Wednesday, November 10, 2010

சஷ்டியில் நிறைந்தருள்வாய்




"சஷ்டியில் நிறைந்தருள்வாய்!"

[புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக' மெட்டில் பாடிப் பாருங்க!]

கந்தனுன் கருணையை எந்தனுள் எண்ணிடக்
கண்ணீர் பெருகிடுதே - முருகா
என்மனம் உருகிடுதே
வந்தனை செய்திடும் வகையினை அறியேன்
என்னையும் காத்தருள்வாய் - முருகா
ஏழையை ஆட்கொள்ளுவாய்


நிந்தனை செய்திட்ட பிரமனைச் சிறையினில்
அன்றுநீ தள்ளியவா

முந்தையென் வினைகளும் முற்றிலும் தீர்ந்திடப்
பதமலர் தந்தருள்வாய்
[கந்தனுன் கருணையை]

பழம்வேண்டி நீயும்
மயிலேறிச் சென்று
வலம்வந்தாய் உலகை
இளம்வயதில் அன்று

பழம் இல்லையென்று
சினம்நீயும் கொண்டு
மலைமீது நின்று
சிலையானாய் அன்று

பழம்நீ என்றே, பழநியாய் ஆனாய், மலைமகள் குமரா நீ
அழுதிடும் பக்தரின், அடுதுயர் நீங்கிட, அடைக்கலம் தருவாயே
[கந்தனுன் கருணையை]

ஆறுமலை நின்று
ஆறுதலைத் தந்து
ஆறுமுகம் என்றே
ஆடிவரும் கந்தா

ஆறுநாளும் நின்னை
சோறுதண்ணி இன்றி
ஆரவாரத் தோடே
காவடிநான் எடுப்பேன்

அறுபடை வீட்டினில், அமர்ந்திடும் முருகா, என்குறை தீர்த்தருள்வாய்
சூரனை வென்றிட்ட, ஆறுமுகக் குமரா, சஷ்டியில் நிறைந்தருள்வாய்!
[கந்தனுன் கருணையை]

"முருகனருள் முன்னிற்கும்!"

இயற்றியவர் : திரு வி.எஸ்.கே (VSK)

5 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) November 12, 2010 2:21 AM  

சஷ்டியில் நெஞ்சம் நிறைந்ந்ந்ந்ந்ந்ந்து இருக்கு! நிறைந்ந்ந்ந்ந்ந்ந்து அருளி விட்டான் நேற்று ஒரு விஷயத்தில்! :)

எளிமையான அழகான பாடல் SK!

Kannabiran, Ravi Shankar (KRS) November 12, 2010 2:23 AM  

//ஆறுமலை நின்று
ஆறுதலைத் தந்து
ஆறுமுகம் என்றே//

ஆறு படைவீடு தானே! ஆறு மலையா? அவை என்ன?

குமரன் (Kumaran) November 12, 2010 9:05 PM  

இரவி,

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்றால் ஆறு மலையில் அவன் இருக்க மாட்டானா? எண்ணிப் பார்த்துச் சொல்லிவிடலாமே. :-)

சிபி,

படத்தில் இருப்பது பெருமாளா, சிவனா, முருகனா? ஆறு தாமரைகளில் இருக்கும் குழந்தைகளைப் பார்க்க பெருமாள் சிவன் வேடத்தில் வந்திருப்பது போல் இருக்கிறதே! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) November 13, 2010 12:33 AM  

சிபி அண்ணா
இந்த ஃபோட்டோவை எங்கே புடிச்சீங்க? என் முருகன், அப்படியே எங்க பொறந்த வீட்டுத் தெய்வமான கண்ணன் போலவே இருக்கான்! :)

பின்னாடி பசு மாடு, கையில் நாகாபரணம், நெற்றியில் நாமம் போல் திருநீறு! ஐ லைக் திஸ் படம் ஸோ மச்! :))

Kannabiran, Ravi Shankar (KRS) November 13, 2010 12:37 AM  

//குமரன் (Kumaran) said...

இரவி,
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்றால் ஆறு மலையில் அவன் இருக்க மாட்டானா? எண்ணிப் பார்த்துச் சொல்லிவிடலாமே. :-)//

ஹிஹி...
ஆறு மலையை எண்ணிப் பார்ப்பது ஈசி! ஆனால் ஆயிரம் மலையை எண்ணிப் பார்ப்பது கஷ்டமாச்சே குமரன்! (பரங்கி மலை, உச்சிப் பிள்ளையார் மலைக் கோட்டை மட்டும் விதிவிலக்கு :)

இருந்தாலும் என் முருகனுக்காக குன்றுகளை எண்ணிக் கைப் பற்றுகிறேன்! :)

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP