Thursday, January 13, 2011

பக்தர்களை அறிந்தவன் பழநி அப்பன்!


பக்தர்களை அறிந்தவன் பழநி அப்பன்!





மலை தெரியுது மலை தெரியுது கண்ணிலே - பழனி
மகராஜன் முகம் தெரியுது விண்ணிலே!
அலை தெரியுது அலை தெரியுது வழியிலே - வேலன்
அருள் தெரியுது அருள் தெரியுது ஒளியிலே!

இருள் விலகுது இருள் விலகுது வாருங்கள் - அங்கே
இலை நடுவினில் கனி தெரியுது தேடுங்கள்!
பொருள் குவிந்திடப் பொருள் குவிந்திடப் பாடுங்கள் - அவன்
புகழ் மலையினைக் கால் நடையினில் நாடுங்கள்!


வயது சென்றவர் இளைஞர் என்பவர் யாவரும் - அந்த
வானுலகத்து தேவர் தம்மொடு மூவரும்
வயலில் மீன்கள் குதிக்கும் இந்தக் கழனியை - நாடி
வந்து நிற்பார் வணங்கி நிற்பார் பழனியை!

கட்டியதோ ரெண்டு தாரம் அவனுக்கு - ஒண்டிக்
கட்டையாக வந்தது இந்தப் பழனிக்கு
வட்டியோடு முதலும் சேர்த்து மனதுக்கு - வாரி
வழங்கத் தானே வந்து விட்டான் தனிமைக்கு!

செட்டி என்னும் ஒரு பெயரைச் சுமந்தவன் - கந்தன்
தேவியையே அதன் வழி தான் மணந்தவன்
எட்டுத் திக்கும் நமது சேவை அறிந்தவன் - நாம்
இன்று வரும் நேரம் கூடத் தெரிந்தவன்!

வரி: கவிஞர் கண்ணதாசன்
(பழம் நீ நூலுக்காக எழுதியது)

இன்னும் இது போல் இதர பாடல்களை ஒளிவருடி அனுப்பிய, வாத்தியார் சுப்பையா சாருக்கு நன்றி!

5 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) January 13, 2011 6:49 AM  

Wow!
Welcome back, vaathiyaar ayya! :)

Kannabiran, Ravi Shankar (KRS) January 13, 2011 6:58 AM  

This is 199th post in MuruganaruL
அடுத்த பதிவு 200ஆம் பதிவு! :)

Kannabiran, Ravi Shankar (KRS) January 13, 2011 10:34 AM  

வரிகளை, யாவரும் தேடும் வண்ணம், தட்டச்சியும் பதிவில் ஏற்றி விட்டேன்!

உங்களைக் கேட்காமலேயே, உங்க பதிவில் கை வைத்தமைக்கு, மன்னிச்சிக்கோங்க-ன்னு சொல்லணுமா வாத்தியார் ஐயா? வேணாம் தானே? :)

Subbiah Veerappan January 18, 2011 9:10 AM  

/////Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said...
Wow!
Welcome back, vaathiyaar ayya! :)////

நான் எப்போது சென்றேன் திரும்பி வருவதற்கு?
எப்போதும் உங்களுடன்தான்.
நேரமின்மை காரணமாகப் பின்னூட்டம் இடுவதில்லை! மன்னிக்கவும்!
பின்னூட்டம் இடாததினால் சென்றுவிட்டேன் என்று பொருள் கொள்ளல் நியாயமா? தகுமா?

Subbiah Veerappan January 18, 2011 9:16 AM  

யார் வேண்டுமென்றாலும் கப்பலோட்டிய தமிழனாக, வீரபாண்டிய கட்டபொம்மனாக நடிக்கலாம். ஆனால் நடிகர் திலகம் நடித்தபோதுதான், அவற்றிற்கு உயிரூட்டி நடமாட விட்டார்.

முருகனருள் பதிவுகளும் அப்படித்தான், வி.எஸ்.கே சார் அவர்கள் பதிவிடும்போது இயற்கையாகவே உயிரோட்டம் வந்துவிடுகிறது. எல்லாம் முருகனருள். வாழ்க அவர் தொண்டு. வளர்க அவரது நட்புக்கள்!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP