Saturday, July 21, 2007

"கந்த குரு கவசம்" -- 1

"கந்த குரு கவசம்" -- 1



முருகனருள் பதிவில் என்னையும் சேரச்சொல்லி சிபியார் அழைத்தபோது, ஏதோ திருப்புகழ் பதிவுகள் எழுதுவதால் நம்மையும் இணைத்திருக்கிறார்கள் எனநினைத்து, சும்மா இருந்துவிட்டேன்.

இதுவரை பெரிதாக என் பங்களிப்பு இதில் இல்லை.

நேற்று மாத சஷ்டி பூஜை.

முடிந்தவுடன், மனதில் ஒரு எண்ணம் தட்டியது.

நாமும் எதாவது முருகனருளில் எழுதணும் என!

என்ன செய்யலாம் என இந்த வலைப்பூவுக்கு வந்து பார்த்தவுடன், கண்ணில் பட்டது ஒன்று!

[சிபியார்] எழுத ஆரம்பித்து, தொடராமல் விட்ட, அனைவருக்கும் தெரிந்த, ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்!

இதை முடிக்கலாமே என ஒரு முடிவெடுத்தேன்.

இன்று தொட்ங்கி, நாளொன்றுக்கு 40 வரிகளாக, பன்னிருகையனின் புகழ் பாடும் இந்தத் தோத்திரத்தை, 12 நாட்களில் முடிக்கலாம் என்விருக்கிறேன்..... அவன் அருளோடு!

தொடர்ந்து இது வெளிவர, இப்பூவில் இணைந்திருக்கும் மற்றவரின் ஒத்துழைப்பைக் கோருகிறேன்.

இனி அவன் புகழ் பாடுவோம்!

அனைவ்ரும் வருக!
முருகனருள் பெறுக!
முருகனருள் முன்னிற்கும்!!


ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள்
அருளிய
கந்த குரு கவசம்



... விநாயகர் வாழ்த்து ...

கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
மூஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
சித்தி வினாயக ஜயமருள் போற்றுகிறேன் ...... 5

சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே.

... செய்யுள் ...

ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்
சரவணபவ குகா சரணம் சரணம் ...... 10

குருகுகா சரணம் குருபரா சரணம்
சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம்
தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே
ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் ...... 15

அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்
அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய்
தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா
ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ ...... 20

காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா
போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா
போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி
போற்றி போற்றி முருகா போற்றி
அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய் ...... 25

தகப்பன் ஸ்வாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்
ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்
சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை
அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்
திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே ...... 30

ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண
அகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய்
அமரத் தன்மையினை அனுக்கிரகித்திடுவாயே
வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய்
வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே ...... 35

தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனே
திருமுருகன் பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தா
பரஞ் ஜோதியும் காட்டி பரிபூர்ணமாக்கிடுவாய்
திருமலை முருகா நீ திடஞானம் அருள் புரிவாய்
செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் ...... 40


[முருகனருள் தொடரும்]

11 comments:

நாமக்கல் சிபி July 22, 2007 2:13 AM  

தங்களால் தொடரப் படவேண்டும் என்பது அவன் எண்ணம்போலும்!

மிக்க மகிழ்ச்சி!

தொடராமல் இருந்ததை தொடர்ந்து எழுத முன்வந்தமைக்கும் மிக்க நன்றி!

குமரன் (Kumaran) July 22, 2007 7:40 AM  

மூலப் பொருளோனே: மூலாதாரம் என்ற, உடலில் இருக்கும் முதல் சக்கரத்தின் அதிபதி கணபதி. அதனை இங்கே மூலப் பொருளோனே என்று குறிக்கிறார் அடிகளார்.

மும்மலம் அகற்றிடுவாய்: ஆணவம், கன்மம், மாயை என்று மூன்று விதமான குறைகள் உயிருக்கு உண்டென்று சைவ சிந்தாந்தம் கூறும். இவற்றிற்கான விளக்கத்தை இராகவனோ மற்றவரோ சொல்லுவார்கள்.

எஸ்.கே.! சிபி தொடங்கியதைத் தொடர்ந்ததற்கு நன்றி. நானும் அவர் தொடங்கியதை முழுவதுமாக மறந்துவிட்டேன். ஆங்காங்கே சில குறிப்புகளும் தாருங்கள். திருப்புகழ் இடுகைகள் அளவிற்கு இல்லாவிட்டாலும் சிறு விளக்கமாவது தந்தீர்கள் என்றால் நன்று.

VSK July 22, 2007 10:40 AM  

உங்களிடமெல்லாம் சொல்லாமல் ஆரம்பித்தமைக்கு மன்னிக்கவும்!

மிக்க நன்றி, சிபியாரே!

VSK July 22, 2007 10:43 AM  

குறிப்புகள் தேவையில்லையோவென நினைத்தேன்.

இப்போது நீங்க சொல்லுவதால், முயற்சிக்கிறேன், குமரன்.

நீங்களும், மற்றவர்களும் இதுபோல உங்க கருத்துகளையும் சொல்லலாமே!

G.Ragavan July 22, 2007 1:49 PM  

கந்தகுருகவசம் மீண்டும் முருகனருளில் முன்னிற்பது மகிழ்ச்சியளிக்கிறது. தொடரட்டும். அருள் பரவட்டும்.

நாமக்கல் சிபி July 22, 2007 2:17 PM  

விபரம் அறிந்தவர்கள் குறிப்புகளையும் அந்தந்த இடுகைகளில் தெரிவித்தால் மிகவும் அருமையாக இருக்கும் குமரன்!

VSK July 22, 2007 3:16 PM  

நன்றி, ஜி.ரா.
நீங்கள் கேட்ட திருப்புகழையும் அப்படியே பருகலாமே!
:))

Kannabiran, Ravi Shankar (KRS) July 22, 2007 4:37 PM  

கவசத்தை மருத்துவர் தான் சாற்ற வேண்டும் என்று அந்த மா-மருத்துவன் எண்ணி விட்டான் போலும்!

வாழ்த்துக்கள் SK! கவசம் ஓதக் காத்திருக்கிறோம்!

//ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் //

ஸ்கந்தகிரி, தத்தகிரி எங்குள்ளது SK?

Vijay July 28, 2007 3:05 AM  

வாழ்த்துக்கள். முடிந்தால் விக்கிமூலத்தில் தொகுகவும்.

http://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

vijayar June 16, 2011 9:49 AM  

murugan arul muluthai kitikkattum

Anonymous August 22, 2022 9:43 PM  

நன்றி

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP