Monday, November 08, 2010

குறுநகை தவழ் ஆறுமுகா





திருச்செந்தூர் திருக்கயிலைக்கு ஒப்பானது. முருகவேள் சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பும் பின்பும் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்புரியும் இடம்.கடலின் அலைகள் வந்து கோயில் வாயிலில் மோதுமாறு கடலுக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள திருத்தலம்.பிறவிப் பெருங்கடலுக்குத் துறைமுகமாக விளங்குவது செந்திலம்பதி.அவன் சரணத்தை பற்றுபவர்களுக்கு பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுபட்டு முக்தி அளிக்கும் தலம். திருச்செந்தூர் பாடலை ஒன்றைப் பார்ப்போமா?



ராகம்:- தோடி
தாளம்- ஆதி
பல்லவி

கார்த்திகேய காங்கேய கௌரி தனயா
கருணாலய அருள் திருக்....... (கார்த்திகேய)

அனுபல்லவி

கீர்த்திமேவு தென்பரங்குன்று திருச்செந்தில்
பழனி ஸ்வாமிமலை மேல் வளர்............ (கார்த்திகேய)

சரணம்

குன்று தோறும் அழகர் கோயில் தனிலும்
குஞ்சரியும் குறக்கொடியும் தழுவுதிண்
குன்றம் அனைய ஈராறு தோள்களோடு
குஞ்சரமென உலவும் சரவணபவ,...........(கார்த்திகேய)
மால்மருக ஷண்முக முருக குஹா
மகபதியும் விதியும் தொழும்
மாதங்க வதன ஸஹோதர அழகா
வேல் மருவும் அமல கரகமலா
குறுநகை தவழ் ஆறுமுகா
விரைவுகொள் மயூரபரி
மேல்வரு குமரா சூரனை ........(கார்த்திகேய)




கந்தக்கடவுள் உலகம் உய்வதற்காக ஆறுமுகங்களுடன் அவதாரம் செய்த நாள்தான் ஸ்கந்த-ஷஷ்டி.முருகன்பால் அன்புகொண்டு பல அன்பர்கள் பாட்டினால் அவன் புகழைப் பாடி அனுபவித்துள்ளார்கள் சமீபத்தில் நமக்குத் தெரிந்து நம்முடன் வாழ்ந்த அமரர் தமிழ்த் தியகய்யா என்று போற்றப்பட்ட திரு. பாபனாசம் சிவன் அவர்களும் பல பாடல்கள் அழகன் முருகன் மீது பாடியுள்ளார்.அந்த முத்துக்களிலிருந்து திரட்டப்பட்ட ஒரு பாடலை இந்த ஸ்கந்த -ஷஷ்டிதின நன்னாளில் படித்து கந்தனை வணங்குவோம்.


சூரனை வெற்றி கொண்ட கார்த்திகேயா என்று திருச்செந்தூர் முருகனைப் புகழ்ந்து முடிக்கிறார்.அது மட்டுமல்ல கார்த்திகேயன் என்ற பெயருடன் கங்கைக்கும் கௌரிக்கும் மகனாக விளங்குபவர், மால் மருகன் ஷண்முகன் முருகன் குருகுஹன் என்றெல்லாம் பக்தர்களால் அழைக்கபடுபவன் மகபதியான பிரும்மாவும் விதியும் தொழக்கூடியவன்,மாதங்கனான விநாயகனின் சகோதரன்,கையில் வேல்வைத்திருக்கும் அழகன்,குறுநகை தவழும் குழந்தை முகம் கொண்டவன், பக்தர்களைக் காப்பதற்காக மயிலின்மீது விரைவாகக் வரக்கூடியவன் என்றெல்லாம் புகழ்கிறார்.ஆறு படை வீடுகளயும் ஒரே பாட்டில் கொண்டு வந்து விட்டார். இதேமாதிரி அருணகிரிஸ்வாமிகளும் ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே என்ற திருப்புகழில் ஆறுபடை வீடுகளையும் ஒரே பாட்டில் கொண்டுவந்தார்.பாபனாசம் சிவனின் அருமையான மனதைக் கவரும் பாட்டு என்பதில் சந்தேகமே கிடையாது
இனி நெய்வேலி திரு சந்தான கோபலன் பாடிய இந்த பாட்டைக் கேட்க / இங்கே http://www.musicindiaonline.com/album/10-Classical_Carnatic_Vocal/34502-Supreme_Classics/#/

அமரர் மஹாராஜபுரம் சந்தானம் குரலிலில் இங்கே

http://www.musicindiaonline.com/#/album/10-Classical_Carnatic_Vocal/24354-Maharajapuram_Santhanam_Vocal/

திரு. உன்னிகிருஷ்னன் குரhttpலில் இங்கேhttp://www.musicindiaonline.com/album/10-Classical_Carnatic_Vocal/35316-Classic_Melodies/#/

முருகன் தமிழ் மக்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல.இதர மதத்தினரும் அவர்பால் அன்பு கொண்டு அவர் அருளுக்கு ஆட்கொள்ளப்பட்டவர்கள். சிங்கை மலேசியா போன்ற நாடுகளில் சீனர்கள் மிகுதியாக முருகனை வணங்குதை கண்டிருக்கிறேன்.அவ்வளவு ஏன் இந்தியாவிலேயே ஒரு சீக்கிய மதத்தைச் சேர்ந்த இஷன் சிங் என்ற சர்தார்ஜி முருகன்மேல் மிகுந்தபக்தி கொண்டவர். கந்தர் அனுபூதியை தமிழ் உச்சரிப்பு சுத்தமாக சொல்லுவார்.நீங்களே பாருங்களேன்

7 comments:

குமரன் (Kumaran) November 08, 2010 11:10 PM  

சர்தார்ஜி ரொம்ப அருமையா கந்தரனுபூதி சொல்கிறார்.

தி. ரா. ச.(T.R.C.) November 09, 2010 9:14 AM  

நன்றி. குமரன். சர்தார்ஜியின் ஒளிப்பதிவை காண்பதற்கு உதவி செய்ததற்கு.

நாமக்கல் சிபி November 09, 2010 12:01 PM  

Arumai TRC!

குமரன் (Kumaran) November 10, 2010 6:59 AM  

அருமையான பாடல் தி.ரா.ச. ஐயா. இராதாம்மா இந்தப் பாடலைப் பாடும் வீடியோவை யூட்யூபில் கண்டு இணைத்திருக்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) November 13, 2010 1:04 AM  

சர்தார் மொய்தார் முருகன் பாட்டைப்
பெய்தார் நெஞ்சுள் நெய்தார் நெய்தார்!

Kannabiran, Ravi Shankar (KRS) November 13, 2010 1:07 AM  

//குன்று தோறும் அழகர் கோயில் தனிலும்//

திராச
பழமுதிர் சோலை-ன்னு சொல்லாது அழகர் கோயில்-ன்னு சொன்னது சூப்பரா இருக்கு! எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு! :)

//கந்தக்கடவுள் உலகம் உய்வதற்காக ஆறுமுகங்களுடன் அவதாரம் செய்த நாள்தான் ஸ்கந்த-ஷஷ்டி//

சஷ்டி என்பது சூர சங்கார நாள் அல்லவா!
முருகன் தோன்றிய நாளும் சஷ்டி தானா? விளக்கம் ப்ளீஸ்!

சிவமுருகன் April 16, 2011 11:01 AM  

அடடா! இத்தனை நாட்கள் இப்பதிவு கண்ணில் படாமல் இருந்து விட்டதே!

படத்தில் இருக்கும் சர்தார்ஜீ, தில்லி மலைமந்திர் செல்பவர்கள் கண்டிபாய் பார்த்திருப்பர். ஒவ்வொரு திருஉலாவிலும் முருகனை சுமப்பவர்களில் இவர்தான் இடதுபக்கம் இருப்பார்!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP