Monday, July 13, 2015

மெல்லிசை மன்னர், "தெய்வத்திரு" MSV..

இப்ப தான் மருத்துவமனையில் இருந்து, என்னை இல்லம் கொண்டாந்து சேர்க்கிறான் நண்பன்..
வீட்டுக்கு வந்ததும், இணையத்தில், MSV மறைந்துவிட்டார் எனும் செய்தி:(

மெல்லிசை மன்னரும், திரையிசைச் சக்கரவர்த்தியுமான = MSV!


என்னவா முருகா, அப்பா பெருமாளே
பணிவே உடலான இந்த "மெல்-இசையை",
உன் பத மலர் நீழலில் ஆழ்த்தி, அமைதியும்+அன்பும் கொடு!

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் MSV புகழ் பாடுங்களே!

தேவனை, இவரைப் பாருங்கள்; இவர் இசை தன்னை வாங்கிக் கொள்ளுங்கள்!
--

தமிழ்த் தாய்க்கு இசை தந்த மெல்லிசை மன்னவா,

தமிழ்த் தாய் வாழ்த்து உள்ளளவும்..
எழாதாரும், உன் இசைக்கு எழுந்து நிற்கத் தான் வேண்டும்!
அழிவு உன்னை அண்டாது! வாழி நீ..


கையில் Drips கட்டி உள்ளதால், ஒரு கையால் அதிகம் எழுத முடியலை.. மன்னிக்கவும்! பிறிதொரு நாள், MSV-முருகன் பாடல்களை இங்கு கிழமை தோறும் இடுகிறேன்;
இப்போதைக்கு.. இந்தப் பாடல் = வருவான் வடிவேலன்; வரிகள்: http://muruganarul.blogspot.com/2013/07/varuvaanvadivelan.html



MSV-யை இழந்து வாடும், அவர் மகன்களுக்கும்/மகள்களுக்கும்
மூன்று தலைமுறை மெல்லிசை ரசிகர்களுக்கும்
முக்குயில்கள், சுசீலாம்மா + ஜானகி + வாணி ஜெயராமுக்கும்
என் தனிப்பட்ட அளவில்.. தோழன் இராகவனுக்கும், நண்பர் இராம் அவர்களுக்கும் (MSV Times நெறியாளர்).. நெஞ்சார்ந்த இரங்கல்!


முருகா,
நீயும் ஒரு முறை, எங்கள் MSV-யைப் பணிந்து, வணங்கிக் கொள்!
இசைத்திரு MSV, இன்று.. தெய்வத்திரு MSV ஆகிவிட்டது..

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே!
--

*Various Murugan Songs of MSV
http://muruganarul.blogspot.com/search/label/MSV?m=1

*Various Kannan songs of MSV
http://kannansongs.blogspot.com/search/label/MSV?m=1

3 comments:

திண்டுக்கல் தனபாலன் July 13, 2015 11:18 PM  

ஆழ்ந்த இரங்கல்கள்...

Kavinaya July 18, 2015 10:01 AM  

எத்தனையெத்தனை பாடல்கள்...காலமெல்லாம் அவர் புகழ் பாடிக் கொண்டே இருக்கும்.
உங்கள் உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

Nanjil Siva January 02, 2020 8:50 AM  

MSV பிரிவு அவர் குடும்பத்திற்கு மட்டுமல்ல இசை உலகிற்கே பேரிழப்பு.ஜட்ஜ்மென்ட் கிளிக்.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP