Wednesday, July 31, 2013

ஆடிக் கிருத்திகை - வாரியார் குரலில்!

இன்று ஆடிக் கிருத்திகை! (Jul 31, 2013)

ஓர் ஆண்டில் மொத்தம் 12-13 கிருத்திகை வந்தாலும், 3 கிருத்திகைகள் சிறப்பாகப் பேசப்படும்
= தைக் கிருத்திகை, ஆடிக் கிருத்திகை, கார்த்திகையில் கிருத்திகை!

முருகனின் சிறப்பு நாளான இந்த நாளில், எளிய பாட்டு ஒன்னைப் பாக்கலாமா?
* பாட்டு எளிது!
* ஆனால் பாடுபவர் பெரிது! = திருமுருக. வாரியார் குரலிலே..

முருகா முருகா
முருகா முருகா

வேல் வேல் முருகா
வெற்றி வேல் முருகா

வா வா முருகா
வடிவேல் முருகாதுணைவன் என்ற சினிமாவில், துவக்கக் காட்சியாக, இந்தப் பாடல்!

(இதன் பின்னர், படத்தின் நாயகன் AVM ராஜன், வாரியாரிடமே விவாதம் செய்வார்:))) - முருகன் -ன்னு ஒருத்தன் இருக்கானா? என்று...)

படம்: துணைவன்
குரல்: வாரியார்
வரி: வாரியார்
இசை: கே.வி.மகாதேவன்

Tuesday, July 30, 2013

கந்தன் காலடியை வணங்கினால்?

இந்தச் செவ்வாயும், தேவரின், "திருவருள்" படத்திலிருந்தே:) AVM ராஜன் வாயசைக்க, TMS கணீர்க் குரலில்!
தமிழ்ச் சினிமாவில் முருகன் சினிமாக்கள் = இங்கு வாசிக்கலாம்!:)

பாட்டுக்குப் போவோம்!
கண்ணன் அவன் தாய்மாமன்
மாமனுக்குப் பிள்ளையில்லை; மருமகன் தான் திருமகன்!! 
- இந்த வரியில், வீடியோவில் நிறுத்திப் பாருங்க! சுவையான காட்சி!

- என் அப்பா திருமாலும், என்னவன் முருகனும்.. அழகோ அழகு!:)


கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே..
(கந்தன் காலடியை..)தந்தை பரமனுக்குச் - சிவகுரு நாதன்
தாயார் பார்வதியின் - சக்தி தானே வேலன்
அண்ணன் அவன் கணேசன்
கண்ணன் அவன் தாய்மாமன்
மாமனுக்குப் பிள்ளையில்லை; மருமகன் தான் திருமகன்!!
(கந்தன் காலடியை..)

உமையவள் தன் வடிவம் - மதுரையில் மீனாட்சி
உருவத்தில் மாறுபட்டாள் - காஞ்சியில் காமாட்சி
கங்கையிலே குளிக்கின்றாள் - காசி விசாலாட்சி
அன்னையர்கள் பலருண்டு - அவனுக்கு இணை எவனுண்டு?
(கந்தன் காலடியை..)

பிரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே
அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே
அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்
கந்தன் அடியவருக்கு அவனும் அருளுவான்

கந்தனிடம் செல்லுங்கள் - என்ன வேண்டும் சொல்லுங்கள்
வந்த வினை தீர்ந்து விடும் - மற்றவற்றைத் தள்ளுங்கள்
(கந்தன் காலடியை..)

படம்: திருவருள்
குரல்: TMS
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
வரி: கண்ணதாசன்

Love u Muruga:)
Be nice with my Father:))

Tuesday, July 23, 2013

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!

இன்றைய பாடல் = "உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே"!

திருவருள்-ன்னு ஒரு படம் வந்துச்சி!
தேவரின் மருதமலையைச் சிறப்பித்து என்றே வந்த படம்!

தேவர் பிலிம்ஸ்! குன்னக்குடி இசை..
சீர்காழி-குன்னக்குடி இருவருமே படத்தில் தோன்றுவார்கள்!
வாரியார் சுவாமிகளும் தோன்றி, மருதமலை முருகனைப் பற்றிப் பேச ஏற்பாடு செய்தார் சின்னப்ப தேவர்!

AVM ராஜன் ஒரு முருக பக்தர்! "முருக வெறியர்" -ன்னு கூடச் சொல்லலாம்! :)
நல்ல குரல் வளம் அவருக்கு!
அவர் பாடுவதைக் கேட்ட ஒரு கம்பெனி முதலாளி, அவருக்குத் தன் நிறுவனத்தில் வாய்ப்பு கொடுக்க...
வெறும் பாடகர் AVM ராஜன், பெரும் பாடகர் ஆகி விடுகிறார்!

ஒன்று வந்தால் -> இன்னொன்றைக் கை கழுவி விடுவார்கள் பலர்!
ஆனால் முருக அன்பர்கள்??

AVM ராஜன் "முருகக் காதலை" விடவே இல்லை!
பழசை மறக்கவில்லை! ஆனால் அவர் காதலி-மனைவி அப்படி இல்லை போலும்! முன்பு, கோவிலில் பூக்கட்டி வாழ்ந்த பூக்காரி!
பூக்காரி -> புதுக்காரி ஆகி விட்டாள்!
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி! அவளுக்கு முருகனிலேயே மூழ்கி இருப்பது சுத்தமாய்ப் பிடிக்கவில்லை!
முருகன் Vs ஆசை -ன்னு வந்துட்டா, முருகனா முக்கியம்? தத்தம் ஆசை தானே முக்கியம்?:)

* முருகனையே எண்ணிக் கைப் பற்றியவன்
* பண முதலின் எண்ணிக்கை பற்றுபவள்
இவர்கள் உறவு முறிந்ததா? = முருகன் "முறிப்பானா" என்ன?

அவன் மனது வைத்தால்....
நடவாதனவும் நடந்திடாதா?
இசையாதனவும் இசைந்திடாதா? = பிரிந்தவர் சேர்ந்தனர்!

படம் முழுக்க TMS ஆட்சி தான்!
* மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க...
* கந்தன் காலடியை வணங்கினால்...
* உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே...
-ன்னு அத்தனையும் TMS-இன் கணீர்ச் சொத்து!

சுசீலாம்மாவும் மாலை வண்ண மாலை -ன்னு பாடி இருப்பாங்க!
சீர்காழியும் ஒரு சூப்பர் பாட்டு பாடி இருப்பார்!
= முத்துத் திருப்புகழைச் செப்பி விட்ட அருணகிரி முருகனைக் கண்ட இடம் அண்ணாமலை -ன்னு கம்பீரமாக இழுப்பார்!

இருப்பினும், எனக்குப் பிடித்தமான பாடல்
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே...
= ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!

என் உடம்புக்கும் உள்ளத்துக்கும் "அதிகாரம்" = அவனுக்கே!உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!

நிதி வேண்டும் ஏழைக்கு - மதி வேண்டும் பிள்ளைக்கு
நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்!
(உலகங்கள் யாவும் உன்)

மனம் உள்ளவர் குணம் உள்ளவர் - மனதுக்குச் சுகம் வேண்டும்!
தனம் உள்ளவர் அதில் பாதியை - பிறருக்குத் தர வேண்டும்!

ஆறெங்கும் நீர் விட்டு - ஊரெங்கும் சோறிட்டு
பாரெங்கும் நலம் காண வரம் வேண்டுமே! 
உந்தன் வரம் வேண்டுமே!
(உலகங்கள் யாவும் உன்)

பாடு பட்டவன் பாட்டாளி - அவன் மாடிக்கு வர வேண்டும்!
பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப் - பாரதம் பெற வேண்டும்!

நாடெங்கும் சேமங்கள் - வீடெங்கும் லாபங்கள்
நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே! - முருகா
அருள் வேண்டுமே! - திருவருள் வேண்டுமே!
முருகனருள் வேண்டுமே!

படம்: திருவருள்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
வரி: கண்ணதாசன்
குரல்: TMS

Friday, July 19, 2013

முருக "வாலி" - அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே!

வாலி
* இராமாயண வாலி = நம்முடைய பாதி பலம், அவனுக்குப் போய் விடும்!
* கவிஞர் வாலி =  அவருடைய பாதித் தமிழ், நமக்கு வந்து விடும்!


அரங்கன் காலடியில் பிறந்தாலும்
முருகன் வேலடியில் வாழ்ந்தவர்!

அதென்ன "வாழ்ந்தவர்"?
...இன்னும் பல நாள் வாழ்வார் - தமிழொடு!


பொன்னுடலுக்கு மட்டும், நம் கரம் கூப்பிய அஞ்சலி! என் கண்மலர் வணக்கம்!All Young - MSV, Vaali, P Susheela, TMS

வாலி, Train Station -இல் எழுதிக் காட்டிய முருகன் பாட்டு = "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்"...
அதைப் படித்த TMS, அந்தச் சொற்செட்டில், தானாவே இசையும் அமைந்து விடுவதை வியந்து.. இன்னும் பல அறிமுகங்களை உருவாக்கித் தந்தார்;

* கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் = எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டு என்றாலும்...
* அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே = வாலியின் முருக முத்தில்.. அரும்பெரும் முத்து...

(என் தனிப்பட்ட கருத்து மட்டுமே: 
சில திருப்புகழ்ப் பாடல்களை விட..வாலியின் இந்த முருகச் சினிமாப் பாடல்... ஏனோ என் உள்ளத்தை... ரொம்ப உருக்கி எடுக்கும்!)

அதுவே இன்று... முருகனருள் வலைப்பூவில் = "வாலி அஞ்சலி!"பாடலைக் கேட்டுக் கொண்டே படியுங்கள்!

அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே!
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே!
(அம்மாவும் நீயே!)

தந்தை முகம், தாயின் முகம், கண்டறியோமே!
மனச் சாந்தி தரும் இனிய சொல்லைக் கேட்டறியோமே!
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

முருகா முருகா முருகா முருகா
(அம்மாவும் நீயே!)

பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே
பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே!
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

முருகா முருகா முருகா முருகா
(அம்மாவும் நீயே!)

வரி: வாலி
படம்: களத்தூர் கண்ணம்மா
இசை: ஆர்.சுதர்சனம்
குரல்: எம்.எஸ்.ராஜேஸ்வரிஇந்தப் பாட்டை வாலியா எழுதினார்?
- என்ற சந்தேகம் வரும் அளவுக்கு...
- அவர் Trademark சொற்செட்டே அதிகம் இல்லாமல்..
- நேரடியாக, மனசோடு பேசும் பாட்டு;

என் முருகனின் சட்டையை உலுக்கி, டேய் முருகா ஆஆ -ன்னு அவன் கன்னத்தில் அறைந்து,
அறைந்த என் கையும், அவன் கையும் கோத்துக்கிட்டு..
அவன் தோளில் சாய்ந்து கொள்வேன்... கீழ்க்கண்ட ரெண்டே வரியில்!
= வாலி (வலி) வரி!

எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?
-----
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

கருணையே இல்லையாடா முருகா? = (சேவல்) "கொடியவா"!
இன்றும்.. அதே ரீங்காரத்தில்.. நான்..

* வாலிக்கு = அரங்கன் மேல் இனம் புரியாத காதல்! முருகனை = அம்மாவும் நீயே, அப்பாவும்  நீயே என்றார்!
* எனக்கோ = முருகன் மேல் "இனம் புரிந்த" காதல்! அரங்கனை = அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே என்பேன்!

இப்படி... என்....
மன வரியின் முகவரி = வாலி வரி;
வாலி வாழ்க!

Monday, July 15, 2013

வருவான் வடிவேலன்!

வருவான் வடிவேலன் -ங்கிற படம்!
ஈழம், சிங்கை, மலேசியா, பெனாங்கு -ன்னு பல நாடுகளில் போய்ப் படம் புடிச்சாங்க! பல நல்ல பாடல்கள்...
TMS, சுசீலாம்மா, சீர்காழி, வாணி ஜெயராம், LR ஈஸ்வரி, LR அஞ்சலி -ன்னு ஒரு இசைப் பட்டாளமே பட்டாசு கெளப்பிய படம்!


அதில் இந்தப் பாட்டும் ஒன்னு; படத்தின் ஆரம்பப் பாட்டே இதான்!
திருத்தணி மண்டபத்தில்... இந்தக் காட்சி!

என்னடா இது, கடந்த சில பதிவுகள்-ல்லாம் ஒரே திருத்தணியா வருதே-ன்னு பாக்காதீக:)
பாட்டின் இரண்டாம் பத்தியைக் கவனிங்க..
சிரித்துக் குறத்திப் பெண்ணை அணைக்கின்றவன்
அவள் செங்கனி வாய் இதழை நனைக்கின்றவன்

"வாய் இதழை நனைத்தல்" -ன்னா என்னடா முருகா? கொஞ்சம் சொல்லேன், தெரிஞ்சிக்குறேன்:)வருவான் வடிவேலன் - தணிகை
வள்ளல் அவன் - 
அழகு 
மன்னன் அவன் - நினைத்தால்
வருவான் வடிவேலன்!


சிரித்துக் குறத்திப் பெண்ணை அணைக்கின்றவன்
அவள் செங்கனி வாய் இதழை நனைக்கின்றவன்
இடையினில் கை கொடுத்து வளைக்கின்றவன்
அள்ளி இடுகின்றவன் சொர்க்கம் தருகின்றவன்
(வருவான் வடிவேலன்)

முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா

அடியவர் கேட்ட வரம் அருள்கின்றவன் - என்றும்
அவர் கண்ணில் நேராகத் தெரிகின்றவன்
கொடியவர் பகை தீர்த்து முடிக்கின்றவன் - சேவல்
கொடியன் அவன் நமக்கு இனியன் அவன்
(வருவான் வடிவேலன்)

திருமுருகாற்றுப்படை நான் பாடவா - இல்லை
திருப்புகழ் பாடி இங்கு நடமாடவா - கந்தர்
சட்டிக் கவசக் கதை பாடவா - அவன் முன்
கையேந்தவா வெற்றிக் கடல் நீந்தவா?
(வருவான் வடிவேலன்)

குரல்: வாணி ஜெயராம்
வரி: கண்ணதாசன்
இசை: MSV
படம் : வருவான் வடிவேலன்தணிகை = வள்ளி-முருகன் திருமணத் தலம்!
அதனாலேயே, என் மனசுக்கு மிகவும் பிடிச்ச தலம்!

வெறும் வாய்-இதழை மட்டும் நனைக்கவில்லை முருகன்!
வள்ளியின் காலையே, இங்கு பிடிச்சானாம்!
= குறமகள் பாதம் வருடிய மணவாளா
தனக்காகவே, காத்துக் கெடந்து, கால் போன போக்கில் நடையா நடந்தவ = அவ மன வலிக்கு/ கால் வலிக்கு - பாதம் வருடிய மணவாளா!
------

வருவான் வடிவேலன் = இந்தப் படத்தில், ஒரு பெண்ணை அவள் காதல் கணவன் தள்ளி வைக்கிறான்;
காரணம்: தன் கருத்தை / தொழிலை முன்பு எதிர்த்தவள்... என்பதால்!
Former Competitor; So show love 1st & then completely destroy her life:)

ஆனால், அவளோ, "அவனே" -ன்னு வாழ்கிறாள்;
அவன் மூலமாவே ஒரு பால முருகனைப் பெத்துக்குவேன் -ங்கிற நிலையில் நிக்குறா!

நடக்கக் கூடிய காரியமா இது?
அவன் வெறுப்பெங்கே? இவள் விருப்பெங்கே?

நடந்ததா? படத்தில் பாத்துக்கோங்க!:) = வருவான் வடிவேலன்!


Monday, July 08, 2013

Can Murugan Dance? சிந்தனையில் மேடை கட்டி!

ஈசன் நடனம் ஆடுவாரு! முருகன் நடனம் ஆடிப் பாத்து இருக்கீங்களா?

Dance of Murugan! Very Rare!
ஆனா, செந்தூரில், அருணகிரிக்காக ஆடி இருக்கான்!

எவ்ளோ "சுகித்து" வாழ்ந்த அருணகிரிக்கு, ஒரு "பிள்ளைத்தனமான" ஆசை; முருகனை ஆட வச்சிப் பாக்கணும்-ன்னு.. :))
திருச்செந்தூரில், வாய் விட்டுக் கேட்டேபுட்டாரு!


Haiyo, இப்பிடித் திடீர்-ன்னு கேட்டுப்புட்டாரே; அவனுக்கு ஆடத் தெரியுமா?
= பரதநாட்டியம், கதக், குச்சிப்புடி, டிஸ்கோ... :)

டேய் முருகா, நானும் உன் "தய்யா தக்கா"-வைப் பாக்கணும்டா; பாத்துட்டு ஒன்னைய காதோரமா கேலி பண்ண, எனக்கு ரொம்ப ஆசை!:)

Hey, என்ன தான் இருந்தாலும், மாமா ஈசனைப் போல ஒன்னால ஆட முடியுமாடா?
sorry sorry; He 8 ft, You 16 ft:)
ஆடுறா முருகா, ஆடுறா!  Please da... love u da!


முருகனை, நம்ம விருப்பத்துக்கெல்லாம், "ஆடுறா, ஆடுறா" -ன்னு ஆட வைக்கலாமா?
= அது சரியா? தப்பா?

* சரி-ன்னா, எப்படி ஆட வைக்கலாம்?
= சிந்தனையில் மேடை கட்டி, கந்தனையே ஆட வைத்தேன்

* தப்பா?
= இல்லவே இல்லை! அவன் விருப்பமும் அது தான்!

ஆனா, நம்ம சுயநலத்துக்கெல்லாம் ஆட மாட்டான்; அவனே அவனே-ன்னு காதலிக்கும் போது, அவன் காதலிக்கு ஆடும் காதலன்!

செந்தமிழில் சொல்லெடுத்து, எந்தனையே பாட வைப்பான்..
நான் பாட, அவன் ஆட
என்- சிந்தனையில் மேடை கட்டி, கந்தனையே ஆட வைத்தேன்


திருமலை-தென்குமரி -ன்னு ஒரு படம்;
வடவேங்கடம் to தென்குமரி = Bus Tour!

என் அபிமான இயக்குநர் ஏ.பி. நாகராஜன்; நம்ம குன்னக்குடி தான் படத்துக்கு இசை!
படத்தில், பல சுவையான (இன்றைய பசங்களுக்கு மொக்கையான) காட்சிகள்:)

பல தலங்களையும் காட்டுவார்கள்;
பல தரப்பு (மொழி-இனம்-பணம்) குடும்பங்கள், ஒரே பேருந்தில், ஒன்றாகச் செய்யும் தல தரிசனம்!
Of course, சுருளிராஜன் & மனோரமா the best! ...and young Sivakumar, like today's Suriya:)

திருத்தணியில், இந்தப் பாடல் படமாக்கப்பட்டது...சிந்தனையில் மேடைகட்டி
கந்தனையே ஆட வைத்தேன்
செந்தமிழில் சொல் லெடுத்து
எந்தனையே பாட வைத்தான்..
(சிந்தனையில்)

தணிகைமலை மேல் அமர்ந்தான்
தத்துவமே பேசு கின்றான்
பழனிமலை தேடி வந்தான்
பரம்பொருளாய்க் காட்சி தந்தான்..
(சிந்தனையில்)

செந்தூரில் கோயில் கொண்டான்
சிங்கார வேலைக் கண்டான்
அழகர்மலை சோலை நின்றான்
ஆடும்மயில் ஏறி வந்தான்..
(சிந்தனையில்)

பரங்குன்றில் ஆட்சி செய்தான்
பாமாலை சூடிக் கொண்டான்
சாமிமலை வாசல் வந்தான்
காவடிகள் கோடி கண்டான்..
(சிந்தனையில்)

இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
குரல்:  சீர்காழி கோவிந்தராஜன்
படம்:   திருமலை தென்குமரி

வரிகள்: தென்கச்சி பாரதிசாமி
(அதிகம் அறிந்திராத கவிஞர்; அம்மன் மேல் பல பாடல்கள் எழுதியவர்; Album (இசைத்தொகை) -யாக வெளி வந்திருக்கு;

Monday, July 01, 2013

கலைக்கோவில் MSV: தேவியர் இருவர் முருகனுக்கு!

ஒரு இசையமைப்பாளர் -> தயாரிப்பாளர் ஆகின்றார்!
= எதற்கு?
= கம்பீரமான வீணை இசையை, படம் முழுக்க ஓட விட!
திரையிசைச் சக்கரவர்த்தி, MSV இசையமைத்து + தயாரித்த படம் = கலைக் கோவில்!
சீர்மிகு-சீரழி இசைக் கலைஞனே = கதா நாயகன்! (முத்துராமன்)

பின்னாளில்.. இதே போன்று கதையமைப்பில், பல வெற்றிப் படங்கள் வந்தன; (சிந்து பைரவி)
ஆனா அந்நாளில்?.. முதலில் வந்த படம், தோல்வியில் தான் முடிந்தது!

Box Office Hit, என்பதற்குப் பதிலாக, Box Hit Office -ன்னு சொன்னாராம், கையைச் சுட்டுக் கொண்ட MSV!
*இது MSV- க்கு வேண்டுமானால் = தோல்விப் படம்;
*ஆனால் வீணை இசைக்கு = வெற்றிப் படமே!

சிட்டிபாபு = பிரபல சம்பிரதாயக் கலைஞர்; ஆனால் புது முயற்சிகளை ஆதரிப்பவர்; அவரே படம் முழுதும் வீணை வாசிக்கிறார்;
படத்தின் கதாநாயகன் = முத்துராமன் அல்ல! வீணையே!இந்தப் படம், மலையாளத்தில் வந்திருந்தால் வெற்றி அடைந்திருக்கும்; Art + Commercial Cinema!
ஆனால், மலையாள மண்ணில் தோன்றிய MSV, தமிழுக்கே தன் ஆத்ம அர்ப்பணிப்பை வழங்கினார்!

*படத்தின் Mega Hit பாடல் = LR Eswari பாடும், "வரவேண்டும் ஒரு பொழுது"; Full in Jazz & Exploding Instrument Medley!
*ஆனாலும், இந்த முருகன் பாடல், என் மனசுக்கு மிகவும் புடிச்ச பாட்டு; ஏஏஏஏனடி தோழி அறிவாயோ? சுசீலாம்மா "திருமாஆஆஆல்" -ன்னு இழுப்பாங்க வீணையைப் போலவே!

போட்டி: வீணைக்கும் சுசீலாம்மாவுக்கும் தான்:)

இவள்: எனக்கோர் இடம் நீ தருவாயோ?
அவன்: என்னோடு தன்னை அவன் இணைத்து விட்டான்!


படம்: கலைக் கோவில்
குரல்: பி.சுசீலா
இசை: எம்.எஸ்.வி
வரிகள்: கண்ணதாசன் (உதவி: பஞ்சு அருணாசலம்)

வீணை: சிட்டிபாபு
ராகம்: ஸ்ரீ ராகம் (எந்தரோ மகானுபாவுலு என்னும் அதே ராகம்)தேவியர் இருவர் முருகனுக்கு
திருமால் அழகன் மருகனுக்கு
ஏனடி தோழி அறிவாயோ?
எனக்கோர் இடம் நீ தருவாயோ?

கலைகளிலே அவன் மறைந்திருந்தான்
கை விரலில் அவன் பிறந்து வந்தான்
இதயத்தை மெல்ல மெல்ல மீட்டி விட்டான்
என்னோடு தன்னை அவன் இணைத்து விட்டான்!
(தேவியர் இருவர் முருகனுக்கு)

ஒருமுகம் அவனை உணர்ந்ததடி
இருமுகம் ஒன்றாய்க் கலந்ததடி
அறிமுகம் சுவையாய் முடிந்ததடி
அந்நேரம் தன்னை மனம் மறந்ததடி!
(தேவியர் இருவர் முருகனுக்கு)


என்னவன், எந்தை

என் காதல் முருகனை, என் தந்தை திருமாலுக்கு இணையாக வைத்துப் பேசும் போது, மனசு என்னமோ பண்ணும்!
புகுந்த வீட்டிலும், அன்பில் தோய், தாய்-தந்தையை நினைச்சி வாழும் ஒரு பெண்ணின் நிலைமை...

*முருகனுக்கு எத்தனையோ பேர்கள்! = வெகு கோடி நாம, சம்பு குமாரா நமோ நம!
*ஆனாலும், அந்த ஒரு பேர் = மால் மருகன்!

"திருமால் அழகன் மருகனுக்கு" 
-ன்னு சொல்லும் போது மட்டும்.. என்னமோ பண்ணுது; தொன்மையான சங்கத் தமிழ் மாயோன்-சேயோன்; உம்ம்ம்.. எனக்கு சரியாச் சொல்ல வரலீங்க.. அடைக்குது.. பதிவை முடிச்சிக்கறேன்;

மருகவா முருகவா..
எனக்கோர் இடம் நீ தருவாயோ
எனக்கோர் இடம் நீ தருவாயோ

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP