Sunday, January 19, 2014

தைப் பூசம்: ஒரே பாடல் - இரு கவிஞர் - பல முருகன்!

தைப் பூசம் அன்று, இங்கு பதிவிட முடியாத படி, உடல் சூழ்நிலை..
அதனால் என்ன?
இதோ.. மிக்க அழகானதொரு பாடல் = ஒரே பாடல் - இரு கவிஞர்!

ஒரே பாட்டை ரெண்டு பேரு எப்படி எழுத முடியும்?
அதுவும் கவிஞர் கண்ணதாசன் & மருதகாசி..
ஈகோ -ன்னு ஒன்னு இருக்கே! என் வரியில் இன்னொருவன் கை வைப்பதா?

நம் தலை வரியிலேயே, அந்த முருகன் தான் கை வைப்பதும்:)
அப்பறம் என்ன, என் வரி என் வரி? = அல்லாம் அவன் வரி! அவனை வரி!

ஒரே பாடல் - இரு கவிஞர்
ஆனால்... பல முருகன்கள்! பல ஊர் முருகன்கள்!




வழக்கம் போல், நான் இடும், "துணைவன்" படத்தில் இருந்து தான் இதுவும்:)

துணைவன் = என் மனத்தோடு பேசும் படம்!
இரண்டு அன்பானவர்கள் இடையே...
கருத்து ஒற்றுமை வேண்டுமா?
(அ) முருக ஒற்றுமையே போதுமா? -என்னும் படம்!

கே.பி.சுந்தராம்பாள் அம்மா பாடும் அபூர்வப் பாடல்கள்!
வாரியார் சுவாமிகளும், படத்தில் நடிச்சி இருப்பாரு;

வாரியார், முருகன் “பெருமை” பேசுவது போல ஆரம்பக் காட்சி;
அதெல்லாம்.. “பொய், பொய், யாரும் நம்பாதீங்க”-ன்னு Hero, AVM Rajan உள்ளே நுழைவாரு:)
வாரியார் நடிப்பும், நல்லாத் தான் இருக்கும்; It will tempt me, everytime I see the movie:)
Vaariyar has “appeared” in other movies, but not to this big length, I think
சிவகவி – கதை வசனம் மட்டுமே
தெய்வம், துணைவன், திருவருள், கந்தர் அலங்காரம், மிருதங்கச் சக்கரவர்த்தி, நவகிரக நாயகி...
ஆனா, துணைவன் படத்தில் மட்டும் = வாரியார் காட்சிகள் மிக நீளமானவை:)

கணவனும் மனைவியும், ஊர் ஊராகச் சென்று பாடும் காட்சி, தங்கள் பிள்ளைக்காக!
அறுபடை வீடு மட்டுமன்றி, இன்னும் பலப்பல முருகு ஆலயங்கள்!


108 பெருமாள் திருத்தலம்
274 சிவ ஸ்தலம்

இப்படி, ஆழ்வார்கள் – நாயன்மார்கள் போல்..
தலம் தலமாகச் சென்று பாடிய முருகன் ஆலயங்கள் “குறை”வு தான்;
ஆனா, அந்தக் குறை -> நிறை செய்ய வந்த ஓர் உள்ளம்
=அதுக்கு, “அருணகிரி” -ன்னு பேரு!

ஆழ்வார்கள் “மங்களாசாசனம்” போல்,
முருக “மங்களாசாசனம்” செய்வித்தவர் = அருணகிரி

அதுவும் பன்னிருவராய் இல்லாது, ஒரே ஒருவராய்…
ஒத்த மனுசனாய் நடையாய் நடந்து…
அந்த ஆலயங்கள் = கந்த ஆலயங்கள்!

இந்தச் சினிமாப் பாட்டில் = மொத்தம் 28 முருகன் ஆலயங்கள் வரும்!
Please note them, as you hear the song!
Have underlined each temple, in the lyrics of the song;
காணுங்கள், தைப்பூச நாயகனை, தைப் பூசத்து அன்று!



(மருதகாசி)

மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே
பிள்ளை முகம் பாரு முருகா
பிறவிப் பிணி தீரு
(மருத மலையானே நாங்கள்)

உன்னை ஒருபோதும் எண்ண மறவேனே
சென்னிமலை வாழும் பெருமானே
அன்னை தந்தையுடன் உன்னை சிவன்மலையில்
வந்து தொழுவோர்க்கு அருள்வோனே

வள்ளல் உனை நாடி வள்ளிமலை தேடி
வருவோர்க்கு இன்பம் தருவோனே
கள்ளம் அறியாத பிள்ளைப் பெருமானே
காங்கேய நல்லூர் வளர்வோனே

திருமுருகன் பூண்டியில் பரமனருள் வேண்டியே
சிவலிங்கம் தனை வைத்துப் பூசித்த குமரா
தென்திருமலை கண்டு நெஞ்சாரத் துதிப்போர்க்கு
அஞ்சாதே என அபயம் தருகின்ற அமரா

வருந்தி வரும் அடியவர்கள் படும் துயரம் தீர்த்தாள
குருந்தமலை மீதிலே கொஞ்சும் வேலே
வற்றாத கருணை மலை நற்றாய் எனப் பொழியும்
வட்டமலைத் தெய்வமே வெற்றி வேலே

அமரர் கூட்டம் ஆடவும், அசுரர் தோற்று ஓடவும்
சமர் புரிந்த குமரக்கோட்ட தவமணியே
அண்ணல் ராமலிங்க வள்ளல் நெஞ்சினில்,
அருள்பாவின் வெள்ளம் பொங்கச் செய்த
கந்தகோட்டத் தமிழ்க்கனியே

தஞ்சம் என்று வந்து உன்னைக்
கெஞ்சுகின்ற எங்கள் பிள்ளை
துன்பம் தீர்க்க வேண்டுமய்யா சுடரொளியே

வீறிட்டு எழுந்த சூரன் போரிட்டு அழிய
திருப்போரூரில் வேல்விடுத்து நின்றவா
ஏறி வரும் மயிலின் பேரும் விளங்க
ஒரு ஊரை மயிலம் எனக் கொண்டவா

பக்தர்கள் தேரூர் பவவினை தீருர்
உத்திரமேரூர் உறைபவனே
எங்கும் இல்லாத விதத்தினிலே
பொங்கும் திருமயிலாடியிலே
வடதிசை நோக்கி அமர்ந்தவனே; மயிலை ஆடச் செய்தவனே

வருபவர் பிணி தீர்க்கும் வைத்தீஸ்வரன்
பெற்ற முருகனே சண்முகா முத்துக்குமாரா
சரவணா எங்களின் சிறுவனைக் காப்பாற்று
சக்தி வேலாயுதா சூரசம்ஹாரா

திண்புயச் சூரனை வென்றதை முனிவர்க்கு
எண்கண்ணிலே சொன்ன சுப்ரமண்யா
கந்தன்குடி வாழ்ந்திடும் கந்தனே
அன்பரின் கண்ணுக்கு விருந்தாக அமர்ந்த புண்யா

தக்க தருணத்திலே பக்தரின் பக்கம் துணையிருப்பாய்
சிக்கலைத் தீர்த்து வைப்பாய் ஜெகம் புகழ் சிக்கல் சிங்காரவேலா
செட்டிமகன் என்னும் இறைவா, செந்தமிழின் தலைவா
எட்டிக்குடி தனிலே அகத்தியன் ஏற்ற குருவானவா

பழகு தமிழ் கொண்டு அருணகிரி அன்று
திருப்புகழ் பாடிய வயலுரா
புலவன் நக்கீரன் புனைந்த 
முருகாற்றுப்படை போற்றும் விராலி மலை வீரா

கொன்றதொரு சூரனைக் கோல மயிலாகவே
குன்றக்குடியில் கொண்ட குமரய்யா
கந்தய்யா எங்களின் கவலையைத் தீரய்யா
கழுகு மலையில் வாழும் வேலய்யா

-------------------------------------

(கண்ணதாசன்)

பருவத ராஜகுமாரியின் மகனே
பாசத்தை உணர்ந்த பாலகனே
திருமலை முருகா மழலையின் நாவில்
ஒரு மொழி தருவாய் காவலனே

தக்கலை குமாரவேலா
ஒரு தாய் நிலை அறிந்த பாலா
மக்களைக் காத்திடும் சீலா
என் மகனைக் காத்திட வா… வா ..வா

வள்ளியூரிலே குடிகொண்ட வள்ளிமணாளா வழிகாட்டு
பிள்ளைக்கு உந்தன் அருள் காட்டு
பிணிகள் விலகிடத் தாலாட்டு

அலைந்து தவித்தோம் குமரய்யா
வடபழனிக்கு வந்தோம் முருகய்யா
நலம் பெற வேண்டும் மகனய்யா
நம்பிக்கை தருவாய் கந்தய்யா

தணியாத கோபம் தணிந்த இடம் வந்தும்
தனித்தனியாக இருப்பவனே
கனிந்த முகம் காட்டு கலங்கும் எமைத் தேற்று
தணிகைமலை மீது வசிப்பவனே

தந்தைக்கு ஓம் எனும் மந்திரப்பொருள் சொன்ன
சுவாமி மலை வாழும் குருநாதா
மைந்தன் துயர்தீர வந்த பிணி மாற
கந்தா கடம்பா வரமே தா

பூவுதிர் சோலையில் வள்ளியை மணந்து
பழமுதிர் சோலைக்கு வந்தவனே
காவல் தெய்வம் நீ என வந்தோம்
கை கொடுப்பாய் எங்கள் மன்னவனே

திருப்புகழ் பாடி திருவடி தேடி
தெண்டனிட்டோம் எங்கள் தென்னவனே
திருப்பரங்குன்றத்து நாயகனே
குறை தீர்த்து வைப்பாய் வடிவேலவனே
வேலவனே..
வேலவனே..

படம்: துணைவன்
வரி: மருதகாசி & கண்ணதாசன்
இசை: கேவி மகாதேவன்
குரல்: TMS & பி.சுசீலா



பாட்டில் வரும் முருக ஆலயங்கள்: 28

முருகனின் தலங்கள் என்னென்ன -ன்னு ஒரு நூலே இருக்கு;
= சுப்ரமணிய ஷேத்திரக் கோவை
= காஞ்சி சிதம்பர முனிவர் எழுதியது;

பிள்ளைத் தமிழ் நடையில் அமைஞ்சி இருக்கும்;
= 100 பாடல்கள்; 100 தலங்கள்
கைலாசத்தில் ஆரம்பித்து, கேதாரத்தில் முடிப்பாரு!
------------

கந்த சட்டிக் கவசத்திலும், மொத்தம் 12 தலங்கள் வரும்;
*சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக -ன்னு சென்னிமலையில் (சரகிரி) துவங்கி..
*சமரா புரிவாழ் சண்முகத் தரசே   -ன்னு திருப்போரூரில் (சமராபுரி) முடியும்!

மாலவனுக்கு = 108 திவ்ய தேசம்
மருகன் முருகனுக்கு = 28 திவ்ய தேசம் தானா?

108 திவ்ய தேசத்துக்கும் மேலான ஒரு திவ்ய தேசம் இருக்கு!
= அது 109 ஆம் திவ்ய தேசம்;
= என் “மனம்” எனும் திவ்ய தேசம்!

*அங்கு, தள்ளு முள்ளுக் கூட்டம், தரகர்கள் இல்லை!
*அங்கு, ஜருகண்டி இல்லை, தட்டில் விழும் ரூபாய் நோட்டுக்கு ஏற்றவாறு அருள் இல்லை!
*அங்கு, சிறப்புத் தரிசன டிக்கெட் இல்லை! எல்லாரும் ஓர் நிறை!
*அங்கு, நானும் அவனும் மட்டுமே!
என் மனமே முருகனின் திவ்யதேசம்! 
உடல் எடுத்தேன், உன் உறவுக்கு!
உளம் கொடுத்தேன், உன் நிறைவுக்கு!
என் மனசு = 109 ஆம் திவ்ய தேசம் வாழ்க!!

Wednesday, January 01, 2014

Happy New Year திருத்தணி முருகா!

உங்கள் அனைவருக்கும் வெற்றிமிகு புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Happy New Year 2014:)
ஆங்கிலப் புத்தாண்டு அன்று திருத்தணிப் படி உற்சவம்! திருத்தணி முருகன் = "துரை" முருகன்!:)

"துரை" முருகன் என்ற பேர் எப்படி வந்தது?
அட, முருகனுக்கும்-துரைக்கும் என்னய்யா தொடர்பு?
தமிழ்க் கடவுள் தானே நீயி?
ஒனக்கு எப்படிடா, வெள்ளைக்காரத் "துரை"ப் பட்டம்?:)

"துரை" என்பது தமிழ்ச் சொல் அன்று!
ஆயினும் பல துரைகள் தமிழ்நாட்டில் உண்டு:)
செல்வ துரை, அண்ணாதுரை, தம்பிதுரை, தர்மதுரை, துரைக்கண்ணன், பொன்னுதுரை, ராஜதுரை etc etc etc
துரைசாமி = எங்க தாத்தா பேரு:)

Durer என்பது பிரெஞ்சு மொழிச் சொல்..
இன்னும் கூர்ந்தால், ஜெர்மானியச் சொல்
ஆங்கிலேயருக்கு முன்பே வந்த போர்த்துகீசிய, டச்சு, பிரெஞ்சு ஆதிக்கம்; அப்போது தமிழ்நாட்டில் நுழைந்த சொல், Durer - துரே - துரை!

கனவான்களை, நம்ம மக்களும் "துரை துரை" என்றே புதுச் சொல்லால் "செல்லமா" அழைக்க,
பின் வந்த பிரெஞ்சு எதிரிகளான ஆங்கிலேயருக்கும்,
நம்ம மக்களின் வெள்ளந்தியான "துரை" நாமகரணமே நின்று விட்டது:)

ஆனால் முருகன் எப்படி "துரை" ஆனான்?

வெள்ளையர் காலத்தில் நம்மவர்கள், புத்தாண்டு அன்று..
*துரைகளுக்குக் கூடுதல் சலாம் போட்டு,
*துரைகள் வீட்டு வாசலில் கால் கடுக்க நின்று வாழ்த்தி,
*துரை கலெக்டர்கள், துரை சர்கள் -ன்னு ஒரே துரை பூஜை தான்!


ஆங்கிலப் புத்தாண்டு அன்று, துரைமார்களுக்கு வாழ்த்து சொல்ல வரிசை கட்டி நின்ற நம்ம ஆட்களை.. கோயிலை நோக்கித் திருப்ப..
வள்ளிமலை சுவாமிகள், திருத்தணிப் படி உற்சவத்தை, வேண்டுமென்றே Jan 1st நடத்தத் துவங்கினார்; முருகனும் "துரை" ஆனான்:)

Hey Muruga Durer, I aime ous (French).. I love you da:))

துரைகளுக்கு எல்லாம் பெரிய துரை= "தணிகை மலைத் துரை"!
அநதத் "துரை" முருகனுக்கு வாழ்த்து சொல்வோம்..
ஆங்கிலேயர்களுக்குச் சலாம் வேண்டாம் என்று எழுந்த பாடல்..

வள்ளிமலை சுவாமிகள் என்பவர்,
சரியாக ஆங்கிலப் புத்தாண்டு அன்று, தமிழ்க் கடவுளுக்குப் படி உற்சவம் நடத்தி, அதைத் தமிழ் விழாவாக ஆக்கி விட்டார்!



திருத்தணி = 5ஆம் படை வீடு அல்ல!
"குன்று தோறாடல்" என்பதே 5ஆம் படைவீடு;

அந்தப் பல குன்றுகளில், திருத்தணியும் ஒன்று! அவ்ளோ தான்!
பதி எங்கிலும் இருந்து விளையாடி
பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே! என்பது திருப்புகழ்;


திருத்தணி -ன்னாலே = முருகனுக்கு, மாம்பழக் கோவம் "தணி"ஞ்ச இடம் -ன்னு ஒரு புராணக் கதை உருவாக்கிட்டாங்க; உண்மை அதுவல்ல!
* கோபம் தணிஞ்ச இடமல்ல!
* காமம் "தணி"ஞ்ச இடம் = திருத்-தணி!

தண்ணீர் -> தண் -> தணி;
* அனல் = தண்ணீரில் தணியும்!
* அனல் காமம் = வள்ளி (எ) பெண்ணீரில் தணியும்!

சங்கத் தமிழ்த் தொன்மமான, குறிஞ்சி நிலக் காதல் பறவைகள்:
முருகன் - வள்ளி;  அவிங்களுக்குத் திருமணம் நிகழ்ந்த இடம் = திருத்தணி!
முருகக் காதல், வள்ளியிடம் தணிந்த மலை = தணிகை மலை!
இதுவே புராணம் கலவாத தமிழ்ப் பழங்குடியியல்!

ஏனோ... திருத்தணியைத் "திருமணத் தலம்" என்றே பலரும் நினைச்சிப் பார்ப்பதில்லை!
அடுத்த முறை போனீங்க-ன்னா, மறக்காம ஞாபகம் வச்சிக்கோங்க:
அங்கு இருப்பது மாப்பிள்ளை முருகன் - மணப் பொண்ணு வள்ளி!

திருத்தணிக்கு அருகில் தான்..
வள்ளி பிறந்து வாழ்ந்த = வள்ளி மலை!
எங்க வடார்க்காடு மாவட்டம்... I have a deep fantasy abt vaLLi malai & thaNigai malai;

இந்த வாரச் செவ்வாயில் = திருத்தணிப் பாட்டே!
"ஆங்கிலத் துரைகளுக்குச் சலாம் போடாதீர்கள்...
அவர்களை விட பெரிய துரை = தணிகை மலைத் துரை" (எ) பாட்டு;


கேட்டுக் கொண்டே வாசிக்கவும்..


தணிகைமலைப் பெருந்துரையே - வா வா வா
தயாநிதியே தர்மதுரையே - வா வா வா

அடியவர்க்கு அருளும் அரசே - வா வா வா
ஆலம் உண்டோன் பாலகனே - வா வா வா

பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்தே - வா வா வா
ஆறுமுகக் கருணைக் கோவே - வா வா வா

என் ஆவி பிரியும் சமயம் முன்னே - வா வா வா
பாவி என்னை மறந்திடாதே - வா வா வா
--------------

வேல் பிடிக்கும் செஞ்சுடரே - வா வா வா
வேலெடுத்து வினையைத் தீர்க்க வா வா வா

என் மரண பயம் தீர்க்க நீயும் - வா வா வா
மயிலும் ஆடி நீயும் ஆடி - வா வா வா

திருத் - தணிகைமலை சாமிமலை பழனிமலை சோலைமலைப்
பெருந் துரையே - வா வா வா
தயாநிதியே தர்மதுரையே - வா வா வா
--------------

சங்கைதான் ஒன்றுதான் இன்றியே நெஞ்சிலே
சஞ்சல் ஆரம்ப மாயன்

சந்தொடே குங்கும அலங்க்ருத ஆடம்பரா
சம்ப்ரம-ஆ னந்த மாயன்

மங்கைமார் கொங்கைசேர் அங்க-மோ கங்களால்
வம்பிலே துன்புறாமே

வண்குகா நின்-சொரூ பம்-ப்ரகா சம்-கொடே
வந்துநீ அன்பில் ஆள்வாய்
--------------

கங்கை-சூ டும்பிரான் மைந்தனே அந்தனே
கந்தனே விஞ்சையூரா

கம்பியாது இந்த்ர-லோ கங்கள்கா என்று-அவா
கண்டலே சன்சொல்-வீரா

செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே
சென்று-மோ தும் ப்ரதாபா

செங்கண்மால் பங்கஜா னன்-தொழு ஆனந்தவேள்
செந்தில்வாழ் தம்பிரானே!


வரிகள் & குரல்: பெங்களூர் ரமணியம்மாள்

அம்மாளின் குரல் = ஆண்மைக் குரல்; முடவனையும் துள்ளி ஆட வைக்கும்;
குரல் மட்டுமல்ல, தானே பாட்டு எழுதவும் செய்வார்கள்;

இந்தப் பாட்டு, மகாகவி பாரதியின், "ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா" மெட்டில் எழுதியது; (முன் இரு பத்திகள்)
பின் இரு பத்திகள் - திருச்செந்தூர் திருப்புகழ் - பாட்டில் பயன்படுத்திக் கிட்டாங்க;
அம்மாளைப் பற்றி மேலும் அறிய = இங்கே (old kathirgamam post)

முருகா, என் காதல் துரையே ...
தயாநிதியே தர்மதுரையே - வா வா வா
மயிலும் ஆடி நீயும் ஆடி - வா வா வா
Happy New Year திருத்தணி முருகா!

Hey Honey, Muruga Durer, I aime ous.. I love you da:))

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP