Tuesday, August 27, 2013

அவசரக் கல்யாணம்: பார்த்தால் முருகன் முகம்..

அவசரக் கல்யாணம் -ன்னு ஒரு தமிழ்ப் படம்!
ஜெய்சங்கர் - வாணிஸ்ரீ நடிச்ச படம்;
அதுல, சுசீலாம்மாவின் அபூர்வ முத்துக்கள் உண்டு!


வெண்ணிலா நேரத்திலே வேணு கானம் -ன்னு ஒரு அழகிய பாடல்!
சுசீலாம்மாவின் குரலில், தேன் வழிஞ்சோடும்!
எளிமையான இசைக் கருவிகள், பாட்டு முழுவதும்; அவங்க குரலுக்கு அழகாய் இழையும்!

அது கண்ணன் பாட்டு:)
அதே படத்தில் ஒரு முருகன் பாட்டும் உண்டு! அதான் இன்றைய பாடல்!



பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும் - அவன்
பாராதபோது மெல்லப் பார்க்க வேண்டும்
கேட்டால் தெய்வானை குரல் கேட்க வேண்டும் - அவள்
கேளாதபோதும் இதழ் சேர்க்க வேண்டும்
(பார்த்தால் முருகன்)



சித்திர மேனியில் முத்திரை போட்டொரு - சேலை அசைந்தாட
சேலை முகத்தினில் மாது நிறுத்திய - காதல் கலந்தாட
கண் மா மணி ஆட - நாணம் - கன்னத்தில் நடமாட
பொன்னார் திருமேனி - அங்கே - பொன்னூஞ்சல் ஆட
(பார்த்தால் முருகன்)

நந்த வனத்தில் கந்தன் இருக்க 
வந்த தெய்வயானை என்ன கொடுத்தாள்?
கந்தன் முகத்தில் மஞ்சள் முகத்தை
மெல்ல மெல்லச் சேர்த்து உள்ளம் கொடுத்தாள்

கன்னம் கொடுத்தாளோ - ஆசை
வண்ணம் கொடுத்தாளோ
காதல் கொடுத்தாளோ - இல்லை
காவல் கொடுத்தாளோ?
(பார்த்தால் முருகன்)

படம்: அவசரக் கல்யாணம்
குரல்: TMS, P. சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
இசை: டி.ஆர்.பாப்பா

0 comments:

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP