Friday, May 27, 2016

ஜிரா பிறந்தநாள்: கட்டபொம்மனின், தெலுங்கு-தமிழ்ப் பாடல்!

முருகனருள் வலைப்பூ அன்பர்களுக்கு வணக்கம்!

தேர்தல் முடிந்த கையோடு, புதிய முதலமைச்சரையும், புதிய எதிர்க்கட்சித் தலைவரை மட்டும் தானா வாழ்த்துவீங்க?
இதோ, இவரை(னை)யும் வாழ்த்துங்கள்:) நானும் முருகனும் கூட வாழ்த்துகிறோம்:)

வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க, எத்தனை குறைகள் எத்தனை பிழைகள், எத்தனை அடியேன் எத்தனை செயினும்..
பெற்றவன் நீ குரு! பொறுப்பது உன் கடன்; பெற்றவள் குறமகள் பெற்றவளாமே!

இன்று May 27!
தோழன் இராகவன் (எ) ஜிரா பிறந்தநாள்  -  Happy Birthday Ragava!
உடல்-உள்ள நலம் வேண்டி..
உங்கள் வாழ்த்து/ஆசி வேண்டிப் பணிகின்றேன்.

தமிழ்ச் சித்தி பெற்று, இராகவன் சிறப்புடன் வாழ்க!
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க!
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க!
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க!
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்!
வாழ்க வாழ்க என் வ(வெ)றுமைகள் நீங்க!



பிறந்தநாள் பரிசாக, இந்த அற்புதமான திரைப்பாடல்!
மயக்கும் + உருக்கும் இசை!
சந்தம் கொஞ்சும் துள்ளல் நடை!
வீரம் துலங்கிடும் சூழலிலும், அன்பு கொஞ்சும் முருகு நலம்!

படம்: வீரபாண்டிய கட்டபொம்மன்
இசை: ஜி. ராமனாதன் (எ) ஜிரா
குரல்: எஸ். வரலட்சுமி
வரி: கவிஞர். கு.மா.பாலசுப்பிரமணியம்

வீரபாண்டியக் கட்டபொம்மன் / வீரபாண்டியக் கட்டபிரம்மா.. தமிழ்/தெலுங்குப் படத்திலிருந்து..
மனம் கனிந்தருள் வேல் முருகா... | பிரபோ கிருபாகர வேல்பு தொர

அது என்ன "வேல்பு" தொர?
தெலுங்கு-தமிழ் வேர்ச்சொல் அறிந்தோர் சொல்லுங்கள்:) பாடலை/ பாடலின் சூழலை, இதோ காணுங்கள்!


வெற்றி வடிவேலனேசக்தி உமை பாலனே!
வீரம் விளைத்த குகனே!
உற்றதொரு பகை வெல்லதோளிலும் நெஞ்சிலும்
ஓங்கிடும் வலிமை அருள்வாய்அருள்வாய்!

மனம் கனிந்தருள் வேல் முருகா! - புள்ளி
மயிலேறும் மால் மருகாமுருகா!
(மனம்)

குறத்தி மணாளாகுணசீலா! - ஞான
குருபரனேசெந்தில் வடி வேலா!
செந்தமிழ்த் தேவாசந்ததம் நீ காவாய்!

வேதனே - ஞான போதனே
சுவாமி நாதனே - எமது வேதனை தீர
(மனம்)

தோகை வள்ளி தனை - நாடி வேங்கை மர
மாகி நின்றாயடா!
வேலெடுத்து விளை - யாடி மா மலையைத்
தூளடித்த முருகா
சூரபத்மன் இரு - கூறு பட் டொழிய
போர் முடித்த குமரா!


அதே பாடலைத் தெலுங்கில், இதோ காணவும்..
தமிழ் முருகன் = தெலுங்குச் செங்கல்வ ராயுடு!
செந்தில் மாமலையுறும் "செங்கல்வராயா"..



அது என்ன "வேல்பு" தொர?

மிரோக்கின வரமுனி "வேல்பு"
"தொர" கொடுக்கு ப்ரோச்சுரா -தியாகராஜரும் பலவிதமாகப் பாடுவார்..

துரை.. தெலுங்கில் "தொர" ஆயிற்று!
ஆனால் துரை= தமிழ்ச் சொல் தானா?

அல்ல!
துரை/ Durer என்பது பிரெஞ்சு மொழிச் சொல்..

இன்னும் கூர்ந்தால், ஜெர்மானிய ஆதிச் சொல்!
ஆங்கிலேயருக்கு முன்பே இந்தியா வந்தது டச்சு, பிரெஞ்சு ஆதிக்கம்; அப்போது தமிழ்நாட்டில் நுழைந்த French சொல், Durer -> துரே -> துரை!

புதிய வெள்ளைக்காரக் கனவான்களை, நம்ம மக்களும் "துரே.. துரை" என்றே புதுச் சொல்லால் "செல்லமா" அழைக்க,
பின்பு வந்த பிரெஞ்சு எதிரிகளான ஆங்கிலேயருக்கும், அந்தப் பிரெஞ்சு "துரை" நாமகரணமே நின்று விட்டது:)

'வேல் முருகா' என்பதை 'வேல்பு தொர' ஆக்கும் தெலுங்கு மொழியாக்க அழகு:)
*மனம் கனிந்தருள் வேல் முருகா
*பிரபோ கிருபாகர வேல்பு தொர
Happy Birthday Ragava! - From "துரை" முருகன் & துரைச்சி வள்ளி!


5 comments:

sury siva May 27, 2016 8:57 AM  

happy birthday

subbu thatha

Kumaran May 27, 2016 10:38 PM  

Happy Birthday Ragavan

G.Ragavan May 28, 2016 12:03 PM  

என்னுடைய அனுமதி இல்லாமல் என்னைப் பற்றிய தகவல்களும் என்னுடைய புகைப்படங்களும் இந்தப் பதிவில் பகிரப்பட்டுள்ளன. இந்தப் பதிவை உடனடியாக நீக்குமாறு முருகனருள் அட்மினைக் கேட்டுக்கொள்கிறேன். நீக்கவில்லையென்றால் blogspotல் புகார் தெரிவிக்க வேண்டியிருக்கும். புரிந்துகொண்டு ஒத்துழையுங்கள்.

நன்றி.

Nanjil Siva January 02, 2020 8:30 AM  

வீரபாண்டியக் கட்டபொம்மன் .. வீரபாண்டியக் கட்டபிரம்மா என்று பெயர்தாங்கி தெலுங்கிலும் வந்து விட்டாரா .... பலே வெள்ளையத்தேவா !!! ஜட்ஜ்மென்ட் கிளிக்.

Nanjil Siva January 02, 2020 8:37 AM  

G Ragavan கமெண்ட் பார்த்து அதிர்ந்தேன் .. மிகப்பெரிய கோபக்காறரா இருப்பாரோ என்று பார்த்தால் பின்பு தான் தெரிகிறது மனிதர் மாக ''குசும்பர்'' என்று. ஹ ஹஹா .. ஜட்ஜ்மென்ட் இங்கு கிளிக்.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP