Thursday, July 07, 2011

முருகன்: கடவுள் பேர்சொல்லி, காணாமல் போகின்ற...

முருகனருள் அன்பர்களே, வெளிநாட்டுப் பயணமா வந்திருக்கேன்! சில காரணங்களால் இரவெல்லாம் வலி!
ஆறுதலுக்குத் தோழனை அழைக்க எண்ணி, செல்பேசியில் தட்ட, என் mp3 தொகுப்பில் கைதவறி இந்தப் பாடல் அழுந்தி விட்டது! வருகின்றான் முருகன் வருகின்றான்...ன்னு அலற...

என் முருகனே, வந்து...வந்து...வலியெலாம் விரட்டி...மெத்த்த்த்தென்று கால் பிடிச்சி விட்டாப் போல...ஒரு ஈரத்தில் அப்படியே தூங்கி விட்டேன்...

TMS பாடியது! நான் சொல்வதற்குப் பதிலா, நீங்களே இந்தப் பாடலைக் கேளுங்க! பொருள் வீறினால், உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிப் போகும்! - வருகின்றான் முருகன் வருகின்றான்!!வருகின்றான் முருகன் வருகின்றான்! - இந்த
வையத்தினை மாற்ற...வாழும் வழி கூற...
(வருகின்றான் முருகன் வருகின்றான்)

பெறுகின்ற பொருளாலே பெருமானையே மறக்கும்
பித்தரின் தலைமேலே பிரம்பால் அடித்திடவே
(வருகின்றான் முருகன் வருகின்றான்)

துன்பத்தில் அவன்பாதம் நாடிவிட்டு - அவன்
துணையாலே வாழ்வெல்லாம் தேடிவிட்டு
இன்பத்தில் அவன்நாமம், தன்னை மறக்கின்ற
ஈனரைப் பதம் பார்க்க, இன்றே தான் விரைந்து...
(வருகின்றான் முருகன் வருகின்றான்)

கடவுள் பெயர்சொல்லி...பொருள்சேர்த்து - பின்பு
காணாமல் போகின்ற சிறியோரை,
அடையாளமே இன்றி அழித்திடவே - வெகு
ஆவேசமாய்க் கடம்பைக் கையோடு கொண்டு...
(வருகின்றான் முருகன் வருகின்றான்)

குரல்: TMS
வரி: ?
தொகுப்பு: "முருகா என்றழைக்கவா"


இன்று, போலி குருக்களைக் கைக்கொண்டு, தன் பாவத்தை போயும் போயும் இன்னொரு பாவியா கரைக்க முடியும் என்ற சாதாரண அறிவு கூட இல்லாது....

மாய மந்திர வித்தைகளுக்கும், குறி சொல்லுதற்கும், ஆரவார யோகம்-குண்டலினி-ன்னு வணிகத்தை அரங்கேற்றும் ஆன்மீக வணிகர்களை....ஒரே வரியில் என்ன சொல்லுறார் பாருங்க...

கடவுள் பெயர்சொல்லி...பொருள்சேர்த்து - பின்பு
காணாமல் போகின்ற சிறியோரை....
இது தான் நாட்டு நடப்பில், கண்ணெதிரே காணும் உண்மை! குதிரை மீதிருந்தும் விழும் உண்மை! பகுத்தறிவே திருநள்ளாறு போனாலும், தோற்கும் உண்மை!

சுய-நலத்துக்காக, குறுக்கு வழியில் மோட்சம் கிடைக்காதா, துன்பம் விலகாதா-ன்னு போலி குருக்களிடம் போவானேன்? நோவானேன்??
அன்பால் தடவித் தரும் இனிய குரு...அவனே இருக்கும் போது...குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

உண்டியலில் எந்த ஆழ்வாராவது காசு போட்டு இருக்காரா? இல்ல, உண்டியல் காசால் பாவம் தான் கரையுமா?
கண்ணிலே தான் ரெண்டு சொட்டுத் தண்ணி இருக்கே! பாலைவனத்திலும் அந்தத் தண்ணி வத்தாதே! அதால் கரையாததா, காசால் கரையப் போகுது?

முருகாஆஆஆ என்று வலியில் சிந்தும் அந்த விழித்துளி மலர்கள்!
என்னவனுக்கு என் ஈரம்! வருகின்றான் முருகன் வருகின்றான்!!

6 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் July 08, 2011 12:10 AM  

ஆகா அருமை அருமை..

என் நெடுநாள் மனக்குறை ஒன்று இந்த பாடலை கேட்டபோது ( படித்தபோது விட கேட்டபோது )

சட்டென்று தீர்வு கண்டது..

முருகன் இருக்கிறான்..

முருகா.. முருகா.. முருகா...

சிவ.சி.மா. ஜானகிராமன் July 08, 2011 12:14 AM  

வணக்கம் தோழரே,

ஒரு உதவி,

நமது பதிவில் இதுபோல ஆடியோ கிளிப்பை இணைக்க உதவும் வழிமுறை என்ன ?

அந்த சிறிய க்ரீன் கலரில் இருக்கும் ஆடியோ பிளேயரை பெறுவது எப்படி ?

பதிவில் இணைப்பது எப்படி ?

விளக்கம் தந்து உதவ வேண்டுகிறேன்..

அல்லது அதை பெறுவதற்கான இணைப்புத் தளத்தை அறிமுகப் படுத்த வேண்டுகிறேன்.

நன்றி...

திகழ் July 08, 2011 9:42 AM  

காலத்திற்கும் நேரத்திற்கும் ஏற்ற வரிகள்

கைதவறி வந்தாலும் காரணத்துடன் தான் வந்ததாக
உள்மனது சொல்கிறது

புண்பட்ட நெஞ்சம் பண்ணோடு கேட்கும்போது பண்பட்ட உணர்வு

வாழ்த்துகள்

kannabiran, RAVI SHANKAR (KRS) July 10, 2011 6:47 PM  

திரு ஜானகிராமன்
//என் நெடுநாள் மனக்குறை ஒன்று இந்த பாடலை கேட்டபோது...//

மகிழ்ச்சி! முருகன் பிறர்க்கு மகிழ்ச்சி அளிப்பது கண்டு மிகவும் மிகழ்ச்சி!

//அந்த சிறிய க்ரீன் கலரில் இருக்கும் ஆடியோ பிளேயரை பெறுவது எப்படி ?//

Sorry! வெளியூர்ப் பயணத்தில் இருந்ததால் சட்டென்று பதில் சொல்ல முடியலை!
1. Goto podbean.com
2. Open an Account (free)
3. Upload music from your computer (mp3)
4. It automatically publishes and gives code for embedded player
5. Just copy & paste that in your blog!

அவ்ளோ தான்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) July 10, 2011 6:50 PM  

நன்றி திகழ்! பாட்டு உங்களுக்கும் பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி!

சில சமயம் தனித்த இரவுகள் மனதைக் கொல்லும்! அப்போ எல்லாம் சில பாடல்களும் ஒரு தொலைபேச்சும் மட்டுமே என்னைத் தாங்கிப் பிடிக்கும்!

பயந்த தனி வழிக்கு...
துணை வடிவேலும்
செங்கோடன் மயூரமுமே!

adithyasaravana July 12, 2011 1:15 AM  

thanimaiyum.. paadalgalum??
naangellaam irukkomla thambi..

rava dosai saaptiya?

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP