Monday, February 27, 2012

முருகா முருகா வாடா!


சுப்பு தாத்தா பாடித் தந்ததை கேட்டு மகிழுங்கள்! நன்றி தாத்தா!

முருகா முருகா வாடா - சின்ன
முத்துக் குமரா வாடா!
கந்தா கடம்பா வாடா - எங்கள்
கார்த்தி கேயா வாடா!

சின்னஞ் சிறு அடி எடுத்து – முருகா
சித்திரம் போல் நடந்து வாடா!
வண்ண மணி ஒலித்திடவே – நீயும்
வண்ண மயில் ஏறி வாடா!

சந்தத் தமிழ் பாட்டுனக்கே – செல்லமே
கேட்க நீயும் ஓடி வாடா!
சங்கத் தமிழ் தந்தவனே – எங்கள்
சங்கடங்கள் தீர்க்க வாடா!

நானிருக்கும் நாள் வரைக்கும் – முருகா
நாடி உனை வணங்கிடணும்!
தேனிருக்கும் உன் பெயரே – தினமும்
என் நாவில் தவழ்ந்திடணும்!

--கவிநயா

11 comments:

குமரன் (Kumaran) February 27, 2012 11:25 PM  

இரவி எழுதுனா மாதிரி இருக்குக்கா! :-)

sury siva February 28, 2012 9:26 AM  

பாடலை இங்கே கேளுங்கள்.

subburathinam
www.kandhanaithuthi.blogspot.com

Kavinaya February 29, 2012 3:49 PM  

//இரவி எழுதுனா மாதிரி இருக்குக்கா! :-)//

அப்படியா. நல்லது குமரன் :) ஆமா, அவர் எங்கே, ஆளையே காணும்?

Kavinaya February 29, 2012 3:51 PM  

//பாடலை இங்கே கேளுங்கள்.//

கேட்டு மகிழ்ந்தேன். இடுகையிலும் சேர்த்துட்டேன் தாத்தா. மிகவும் நன்றி.

Unknown March 21, 2012 6:42 AM  

pattu arumai

Lalitha Mittal March 21, 2012 11:48 PM  

ரொம்ப உரிமையா நம்ம குட்டீசைக் கூப்பிடராப்லே இருக்கு பாட்டு;மிகவும்ரசித்து கிட்டத்தட்ட டெய்லி வந்து என்ஜாய் பண்ணிட்டுப்போறேன் !படம் படு ஜோர் !முருகன் ஜாலியா ஏ சீ லே படுத்துண்டு இருக்காப்லே தோண்றது!ஹிந்து பேப்பர்லே "தாமரைப்பூவில் ஏ சீ இபக்ட்இருக்கு"ன்னு ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை ரொம்ப நாள் முன்னே படிச்சது நெனவு வந்தது!படத்தை ஒருநாள் திருடப்போவது நிச்சயம்!!

இராஜராஜேஸ்வரி May 02, 2012 2:25 AM  

தேனிருக்கும் உன் பெயரே – தினமும்
என் நாவில் தவழ்ந்திடணும்!

தேனாய் இனிக்கும் அருமையான பாடல் பகிர்வு. பாராட்டுக்கள்

Kavinaya May 10, 2012 3:06 PM  

//jaisankar jaganathan said...

pattu arumai//

மிகவும் நன்றி!

Kavinaya May 10, 2012 3:07 PM  

//ரொம்ப உரிமையா நம்ம குட்டீசைக் கூப்பிடராப்லே இருக்கு பாட்டு;மிகவும்ரசித்து கிட்டத்தட்ட டெய்லி வந்து என்ஜாய் பண்ணிட்டுப்போறேன் !படம் படு ஜோர் !முருகன் ஜாலியா ஏ சீ லே படுத்துண்டு இருக்காப்லே தோண்றது!//

ரசிச்சதுக்கு ரொம்ப நன்றி லலிதாம்மா. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு உறவு எனக்கு. அதில் முருகன் எனக்கு குழந்தை!

//ஹிந்து பேப்பர்லே "தாமரைப்பூவில் ஏ சீ இபக்ட்இருக்கு"ன்னு ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை ரொம்ப நாள் முன்னே படிச்சது நெனவு வந்தது!படத்தை ஒருநாள் திருடப்போவது நிச்சயம்!!//

உண்மைதான் போல. அதான் எல்லோரும் அங்கேயே போய் உக்காந்துக்கறாங்க :)

Kavinaya May 10, 2012 3:08 PM  

//தேனாய் இனிக்கும் அருமையான பாடல் பகிர்வு. பாராட்டுக்கள்//

எனக்கு பிடிச்ச வரி அம்மா. உங்களுக்கும் பிடித்திருப்பதில் மிகவும் சந்தோஷமும் நன்றியும்!

Positive Energy Articles May 17, 2012 9:52 PM  

கலியுக கடவுளாம் முருகனைப் போற்றுவோமே

பேரன்புமிக்க தங்களது பணி சிறக்கவும், நலம் வளம் பெற்று மகிழ்வுடன் வாழ எல்லாம் வல்ல
இறை யருளும் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் குருவருளும் துணை நிற்க எங்களது பிரார்த்தனைகள்,
வாழ்த்துக்களுடன்
என்றென்றும் அன்புடன்
எம் எஸ் சேர்வராயர்
கலியுக கடவுளாம் முருகனைப் போற்றுவோமே

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் முக்கிய பாடல்களும்,முருகனைத் துதிக்கும் பல பாடல்களின் தொகுப்பும்கீழே தரப்பட்டுள்ள வலைப்பூவில் காணலாம்.தங்களின் மேலான விமர்சனங்களைப் பதிவதோடுமற்ற அன்பர்களுக்கும் தெரிவிக்கவும்
http://mscherweroyar.blogspot.com/

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP