிம்மதி
அதைத் தருவதுதான் முருகா உன் சந்நிதி
சுகம் தரும் உன் சந்நிதி
சுகம் தரும் உன் சந்நிதி
ஆடிடும் மயிலும் சேவலின் கொடியும்
தேடிடும் விழியில் தேன்மழை பொழியும்
ஆடிடும் மயிலும் சேவலின் கொடியும்
தேடிடும் விழியில் தேன்மழை பொழியும்
அருள் வடிவாகி ஆறுதல் தருமே
ஓமெனும் மந்திரம் ஒலித்திடும் சந்நிதி
சுகம் தரும் உன் சந்நிதி
கார்த்திகை ஒளியும் காவடி அழகும்
பார்த்திடும் வேளையில் பலன் வந்து சேரும்
கருணையின் வடிவே நான் காணும் துணையே
அடியவர் தினம் தினம் வணங்கிடும் சந்நிதி
சுகம் தரும் உன் சந்நிதி
பாடியவர் : பி.சுசீலா
இசை : சோமு - காஜா
5 comments:
நன்று. நன்று.
வாழ்க! வளர்க!!
நல்ல எளிய தமிழில் இனிய பாடல்.படமும் ஜோர்.நன்றி சிபி. முருகன் முன்னால் வரும் இடத்தில் நானும் பின்னாலேயே வந்து விடுவேன்.தொடருங்கள் சிறப்புப்பணியை.
நன்றி ஞானவெட்டியான் ஐயா. உங்கள் பாராட்டு எங்களுக்கு ஊக்கம்.
படம் மிக அழகாக இருக்கிறது. சூப்பர். இந்த நல்ல முயற்சியை தொடருங்கள்.
வந்த வினை வருகின்ற வினை கந்தன் என்று சொல்ல கலங்கி நிற்கும்
Post a Comment