Tuesday, August 20, 2013

குமரன் தாள் பணிந்தே துதி

பல வாரங்களாய்ச் சினிமாப் பாடல் பார்த்தோம்-ல்ல? அதனால், இன்று, ஒரு மரபிசைப் பாடல் (கர்நாடக இசை)
= குமரன் தாள் பணிந்தே துதி!
= பாடுவது, DK ஜெயராமன்; (DK பட்டம்மாளின் உடன் பிறந்தவர்)

டேய் முருகா, உன்னை ஆசையாக் கூப்பிட்டாப் போதாதா?
உன் தாளை வேறு, பணிந்து + துதிக்கணுமா? போடா, ரொம்ப தான்; வெவ்வவ்வெவ்வே:))


பாட்டை எழுதியது: பாபநாசம் சிவன்; அவர் "முத்திரையான" : ராமதாசன் என்பதைப் பாட்டின் இறுதியில் வைப்பார்;



எடுப்பு: (பல்லவி)
குமரன்-தாள் பணிந்தே  துதி

தொடுப்பு: (அனு பல்லவி)
அதி-கோர சம்-சார -த்தில் யாரே கதி?
குமரன்-தாள் பணிந்தே துதி!

முடிப்பு: (சரணம்)
சமரம் தன்னில் சூரனைத் தாரகனோடு
சங்காரம் செய்த சிங்கார சங்கர
(குமரன்-தாள் பணிந்தே துதி!)

ஈசன்! வள்ளி தெய்வானை நேசன்! - பக்தர் இதய 
வாசன்! சண்முக ராம-தாசன் குல தெய்வ
(குமரன்-தாள் பணிந்தே துதி)

வரிகள்: பாபநாசம் சிவன்
குரல்: D.K. ஜெயராமன்
இராகம்: யதுகுல காம்போதி
தாளம்: ஆதி

4 comments:

Kavinaya August 20, 2013 8:25 AM  

அருமையான பாடல். ரசித்தேன். நன்றி கண்ணா.

அம்பாளடியாள் August 20, 2013 8:36 AM  

சிறப்பான பகிர்வு வாழ்த்துக்கள் சகோ .

குமரன் (Kumaran) August 20, 2013 9:48 AM  

நல்ல சந்தம் கொண்ட பாடல்!

Unknown August 30, 2013 4:46 AM  

///டேய் முருகா, உன்னை ஆசையாக் கூப்பிட்டாப் போதாதா?
உன் தாளை வேறு, பணிந்து + துதிக்கணுமா? போடா, ரொம்ப தான்; வெவ்வவ்வெவ்வே:))///

சகோதரி முருகன் மீது இத்தனை அன்யோன்யமா!!!

முருகனின் அருள் முன்னிருக்கட்டும்!
நன்றி.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP