Monday, April 05, 2010

கமல்-ஸ்ரீதேவி முருகன் பாட்டு! - வடிவேலன் மனசு வச்சான்!

சில பாடல்களில்... கமல்-ஸ்ரீதேவி தனியாத் தெரிவாங்க! ஆனா அந்த Romance-இல் என் முருகன் தெரிவானா? :)
இந்தப் பாட்டைக் கேளுங்க, பதில் உங்களுக்கே தெரிஞ்சிடும்!

இதில் கமலும்-ஸ்ரீதேவியும் ஸ்டைலாகச் சொடுக்கிச் சொடுக்கி ஆடுவது...
எனக்கென்னவோ...
தினைப்புனத்தில் முருகனும்-வள்ளியும் ஆடுவது போலவே இருக்கும்! அப்படித் தான் கற்பனை பண்ணிக்குவேன்! :)



அப்போ சென்னைக்கு வந்த புதுசு; தண்ணிப் பஞ்சம் வேற;
கீழே இருந்து மாடிக்கு, தண்ணிக் குடம் சுமப்பதற்குள், என் bend-u கழண்டுரும்:)
அப்பல்லாம் வானொலிப் பாட்டு தான்,  புள்ளைக்கு உற்சாகம்!

வீட்டில் ஒரு Sharp Tape Recorder;
பள்ளி ஆசிரியர் வாங்கிக் குடுத்தது; அப்பா, காசெட்டில் (TDK 45 , 60  and 90), "உள்ளம் உருகுதைய்யா" தான் முதலில் பதிஞ்சி வைப்பாரு;
எல்லாக் காசெட்டிலும் மொத பாட்டு இதே வச்சா, கோவம் வருமா? வராதா? நீங்களே சொல்லுங்க!:)

சின்னப் புள்ள எனக்கோ, "வடிவேலன் மனசு வைச்சான்" கேட்டதில் இருந்து, அதை Record பண்ண ஆசை! (TMS க்காக மட்டுமில்லை; but for Sridevi also:)))

ஒரு நாள் வானொலியில் ஒலிபரப்பும் போது,
நான் Record+Play Button, சேர்த்து அழுத்தி விட,
அது "உள்ளம் உருகுதையா" மேல் பதிஞ்சி போயிரிச்சி;

அவ்ளோ தான்; அப்பா என்னை விளாசித் தள்ளிட்டாரு;
பாட்டி தான் ஒன்னும் புரியாம..
"வடிவேலன் மனசு வச்சான்" கூட முருகன் பாட்டு தானேடா? எதுக்கு கொழந்தைய அடிக்கற? -ன்னு... அப்பவே, என் "முருக பக்தியை" மெச்சினாங்க:))


தாயில்லாமல் நானில்லை!
எம்.ஜி.ஆர் பாட்டு இல்லீங்க! இது கமலஹாசன் நடித்த படம்!
ஹீரோவான பிறகு, ரஜினி வில்லனாக நடித்த படமும் கூட!

மருத்துவமனையில் இருந்த போது, அருகிலேயே உள்ள வாகினி ஸ்டூடியோவுக்கு, ரஜினி தானே விரும்பிச் சென்று, ஒரு சீனில் சான்ஸ் கேட்டு நடித்த படம்! தேவர் ஃபிலிம்ஸ் படத்தின் மதிப்பு அப்படி!

இளவரசியான ஸ்ரீதேவியை, இசைக் குழுவின் கமல் காதலிக்க... ஸ்ரீதேவியின் அப்பா-சமஸ்தான மகாராஜா, ரவுடி ரஜினியை ஏவி விடுவார்!
ஆனால் ஸ்ரீதேவி தன் உள்ளம் பொங்க அழுது....காதலை வெளிப்படுத்த, ரஜினி மனம் மாறி, வாழ்த்தி விட்டுப் போய் விடுவார்!

இதில் வரும் கமல்-ரஜினி சண்டைக் காட்சிகளில்,
நீண்ட நாள் கழிச்சி, மறுபடியும் இரு தரப்பு ரசிகர்கள்.....நிஜமாலுமே சண்டை போட்டுக் கொண்டார்களாம்! அப்போவெல்லாம் பதிவுலகம் என்பது இல்லை போல! :)

சரி நாம பாட்டுக்கு வருவோம்!
* எப்போதும் உடனிருக்கும் மயிலார் (அவரு பேரு: வடிவேலன்),
* காதலர்கள் களிப்பிலும் உடன் இருக்க...
* ஸ்ரீதேவி பக்குவமா மயிலைக் கொஞ்சி...
* "ஹேய்...யாராச்சும் வெளிய வராங்களா-ன்னு பாத்துக்கோ"-ன்னு சொல்ல...
* மயிலார் தத்தித் தத்தி அழகா நடக்க...
* இதுல மயில் அகவுற சத்தமும் கேட்கும்.....யாராச்சும் இதுவரை கேட்காதவங்க கேட்கலாம்! :)

இதோ...முருகனும் முருகியும், அவனும் அவளுமாய்....
பாட்டின் நடுவில் வரும் மெட்டு...
தத்தாத தானா...... தத்தாத தானா.......
தத்தாத தாந் - தனா தானா!

முன்பெல்லாம் தனியறையில் நானும் இப்படியெல்லாம் பாடிக்கிட்டே ஆடுவேன்! அதில் ஒரு தனிப்பட்ட சுகம்! :))

இதோ பாடல், கேட்டுக் கொண்டே படிங்க!


படம்: தாயில்லாமல் நானில்லை
இசை: சங்கர் கணேஷ்
குரல்: TMS & பி.சுசீலா


வடிவேலன்
மனசு வச்சான், மலர வச்சான், மணக்குது ரோஜாச் செடி!
மாந்தோப்பு ஜோடிக்கிளி! மங்காத தங்கக்கொடி!!

(தத்தாத தானா..
தத்தாத தானா...
தத்தாத தாந் தனா தானா!)

அச்சாரமா ஒண்ணு கொடு, ஆராயிரம் அள்ளிக்கொடு!
இந்த மச்சான் வந்து மாலை இடுவான்!
வருவான் தருவான்! வருவான் தருவான்!

செவ்வத்திப்பூ கன்னத்துக்குள், தேனூறுது என்னத்துக்கு?
சின்னச் சிட்டு உன்னைக் கட்டிப் புடிப்பா
கொடுப்பா...முடிப்பா! கொடுப்பா...முடிப்பா!
(வடிவேலன்)

அன்னக்கொடி சின்ன இடை! அம்மாடியோ என்ன நடை!
அடி கண்ணால் ஏண்டி கட்டி இழுத்த?
சிரிச்சேன்...ரசிச்சேன்! சிரிச்சேன்...ரசிச்சேன்!

இந்நேரமாக் கண்ணுறங்கேன்! என்னென்னமோ கொண்டுவந்தேன்!
அந்தக் கந்தன் வள்ளி இந்தக் கதை தான்!
அதுதான்...இதுதான்! அதுதான்...இதுதான்! :)
(வடிவேலன்)


இது முருகன் பாட்டு தானா? முருகனருளில் போடலாமா?
அதுவும், செவ்வாய்க் கிழமை அதுவுமா?
என் முருகனின் "செவ்"வாய் இனிமைக்குக் கிழமை ஏது? எந்நாளும்.....அவன் அதரம் மதுரம், வதனம் மதுரம்! So,

அந்தக் கந்தன் வள்ளி இந்தக் கதை தான்!
அதுதான்...இதுதான்!
My Darling Boy Muruga! - அதுதான்...இதுதான்! :)

பாட்டு நல்லா இருந்திச்சா? :)
எண்பதுகளில், TMS-சுசீலாம்மா ஜோடி சேர்ந்து பாடுவது....அதுவும் இளைய தலைமுறை கமல்-ஸ்ரீதேவிக்கு என்பது அபூர்வம்! அதில் இது ஒன்னு!

7 comments:

Rajewh April 07, 2010 4:47 AM  

வெற்றிவேல் முருகனுக்கு
அரோகரா! அரோகரா!

இப்போது வரும் புது பாடல்களில் முருகர் வரிகள்
அவ்வளவாக இருப்பதில்லை!
டாம் தூம் என்று குதிக்கிறாங்க!
----------------
அரோகரா! அரோகரா! என்று முருகரே வந்தாலும் சொல்வார்..
அப்படி என்ன இருக்கிறது அரோகரா! என்ற வரியில்!
ஏன் அரோகரா என்று சொல்றாங்க!
ஓ ஆ -- ஓ ஆ -- என ஓலி வருவதால் என்று கருதுகிறேன்.
-----

Rajewh April 07, 2010 5:32 AM  

இது முருகன் பாட்டு தானா?
முருகனருளில் போடலாமா?
செவ்வாய்க் கிழமை அதுவுமா?
என் முருகனின் செவ்வாய் இனிமைக்கு......கிழமை ஏது! எந்நாளும்.....அவன் அதரம் மதுரம், வதனம் மதுரம்!:::))))



இது முருகன் பாட்டு தானா?
பின்னூட்டம் போடலாமா!
புதன் கிழமை அதுவுமா!
என் முருகனின்.புத்தி கூர்மைக்கு .....கிழமை ஏது! எந்நாளும்.....அவன் அதரம் மதுரம், வதனம் மதுரம்!

Kannabiran, Ravi Shankar (KRS) April 12, 2010 10:53 PM  

//இப்போது வரும் புது பாடல்களில் முருகர் வரிகள், அவ்வளவாக இருப்பதில்லை! டாம் தூம் என்று குதிக்கிறாங்க!//

ஹா ஹா ஹா!
பல முருகன் பாட்டுக்களே இப்போ அப்படித் தான் இருக்கு! ஒரே மாதிரி! நர்சரி ரைம் கணக்கா...முருகனை விட, வேற என்னென்னமோ அஜால் குஜாலா இருக்கு! :))

ஆனா இதெல்லாம் பாத்தா நடக்குமா? முருகன் ஒரு வரியிலாச்சும் இருக்கான்-ல்ல? Take it Ez-ன்னு போக வேண்டியது தான்! :)

//அப்படி என்ன இருக்கிறது அரோகரா! என்ற வரியில்! ஏன் அரோகரா என்று சொல்றாங்க! ஓ ஆ -- ஓ ஆ -- என ஓலி வருவதால் என்று கருதுகிறேன்//

:)
இதை என் தோழன் ராகவன் கிட்ட கேட்டிருக்கணும் நீங்க! :)

சரி, சுருக்கமா...
அரோகரா
= அர + அரா
= ஹர + ஹரா
= அரகரோகரா!

அரன் = சிவபெருமான்!
அர-அரன் = சிவனுக்கே சிவன்!
சுவாமிக்கே சுவாமி = சுவாமி நாத சுவாமி = அர-அரன்!
இது என் எண்ணம் மட்டுமே! Not Sure! ஈசனுக்கும் அரோகரா-ன்னு சொல்வாங்க! அண்ணாமலைக்கு அரோகரா என்ற கோஷம் திருவண்ணாமலையில் முழங்கும்!

எனவே இது அப்பனுக்கும் சுப்பனுக்கும் இருவருக்குமே ஆகி வரும்!

Kannabiran, Ravi Shankar (KRS) April 12, 2010 10:54 PM  

//இது முருகன் பாட்டு தானா?
பின்னூட்டம் போடலாமா!
புதன் கிழமை அதுவுமா!//

என் பாட்டுக்கு எசப்பாட்டு படிக்கறீங்களா ராஜேஷ்? :)
முருகா! முருகா!

கானா பிரபா April 12, 2010 11:03 PM  

அபச்சாரம் அபச்சாரம் இந்த ஆட்டம் போடுறாளே

(மனசுக்குள்) ரொம்ப ரசிச்சோமுங்கோ :0

Rajewh April 13, 2010 2:25 AM  

Krs said...
அரோகரா
= அர + அரா
= ஹர + ஹரா
= அரகரோகரா!

அரன் = சிவபெருமான்!
அர-அரன் = சிவனுக்கே சிவன்!
சுவாமிக்கே சுவாமி = சுவாமி நாத சுவாமி = அர-அரன்!
இது என் எண்ணம் மட்டுமே! Not Sure!
--
Hai
நல்ல விளக்கம் .
ஆனா கடைசீல என்று not sure -னு
ஒரு குண்டை தூக்கி போட்டுடீங்களே!
சரி sure - ஆ என்றாவது தெரிந்தால் எமக்கு மெயில் செய்யுங்கள்.
எனக்கு தெரிந்தாலும் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
மிக்க நன்றி

Kannabiran, Ravi Shankar (KRS) April 13, 2010 11:42 AM  

//கானா பிரபா said...
அபச்சாரம் அபச்சாரம் இந்த ஆட்டம் போடுறாளே//

என்ன காபி அண்ணாச்சி, பாஷையே மாறிப் போச்சி? :)

//(மனசுக்குள்) ரொம்ப ரசிச்சோமுங்கோ :0//

தெரியுமே! அதுக்குத் தான் போட்டேன், அதுவும் முருகனருள்-ல்ல! :)

கண்ணா-ன்னு அவ சொந்தக் காதலனைக் கூப்பிட்டாலும், அதைக் கண்ணன் பாட்டுல போட்டு இருக்கேன்!இதுல வடிவேலன்-ன்னு ஒத்த வரி வந்துரிச்சில்ல? இது முருகன் பாட்டு தான்! :)

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP