Monday, April 25, 2011

சாயி பாபாவின் குரலில் முருகன் பாட்டு!

மறைந்த பெருமகனார், "மனிதர்", சத்ய சாயி பாபாவின் இன்னுயிர்,
இறைவனது திருவடி நீழலில் இளைப்பாறட்டும்!

அவரைப் பற்றி, பலரும் பலவும், புகழ்ந்தும் இகழ்ந்தும் பேசினாலும், காணொளியில் நுணுக்கினாலும்....
ஒரே புள்ளி: Sai Baba is "also" a Social Worker! So, let his soul rest in peace!

* "ஸ்வாமி நீலு" என்று கிராமத்துப் பெண்கள் சொல்லும் வறண்ட கிராமக் குடிநீர்
* மாணவர்களிடம் வசூல் செய்யாத "கல்வித் தந்தை"
* நோயாளிகளிடம் வசூல் செய்யாத "மருத்துவத் தந்தை"
* Very few places in India for a free open heart surgery!
* தமிழால் வளர்ந்து தமிழரை அழிப்பது போல், ஆன்மீகத்தால் வளர்ந்து ஆன்மீகத்தை அழிக்கவில்லை!

பெரியவர் இரணியகசிபு: "அஹம் பிரம்மாஸ்மி = நான் கடவுள்!"
பிள்ளைப் பிரகலாதன்: "மனிதன் குற்றங் குறை உடையவனே! அவன் 'பகவான்' அல்லன்! பகவானை அடைபவன்!"

மனிதரை மரணத்திலே இழிவு செய்யாமல்
அவர் ஆன்மா அமைதியுற வேண்டுவோம்!!
சத்ய சாயி பாபா அவர்கட்கு அஞ்சலி!
அவர் குரலில் ஒலிக்கும், முருகன் பாடல்.....இன்று இங்கே! இதோ!



சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சண்முகநாதா சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சண்முகநாதா சுப்ரமண்யம்

சிவ சிவ சிவ சிவ சுப்ரமண்யம்
ஹர ஹர ஹர ஹர சுப்ரமண்யம்
ஹர ஹர சிவ சிவ சுப்ரமண்யம்
சிவ சிவ ஹர ஹர சுப்ரமண்யம்

சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சண்முகநாதா சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சண்முகநாதா சுப்ரமண்யம்

சிவ சரவணபவ சுப்ரமண்யம்
குரு சரவணபவ சுப்ரமண்யம்
குரு சரவண பவ சுப்ரமண்யம்
சிவ சரவண பவ சுப்ரமண்யம்

சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சண்முகநாதா சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சண்முகநாதா சுப்ரமண்யம்

**

நண்பர் இரவிசங்கரின் வேண்டுகோளுக்கிணங்க, அவரது இடுகையை இங்கே இடுகிறேன்.

8 comments:

குமரன் (Kumaran) April 25, 2011 2:22 PM  

உலகெங்கிலும் நடக்கும் சாயி பஜன்களில் தவறாமல் கடைசி பஜனையாக இடம்பெறும் பாடல் இது.

Kannabiran, Ravi Shankar (KRS) April 25, 2011 3:17 PM  

வடமொழியில் இருப்பினும், இந்தப் பாடலின் வேகம் எனக்கு மிகவும் பிடிக்கும் குமரன்! நல்ல கூட்டுப் பாடல் இது! அதான் இந்த நேரத்தில் இடத் தோன்றியது!
அடியேன் சார்பாக என் முருகனருளில் இட்டமைக்கு நன்றி!

குமரன் (Kumaran) April 25, 2011 3:25 PM  

'இறுதி'ப் பாடல் என்ற வகையில் பொருத்தமான பாடல் தான் இது இரவி. உங்கள் மின்னஞ்சலைப் பார்த்துத் தான் சேதி தெரிந்து கொண்டேன். பாடலும் பொருத்தம் என்று தோன்றியதால் கண்கள் நிறைய, இங்கே இட்டேன். நன்றி.

Lalitha Mittal April 26, 2011 10:57 AM  

my most favourite bhajan in baba's voice!thanks a lot!why no baba photo?

சிவமுருகன் April 26, 2011 12:57 PM  

யாவர்க்குமாம் இறைவர்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்க்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைபிடி
யாவர்க்குமாம் ஒரு இன்னுரை தானே!

திருமூலர்

யாவர்க்குமாம் இறந்தோருக்கு ஒருதுளி கண்ணீர்!
சிவமுருகன்

குமரன் (Kumaran) May 06, 2011 9:19 AM  

No specific reason for not putting Baba photo here Amma!

குமரன் (Kumaran) May 06, 2011 9:20 AM  

நன்றி சிவமுருகன்.

Uma Shankari January 19, 2013 4:59 PM  

Enjoyed reading various contents: the meaning of Kandar kavacham, etc, and this concluding piece of music.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP