Wednesday, January 01, 2014

Happy New Year திருத்தணி முருகா!

உங்கள் அனைவருக்கும் வெற்றிமிகு புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Happy New Year 2014:)
ஆங்கிலப் புத்தாண்டு அன்று திருத்தணிப் படி உற்சவம்! திருத்தணி முருகன் = "துரை" முருகன்!:)

"துரை" முருகன் என்ற பேர் எப்படி வந்தது?
அட, முருகனுக்கும்-துரைக்கும் என்னய்யா தொடர்பு?
தமிழ்க் கடவுள் தானே நீயி?
ஒனக்கு எப்படிடா, வெள்ளைக்காரத் "துரை"ப் பட்டம்?:)

"துரை" என்பது தமிழ்ச் சொல் அன்று!
ஆயினும் பல துரைகள் தமிழ்நாட்டில் உண்டு:)
செல்வ துரை, அண்ணாதுரை, தம்பிதுரை, தர்மதுரை, துரைக்கண்ணன், பொன்னுதுரை, ராஜதுரை etc etc etc
துரைசாமி = எங்க தாத்தா பேரு:)

Durer என்பது பிரெஞ்சு மொழிச் சொல்..
இன்னும் கூர்ந்தால், ஜெர்மானியச் சொல்
ஆங்கிலேயருக்கு முன்பே வந்த போர்த்துகீசிய, டச்சு, பிரெஞ்சு ஆதிக்கம்; அப்போது தமிழ்நாட்டில் நுழைந்த சொல், Durer - துரே - துரை!

கனவான்களை, நம்ம மக்களும் "துரை துரை" என்றே புதுச் சொல்லால் "செல்லமா" அழைக்க,
பின் வந்த பிரெஞ்சு எதிரிகளான ஆங்கிலேயருக்கும்,
நம்ம மக்களின் வெள்ளந்தியான "துரை" நாமகரணமே நின்று விட்டது:)

ஆனால் முருகன் எப்படி "துரை" ஆனான்?

வெள்ளையர் காலத்தில் நம்மவர்கள், புத்தாண்டு அன்று..
*துரைகளுக்குக் கூடுதல் சலாம் போட்டு,
*துரைகள் வீட்டு வாசலில் கால் கடுக்க நின்று வாழ்த்தி,
*துரை கலெக்டர்கள், துரை சர்கள் -ன்னு ஒரே துரை பூஜை தான்!


ஆங்கிலப் புத்தாண்டு அன்று, துரைமார்களுக்கு வாழ்த்து சொல்ல வரிசை கட்டி நின்ற நம்ம ஆட்களை.. கோயிலை நோக்கித் திருப்ப..
வள்ளிமலை சுவாமிகள், திருத்தணிப் படி உற்சவத்தை, வேண்டுமென்றே Jan 1st நடத்தத் துவங்கினார்; முருகனும் "துரை" ஆனான்:)

Hey Muruga Durer, I aime ous (French).. I love you da:))

துரைகளுக்கு எல்லாம் பெரிய துரை= "தணிகை மலைத் துரை"!
அநதத் "துரை" முருகனுக்கு வாழ்த்து சொல்வோம்..
ஆங்கிலேயர்களுக்குச் சலாம் வேண்டாம் என்று எழுந்த பாடல்..

வள்ளிமலை சுவாமிகள் என்பவர்,
சரியாக ஆங்கிலப் புத்தாண்டு அன்று, தமிழ்க் கடவுளுக்குப் படி உற்சவம் நடத்தி, அதைத் தமிழ் விழாவாக ஆக்கி விட்டார்!திருத்தணி = 5ஆம் படை வீடு அல்ல!
"குன்று தோறாடல்" என்பதே 5ஆம் படைவீடு;

அந்தப் பல குன்றுகளில், திருத்தணியும் ஒன்று! அவ்ளோ தான்!
பதி எங்கிலும் இருந்து விளையாடி
பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே! என்பது திருப்புகழ்;


திருத்தணி -ன்னாலே = முருகனுக்கு, மாம்பழக் கோவம் "தணி"ஞ்ச இடம் -ன்னு ஒரு புராணக் கதை உருவாக்கிட்டாங்க; உண்மை அதுவல்ல!
* கோபம் தணிஞ்ச இடமல்ல!
* காமம் "தணி"ஞ்ச இடம் = திருத்-தணி!

தண்ணீர் -> தண் -> தணி;
* அனல் = தண்ணீரில் தணியும்!
* அனல் காமம் = வள்ளி (எ) பெண்ணீரில் தணியும்!

சங்கத் தமிழ்த் தொன்மமான, குறிஞ்சி நிலக் காதல் பறவைகள்:
முருகன் - வள்ளி;  அவிங்களுக்குத் திருமணம் நிகழ்ந்த இடம் = திருத்தணி!
முருகக் காதல், வள்ளியிடம் தணிந்த மலை = தணிகை மலை!
இதுவே புராணம் கலவாத தமிழ்ப் பழங்குடியியல்!

ஏனோ... திருத்தணியைத் "திருமணத் தலம்" என்றே பலரும் நினைச்சிப் பார்ப்பதில்லை!
அடுத்த முறை போனீங்க-ன்னா, மறக்காம ஞாபகம் வச்சிக்கோங்க:
அங்கு இருப்பது மாப்பிள்ளை முருகன் - மணப் பொண்ணு வள்ளி!

திருத்தணிக்கு அருகில் தான்..
வள்ளி பிறந்து வாழ்ந்த = வள்ளி மலை!
எங்க வடார்க்காடு மாவட்டம்... I have a deep fantasy abt vaLLi malai & thaNigai malai;

இந்த வாரச் செவ்வாயில் = திருத்தணிப் பாட்டே!
"ஆங்கிலத் துரைகளுக்குச் சலாம் போடாதீர்கள்...
அவர்களை விட பெரிய துரை = தணிகை மலைத் துரை" (எ) பாட்டு;


கேட்டுக் கொண்டே வாசிக்கவும்..


தணிகைமலைப் பெருந்துரையே - வா வா வா
தயாநிதியே தர்மதுரையே - வா வா வா

அடியவர்க்கு அருளும் அரசே - வா வா வா
ஆலம் உண்டோன் பாலகனே - வா வா வா

பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்தே - வா வா வா
ஆறுமுகக் கருணைக் கோவே - வா வா வா

என் ஆவி பிரியும் சமயம் முன்னே - வா வா வா
பாவி என்னை மறந்திடாதே - வா வா வா
--------------

வேல் பிடிக்கும் செஞ்சுடரே - வா வா வா
வேலெடுத்து வினையைத் தீர்க்க வா வா வா

என் மரண பயம் தீர்க்க நீயும் - வா வா வா
மயிலும் ஆடி நீயும் ஆடி - வா வா வா

திருத் - தணிகைமலை சாமிமலை பழனிமலை சோலைமலைப்
பெருந் துரையே - வா வா வா
தயாநிதியே தர்மதுரையே - வா வா வா
--------------

சங்கைதான் ஒன்றுதான் இன்றியே நெஞ்சிலே
சஞ்சல் ஆரம்ப மாயன்

சந்தொடே குங்கும அலங்க்ருத ஆடம்பரா
சம்ப்ரம-ஆ னந்த மாயன்

மங்கைமார் கொங்கைசேர் அங்க-மோ கங்களால்
வம்பிலே துன்புறாமே

வண்குகா நின்-சொரூ பம்-ப்ரகா சம்-கொடே
வந்துநீ அன்பில் ஆள்வாய்
--------------

கங்கை-சூ டும்பிரான் மைந்தனே அந்தனே
கந்தனே விஞ்சையூரா

கம்பியாது இந்த்ர-லோ கங்கள்கா என்று-அவா
கண்டலே சன்சொல்-வீரா

செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே
சென்று-மோ தும் ப்ரதாபா

செங்கண்மால் பங்கஜா னன்-தொழு ஆனந்தவேள்
செந்தில்வாழ் தம்பிரானே!


வரிகள் & குரல்: பெங்களூர் ரமணியம்மாள்

அம்மாளின் குரல் = ஆண்மைக் குரல்; முடவனையும் துள்ளி ஆட வைக்கும்;
குரல் மட்டுமல்ல, தானே பாட்டு எழுதவும் செய்வார்கள்;

இந்தப் பாட்டு, மகாகவி பாரதியின், "ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா" மெட்டில் எழுதியது; (முன் இரு பத்திகள்)
பின் இரு பத்திகள் - திருச்செந்தூர் திருப்புகழ் - பாட்டில் பயன்படுத்திக் கிட்டாங்க;
அம்மாளைப் பற்றி மேலும் அறிய = இங்கே (old kathirgamam post)

முருகா, என் காதல் துரையே ...
தயாநிதியே தர்மதுரையே - வா வா வா
மயிலும் ஆடி நீயும் ஆடி - வா வா வா
Happy New Year திருத்தணி முருகா!

Hey Honey, Muruga Durer, I aime ous.. I love you da:))

1 comments:

திண்டுக்கல் தனபாலன் January 01, 2014 10:50 AM  

தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP