Tuesday, June 08, 2010

குரு-சிஷ்யை! MLV-சுதா ரகுநாதன்! முருகன் ஒரு துறவியா?

குருவும் சிஷ்யையும் சேர்ந்து பாடிப் பார்த்து இருக்கீங்களா? ரெண்டு பேருமே பிரபலமானவர்கள்! யாரு அவிங்க?

MLV எனப்படும் எம்.எல்.வசந்தகுமாரி அவர்களைப் பற்றிப் பலரும் அறிவார்கள்! தமிழ் சினிமாவில் கலக்கிய ஸ்ரீவித்யா அவர்களின் தாயார்! எம்.ஜி.ஆரின் மன்னாதி மன்னன் படத்தில் வரும் "ஆடாத மனமும் உண்டோ?" என்ற ஹிட் பாடலைப் பாடியவர்! மேடையிலும் சினிமாவிலும் பல தமிழ்ப் பாடல்களைப் பாடிப் பிரபலப்படுத்தியவர்!

கர்நாடக இசை உலகில் கோலோச்சிய பெண் மும்மூர்த்திகளில் எம்.எல்.வி-யும் ஒருவர்!
* எம்.எஸ் அம்மா = ஆத்மார்த்தமான பக்திப் பொழிவு என்றால்
* எம்.எல்.வி = மேதைமை தவழும் இசை கம்பீரம்!

இவரின் சீடர் தான், இன்று பிரபலமான பாடிகியாக வலம் வரும் திருமதி சுதா ரகுநாதன்!
கர்நாடக இசையில் கொடி கட்டிப் பறக்கும் பெண் கலைஞர்களில் இவரும் ஒருவர்! பார்த்திபனின் இவன், உளியின் ஓசை, வாரணமாயிரம், ஆதவன் போன்ற பல திரைப்படங்களிலும் பாடி உள்ளார்!

இந்தக் குருவும் சிஷ்யையும் சேர்ந்து பாடிப் பார்த்து இருக்கீங்களா? முருகனருளில் இன்னிக்கி பார்க்கலாமா? இதோ குரு-சிஷ்யை முருகன் பாட்டு!Video Link opens in a new Page = இங்கே!

முருகனின் மறுபெயர் அழகு - அந்த
முறுவலில் மயங்குது உலகு!
(முருகனின்)

குளுமைக்கு அவனொரு நிலவு
குமரா எனச் சொல்லிப் பழகு!
(முருகனின்)

வேதங்கள் கூறிடும் ஒளியே - உயர்
வேலோடு விளையாடும் எழிலே!
துறவியும் விரும்பிய துறவே - நீ
துறவியாய் நின்றிட்ட திருவே!
(முருகனின்)

வரிகள்: குரு சூரஜானந்தா
ராகம்: பெஹாக்
தாளம்: கண்ட சாபு


என் முருகனின் முறுவலில் மயங்குது மனம்! அவன் குளுமையாமே! பாவி, என்னைச் சிரித்து சிரித்து மயக்கிச் சூடாக்கியவன்...குளுமைக்கே நிலவாய் இருக்கிறானாமே! போகட்டும்! அது என்ன துறவியும் விரும்பிய துறவு? சொல்லுங்க பார்ப்போம்!

அது கூடப் பரவாயில்லை! "துறவியாய் நின்றிட்ட திருவே!"-ன்னு பாடுறாங்களே? அவன் ரெண்டு பொண்டாட்டிக்காரன்! அவன் எப்படிய்யா துறவியாய் நின்றிட்டவன்? சொல்லுங்க பார்ப்போம்! :)

5 comments:

கே.பழனிசாமி, அன்னூர் June 17, 2010 10:04 PM  

Please publish TMS's Murugan ashtothira paamalai

kannabiran, RAVI SHANKAR (KRS) June 18, 2010 2:31 PM  

அன்னூர் பழனிச்சாமி ஐயா
நீங்கள் குறிப்பிடும் அஷ்டோத்திரப் பாமாலை - டி.எம்.எஸ் பாடியது - அய்யப்பன் பாடல்கள் அல்லவா? முருகன் பாடல் என்றால் முதல் வரிகளை அறியக் கொடுங்களேன்!

கே.பழனிசாமி, அன்னூர் June 19, 2010 8:05 PM  

சீர்பரமன் தன் நுதலில் செய்ய திரு முருகா என்று தொடங்கும் பாடல் என நினைக்கிறேன். என் சிறு வயதில் மார்கழி மாதம் எங்கள் ஊரில் பிள்ளையார் கோவிலில் இசைக்கும் பாடல் அது. அந்தக்கால எல்.பி. ரிகார்டு வழியே வந்த பாடல்.

sant October 29, 2011 10:35 AM  

முருகனின் மறுபெயர் அழகு என்னும் பாடலின் ராகம் பெஹாக். பேகடா அல்ல. இது வட இந்திய இசைமரபிலிருந்து நம் இசையில் கொணரப்பட்டது

Srini February 08, 2017 8:14 PM  

Have you got the audio? If so can you pl share

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP