Monday, November 09, 2009

அழகென்ற சொல்லுக்கு முருகா...


முருகா... முருகா...

அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன்
அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற)

சுடராக வந்த வேல் முருகா - கொடுஞ்
சூரரைப் போரிலே வென்ற வேல் முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா - முக்
கனியான தமிழ் தந்த செல்வமே முருகா (அழகென்ற)

ஆண்டியாய் நின்ற வேல் முருகா - உன்னை
அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
பழம் நீ அப்பனே முருகா - ஞானப்
பழம் உன்னை அல்லாது பழம் ஏது முருகா (அழகென்ற)

குன்றாறும் குடி கொண்ட முருகா - பக்தர்
குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
சக்தி உமை பாலனே முருகா - மனித
சக்திக்கே எட்டாத தத்துவமே முருகா (அழகென்ற)

பிரணவப் பொருள் கண்ட திரு முருகா - பரம்
பொருளுக்கு குருவான தேசிகா முருகா
ஹரஹரா ஷண்முகா முருகா - என்று
பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா (அழகென்ற)

அன்பிற்கு எல்லையோ முருகா - உந்தன்
அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா - எந்தன்
கலியுக வரதனே அருள் தாரும் முருகா (அழகென்ற)





***

சேந்தனுக்கு மிகவும் பிடித்த பாடல் இது. தினமும் காலையில் நான் அலுவலகத்திற்குச் செல்லும் போது அவனை அவனுடைய பள்ளியில் விட்டுவிட்டுச் செல்வேன். இந்த மார்கழி வந்தால் அவனுக்கு மூன்று வயது நிறைகிறது. கூடுந்தில் (Van) ஏறியவுடன் 'பாபா. முருகா கீத் பஜே. முருகா கீத் பஜே' (அப்பா. முருகா பாட்டு வேணும். முருகா பாட்டு வேணும்) என்று தொடங்கிவிடுவான். அவன் பள்ளியை அடையும் வரை அவனும் சேர்ந்து பாடிக் கொண்டு வருவான். மற்ற நேரங்களில் நான் 'அழகென்ற சொல்லுக்கு' என்றால் அவன் 'முருகா' என்று சேர்ந்து பாடுகிறான்.

அந்த வயதில் அவன் அக்காவிற்கு ஹனுமான் சாலீஸா பிடித்திருந்தது. இப்போது 'எந்தப் பாட்டைப் போட்டாலும் சரி' என்று இருக்கிறாள்; இவனும் அப்படி ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நினைக்கிறேன். :-)

13 comments:

உண்மைத் தமிழன்(15270788164745573644) November 09, 2009 11:27 AM  

அப்பனே முருகா.. முருகா..!

என்னவொரு அமைதியான உருக வைக்கும் பாடல்..!

விடியற்காலையில் இதனைக் கேட்கும்போது ஒரு வேலையும் செய்யத் தோணாது.. கூடவே பாட வேண்டும் போலத்தான் தோன்றும்..!

குமரன் (Kumaran) November 09, 2009 11:32 AM  

வாங்க உண்மைத் தமிழரே! உங்கள் வரவு நல்வரவாகுக.

Shyam Prasad November 09, 2009 11:38 AM  

அருமையான பாடல்

கோவி.கண்ணன் November 09, 2009 9:34 PM  

//சேந்தனுக்கு மிகவும் பிடித்த பாடல் இது. தினமும் காலையில் நான் அலுவலகத்திற்குச் செல்லும் போது அவனை அவனுடைய பள்ளியில் விட்டுவிட்டுச் செல்வேன். //

எனக்கும் பிடித்தப் பாடல். சொற்களுடன் பொருந்தும் இசை ஏற்ற இறக்கம்.. டி எம் எஸ் குரலுக்கே உரிய மிடுக்கு....அதிலும் இதில் மென்மையான கிட்டதட்ட தாலாட்டும் குரல்.....கேட்க கேட்க தெவிட்டாத பாடல்.

மதுரையம்பதி November 09, 2009 9:58 PM  

எவர் க்ரீன் மெலடிஸ் பாடல்களில் சேர்க்கப்படும்படியான பாடல், நன்றி குமரன்.

Kailashi November 10, 2009 5:37 AM  

அருமையான தேர்வு, நன்றி குமரன்

திகழ் November 10, 2009 7:59 AM  

கேட்டாலே அப்படி ஒர் அமைதியை உண்டாக்கும் பாடல்

கவிநயா November 11, 2009 2:39 PM  

இனிமையான பாடல் பகிர்வுக்கு நன்றி :) குட்டி பையனுக்கு முன்கூட்டிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

MSV Muthu December 04, 2009 7:06 AM  

சீர்ப‌ர‌ம‌ன் என்று தொட‌ங்கும் முருக‌ன் பாட‌ல் கிடைக்குமா கும‌ர‌ன்? என் அம்மாவுக்கு மிக‌வும் பிடித்தமான‌ பாட‌ல்.
-Muthu MSV

குமரன் (Kumaran) December 10, 2009 7:00 AM  

நன்றி ஷ்யாம் பிரசாத்.

உண்மை தான் கோவி.கண்ணன்.

நன்றி மௌலி.

நன்றி கைலாஷி.

நன்றி திகழ்.

நன்றி கவிநயா அக்கா.

குமரன் (Kumaran) December 10, 2009 7:06 AM  

முத்து. நீங்கள் கேட்கும் பாடலை நான் இது வரை கேட்டதில்லை. கூகிளாரைக் கேட்டதில் அது அஷ்டோத்தர சதம் என்று சொல்கிறது. இன்னொரு அன்பரும் இதே பாடலை முன்பொரு முறை கேட்டிருக்கிறார். தேடிப் பார்க்க வேண்டும்.

tamil arasan November 25, 2016 2:19 AM  

அரோகரா..

Saravanakumar Prasanna March 06, 2018 12:22 AM  

அரோகரா

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP