Tuesday, August 27, 2013

அவசரக் கல்யாணம்: பார்த்தால் முருகன் முகம்..

அவசரக் கல்யாணம் -ன்னு ஒரு தமிழ்ப் படம்!
ஜெய்சங்கர் - வாணிஸ்ரீ நடிச்ச படம்;
அதுல, சுசீலாம்மாவின் அபூர்வ முத்துக்கள் உண்டு!


வெண்ணிலா நேரத்திலே வேணு கானம் -ன்னு ஒரு அழகிய பாடல்!
சுசீலாம்மாவின் குரலில், தேன் வழிஞ்சோடும்!
எளிமையான இசைக் கருவிகள், பாட்டு முழுவதும்; அவங்க குரலுக்கு அழகாய் இழையும்!

அது கண்ணன் பாட்டு:)
அதே படத்தில் ஒரு முருகன் பாட்டும் உண்டு! அதான் இன்றைய பாடல்!பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும் - அவன்
பாராதபோது மெல்லப் பார்க்க வேண்டும்
கேட்டால் தெய்வானை குரல் கேட்க வேண்டும் - அவள்
கேளாதபோதும் இதழ் சேர்க்க வேண்டும்
(பார்த்தால் முருகன்)சித்திர மேனியில் முத்திரை போட்டொரு - சேலை அசைந்தாட
சேலை முகத்தினில் மாது நிறுத்திய - காதல் கலந்தாட
கண் மா மணி ஆட - நாணம் - கன்னத்தில் நடமாட
பொன்னார் திருமேனி - அங்கே - பொன்னூஞ்சல் ஆட
(பார்த்தால் முருகன்)

நந்த வனத்தில் கந்தன் இருக்க 
வந்த தெய்வயானை என்ன கொடுத்தாள்?
கந்தன் முகத்தில் மஞ்சள் முகத்தை
மெல்ல மெல்லச் சேர்த்து உள்ளம் கொடுத்தாள்

கன்னம் கொடுத்தாளோ - ஆசை
வண்ணம் கொடுத்தாளோ
காதல் கொடுத்தாளோ - இல்லை
காவல் கொடுத்தாளோ?
(பார்த்தால் முருகன்)

படம்: அவசரக் கல்யாணம்
குரல்: TMS, P. சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
இசை: டி.ஆர்.பாப்பா

Tuesday, August 20, 2013

குமரன் தாள் பணிந்தே துதி

பல வாரங்களாய்ச் சினிமாப் பாடல் பார்த்தோம்-ல்ல? அதனால், இன்று, ஒரு மரபிசைப் பாடல் (கர்நாடக இசை)
= குமரன் தாள் பணிந்தே துதி!
= பாடுவது, DK ஜெயராமன்; (DK பட்டம்மாளின் உடன் பிறந்தவர்)

டேய் முருகா, உன்னை ஆசையாக் கூப்பிட்டாப் போதாதா?
உன் தாளை வேறு, பணிந்து + துதிக்கணுமா? போடா, ரொம்ப தான்; வெவ்வவ்வெவ்வே:))


பாட்டை எழுதியது: பாபநாசம் சிவன்; அவர் "முத்திரையான" : ராமதாசன் என்பதைப் பாட்டின் இறுதியில் வைப்பார்;எடுப்பு: (பல்லவி)
குமரன்-தாள் பணிந்தே  துதி

தொடுப்பு: (அனு பல்லவி)
அதி-கோர சம்-சார -த்தில் யாரே கதி?
குமரன்-தாள் பணிந்தே துதி!

முடிப்பு: (சரணம்)
சமரம் தன்னில் சூரனைத் தாரகனோடு
சங்காரம் செய்த சிங்கார சங்கர
(குமரன்-தாள் பணிந்தே துதி!)

ஈசன்! வள்ளி தெய்வானை நேசன்! - பக்தர் இதய 
வாசன்! சண்முக ராம-தாசன் குல தெய்வ
(குமரன்-தாள் பணிந்தே துதி)

வரிகள்: பாபநாசம் சிவன்
குரல்: D.K. ஜெயராமன்
இராகம்: யதுகுல காம்போதி
தாளம்: ஆதி

Tuesday, August 13, 2013

தமிழிசை பாடுகின்ற வானம்பாடி!

இன்றைய பாடல் = கணீர்ப் பாடல்!
இன்றைய குரல் = கணீர்க் குரல்!


தமிழிசை = சங்கத் தமிழ்க் காலத்தில் இருந்து வாழ்ந்து வருவது
*கலித் தொகை = கலியென (வல்லோசை) பெற்று வருவது = Rock
*பரி பாடல் = பரிந்து வருவது = Melody

சிலப்பதிகாரம் = பெரும் தமிழிசைக் காப்பியம்!
தூக்கு, வண்ணம் -ன்னு இசைக் கூறுகளின் புதையல்-ன்னே சொல்லலாம்!

*பின்பு வந்த ஆழ்வார்களின் பாசுரம் = பா + சுரம் -ன்னு பாவிலேயே சுரம் அமைந்து விடும்!
*நாயன்மார்களின் தேவாரத் திருமுறைகள் = பண் ஆராய்ச்சிக்குப் பெரும் புதையல்!

அப்படியே, அருணகிரியின் சந்தக் கவிகள் என்று வளர்ந்து...
பின்னாளில், தமிழிசை மூவர் என்றே உருவெடுத்தது!
*அருணாசலக் கவிராயர்
*முத்துத் தாண்டவர்
*மாரிமுத்தாப் பிள்ளை

எப்படி கர்நாடக இசை மூவருக்கும் பிறந்த இடம் = திருவாரூர்...
அதே போல், தமிழிசை மூவருக்கும் பிறந்த இடம் = சீர்காழி!

இன்றைய பாடலும் சீர்காழியே! இங்கே கேட்டுக் கொண்டே படியுங்கள்


தமிழிசை பாடுகின்ற வானம்பாடி - என்
தலைவன் முருகனைத் தினம் தேடி - நான்
(தமிழிசை பாடுகின்ற)

அமிழ்தினும் இனிதான தமிழ்ப்பாட்டு - அந்த
ஆறுமுகம் மயங்கும் அதைக்கேட்டு - செந்
(தமிழிசை பாடுகின்ற)

திருப்புகழில் மணக்கும் தமிழிசையே - தேன்
திருவாசகம் தன்னில் தமிழிசையே!
திருஅருட் பாவெல்லாம் தமிழிசையே - தமிழ்த்
தெய்வத்தை வசமாக்கும் தமிழிசையே!
(தமிழிசை பாடுகின்ற)

பூம்பாவைக்கு உயிரைத் தந்த இசை - பொங்கும்
புனலினையே எதிர்த்து வந்த இசை!
பாம்பு தன் நஞ்செடுக்க வைத்த இசை - என்றும்
பரவசம் ஊட்டுகின்ற இன்ப இசை!
(தமிழிசை பாடுகின்ற)

ராகம்: சிவரஞ்சனி
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
வரிகள்: ?இந்தப் பாடல், கர்நாடக ராகம்: சிவரஞ்சனியில் அமைந்துள்ளது!
தமிழிசையில் அமையாவிட்டாலும்... தமிழிசையைப் போற்றுகிறது!

பலப்பல தமிழ்ப் பண்கள்:  
* நட்டபாடை, கொல்லி கெளவணம்,
* குறிஞ்சி,  சீகாமரம்,
* இந்தளம், புறநீர்மை
* தக்கேசி, செவ்வழி

(குரல்/ துத்தம் - கைக்கிளை/ உழை - இளி/ விளரி - தாரம்/ குரல்)
குது - கைஉ - இவி - தாகு
= சரி - கம - பத - நிச

கர்நாடகத்தில் = ராகம் என்றால்.... தமிழில் பண்!
அதே போல்..
* ஸ்வரம் = பதம்
* தாளம் = தாளம்
* ஆரோஹணம் = ஆரோசை
* அவரோஹணம் = அமரோசை

-ன்னு கர்நாடக இசைச் சொற்களும், அதற்கு ஈடான தமிழிசைச் சொற்களும்!

தமிழ்க் கடவுள் = முருகனை, 
தமிழ்க் கடவுள் = திருமாலை, 
தமிழ்க் கடவுள் = கொற்றவையை....
தமிழ் இசையால் துதிப்போம்!!

Friday, August 09, 2013

ஆண்டாள் பிறந்த நாள்! "முருக" வாழ்த்து!

இன்று Aug 9
என் இன்-உயிர்த் தோழி, கோதையின் பிறந்தநாள்!


அவளுக்கு, என்னவன் முருகனின் வாழ்த்து இதோ:

"கோதை" பொற் குறிஞ்சி மாது கச்சு அணிந்த
     கோமளக் குரும்பை ...... புணர்வோனே 

கோலம் உற்றில் அங்கு சோண வெற்பு உயர்ந்த
     கோபுரத்தில் அமர்ந்த ...... பெருமாளே
------------


இது எங்கூரு, திருவண்ணாமலைத் திருப்புகழ்!

தற்கொலையில் இருந்து காத்த = முருகன்! அந்தக் "கோபுரத்து இளையனார்" சந்நிதி;
அதான் அருணகிரி, கோபுரத்தில் அமர்ந்த பெருமாளே -ன்னு பாடுறாரு!

கச்சு அணிந்த கோமளக் குரும்பை
= கச்சை இறுக்கக் கட்டிய மார்பு உடையவள்...
= "கோமளக் குரும்பை"; ஆகா என்னவொரு "கிக்"கான சொல்லு! Romantic:)

"கோதை" பொற் குறிஞ்சி மாது
= கோதை-ன்னா மாலை; மாலை சூடிய குறிஞ்சிப் பெண் (வள்ளி)
= கோதை -ன்னு வருவதால், இதையே ஆண்டாளுக்கு, என் முருகனின் வாழ்த்தாகவும் இட்டேன்;
------------

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் - என் முருகவனோடு
உற்றோமே ஆவேன், அவனுக்கே ஆட் செய்வேன்
மற்றை நம் காமங்கள் மாற்று, ஏல்-ஓர் எம்பாவாய்!

இது = நீ எனக்குக் காட்டிக் குடுத்த காதல் வாழ்வு!
Happy Birthday Kothai!


Thursday, August 08, 2013

வாவா!ஆறுமுக வேலவனே வாவா – ஓர்
ஆறுபடை வீடுடையாய் வாவா
ஆனைமுகன் சோதரனே வாவா – எமை
ஆளும் சிவ பாலகனே வாவா!

கோல மயில் வாகனனே வாவா – எழில்
கொஞ்சும் வடி வேலவனே வாவா
கொண்டைச் சேவற் கொடியசைய வாவா – சின்னத்
தண்டைக் கால்கள் ஒலியெழுப்ப வாவா!

தேவர்களைக் காத்தவனே வாவா – உன்
தேவயானை வள்ளியுடன் வாவா
ப்ரணவப் பொருள் சொன்னவனே வாவா – எங்கள்
சரவணனே ஷண்முகனே வாவா!

கண்மணியே கதிர்வேலா வாவா – எங்கள்
அன்புமீற உனையழைத்தோம் வாவா
இனியதமிழ்ப் பாடல் கேட்டு வாவா – எங்கள்
இன்பமெல்லாம் நீதானே வாவா!


--கவிநயா

படத்திற்கு நன்றி: http://kandans.com/

Tuesday, August 06, 2013

அம்மையானவன் எமக்கு அப்பனானவன்!

முருகன் அடிமை -ங்கிற படம்!
கே.ஆர்.விஜயா - முத்துராமன்; தேவர் பிலிம்ஸ்!

இந்தப் படத்தில் வரும் "கால்சட்டைப் பையன்" ஒருவன்... என் தோழன் போலவே இருப்பான்!
சிறு வயது புகைப்படம்; அதுக்காகவே, இந்தப் படத்தைப் பலமுறை பார்த்தது:)))
நாகேஷ், தேங்காய் சீனிவாசன், AVM ராஜன், விஜயகுமார், ஜெய்கணேஷ் -ன்னு இன்னும் ஏகப்பட்ட நடிகர்கள்!
* கே.ஆர்.விஜயா = முருக பக்தை;
* முத்துராமன் = திருடன் (ஆகிய) முருக பக்தன்

கோட்-சூட் போட்டுக்கிட்டு, திருநீறு பூசத் தயங்கியதால், ஒரு மாப்பிள்ளையை வேண்டாம் -ன்னு சொல்லும் கே.ஆர்.விஜயா:)
பண்டாரம் ஆனாலும் முருக பக்தனா இருந்தாப் போதும்-ன்னு நினைக்குற பொண்ணு! omg! same as you, my heart - loosu:))

அவளிடமே, அவன் வழிப்பறி செய்ய...
காதலாகி, கசிந்து.. எப்படியோ திருமணம் நிகழ்ந்து விடுகிறது;

அறிவுள்ள ஒரு பையன் பொறக்கிறான்; ஆனால் அல்பாயுசு;
அம்மா-அப்பாவைப் பிரிந்து, சிறுவனே, முருகனிடம் நியாயம் கேக்கக் போறான்!
நியாயம் கிடைத்ததா? = ஒங்க முருகன் ரொம்ப "நியாயஸ்தன்" பாருங்க:)நடுவில் காரைக்காட்டு நங்கை, பொய்யாமொழிப் புலவர் கதையெல்லாம் கூட வரும்! அன்றாட வாழ்க்கைக் கதையில், புராணக் கதைகளின் flashback:)

முருக விரதத்துக்காக, பெற்ற பிள்ளையையே கொல்லும் தாய் - இது போன்றவையெல்லாம் எனக்கு இசைவில்லாத "கதை"கள்:))
மார்க்கண்டேயன், சிறுத்தொண்டர் கதைகளையெல்லாம், முருகன் பேரில் "உல்ட்டா" பண்ணி இருப்பாங்க:)

கடைசியில், மாமனையே மிஞ்சும் அளவுக்கு, மால் மருகன் முருகன், "விஸ்வரூபம்" எடுப்பான்!:)
அப்போ, மூக்கு மேல கோவம் பாருங்க முருகனுக்கு! அந்த "மூக்கு" எனக்கு ரொம்பப் பிடிக்கும்:))

இருந்தாலும், பல அருமையான பாடல்கள் கொண்ட படம்! சிறுவனின் over acting இல்லாத இயல்பான நடிப்பும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்!
"அம்மையானவன் எமக்கு அப்பனானவன்" என்று TMS கணீர்க் குரலில் உருகும் முருகப் பாடல், இன்னிக்கி!


அம்மையானவன் எமக்கு அப்பனானவன்!
நன்மையானவன் உலகில் உண்மையானவன்!
(அம்மையானவன்)

தாய்மை வென்றது - பிள்ளை தவமும் வென்றது
வாய்மை வென்றது - பக்தி வலிமை வென்றது
நேர்மை வென்றது - முருக நீதி வென்றது
சுவாமி சக்தியால் - எங்கள் தருமம் வென்றது
(அம்மையானவன்)

அச்சம் தீர்ந்தது - எங்கள் அன்பும் வென்றது
ஐயம் தீர்ந்தது - ஐயன் அருளும் வென்றது
கவலை தீர்ந்தது - எங்கள் காலம் வென்றது
காலம் காலமாய் - செய்த சேவை வென்றது
(அம்மையானவன்)

படம்: முருகன் அடிமை
இசை: கே.வி.மகாதேவன்
குரல்: TMS
வரி: கண்ணதாசன்

இது போன்ற பல சினிமாக்கள்!
தமிழ்ச் சினிமாவிலே முருகன் சினிமாக்கள் = பதிவு இங்கே..

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP