எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் எண்ணத்தில் ஆடவில்லையே - ஏன்?
இந்தச் செவ்வாயில், அன்பர்களின் செவ்-வாய் தோறும் மணக்கும் ஒரு அழகான முருகன் பாடல், TMS பாடியது!
தித்திக்கும் தேன் பாகும், திகட்டாத தெள்ளமுதும், தீஞ்சுவை ஆகவில்லையே, முருகய்யா! தீஞ்சுவை ஆகவில்லையே! - ஏனாம்?
சர்க்கரை/வெல்லப் பாகு திகட்டும்! ஆனால் தேனில் எடுக்கும் பாகு திகட்டாது! - அதான் திகட்டாத தெள்ளமுது!
ஆனாலும் அது கூடத் தீஞ்சுவை ஆகவில்லையாம்! ஏன்-ன்னு பின்னூட்டத்தில் சொல்லுங்க பார்ப்போம்!
அதுக்கு முன்னாடி பாட்டை முதலில் பார்த்து விடுவோம்! முதலில் முருகன்! அப்பறம் ஆராய்ச்சி! ஓக்கேவா? :)
இதோ...கேட்டுக் கொண்டே படிங்க!
குரல்: டி.எம்.எஸ்
வரிகள்: ?
தொகுப்பு: முருகன் பக்திப் பாமாலை
தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை ஆகவில்லையே - முருகய்யா - தீஞ்சுவை ஆகவில்லையே!
எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல
இன்பம் ஏதும் இல்லையே - குமரய்யா - இன்பம் ஏதும் இல்லையே!
அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும்
அங்கம் மணக்கவில்லையே - முருகய்யா - அங்கம் மணக்கவில்லையே!
சித்தம் மணக்கும் செல்வக் குமரன் பெயரினைப் போல
சீர் மணம் வேறு இல்லையே - குமரய்யா - சீர் மணம் வேறு இல்லையே!
முத்தும் இரத்தினமும் முத்திறைப் பசும்பொன்னும்
முதற் பொருள் ஆகவில்லையே - முருகய்யா - முதற் பொருள் ஆகவில்லையே!
சத்திய வேல் என்று சாற்றும் மொழியினைப் போல
மெய்ப் பொருள் வேறு இல்லையே - குமரய்யா - மெய்ப் பொருள் வேறு இல்லையே!
எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும்
எண்ணத்தில் ஆடவில்லையே - முருகய்யா - எண்ணத்தில் ஆடவில்லையே!
மண்ணுக்குள் மகிமை பெற்ற மாமலை முருகன் போல்
மற்றொரு தெய்வமில்லையே - குமரய்யா - மற்றொரு தெய்வமில்லையே!
(தித்திக்கும் தேன் பாகும்)
இப்போ ஒவ்வொன்னா உன்னிச்சிப் பாருங்க...முருகனுக்காக, உன்னித்து எழுந்தன...உணர்வலைகள்!
* தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும் தீஞ்சுவை ஆகவில்லையே = தீஞ்சுவை-ன்னா என்ன?
தேன்பாகு, தெள்ளமுது எல்லாம் சுவையாத் தான் இருக்கு! ஆனால் "தீஞ்சுவை"யா?
* அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும் அங்கம் மணக்கவில்லையே = என்ன அங்கம்? எப்படி மணக்கும்?
* முத்தும் இரத்தினமும் முத்திறைப் பசும்பொன்னும் முதற் பொருள் ஆகவில்லையே = முதற் பொருள் எது? நீங்காத செல்வம் தான் முதற் பொருள்! அது எது?
* எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் எண்ணத்தில் ஆடவில்லையே = எண்ணற்ற தெய்வங்களா? ஒன்றே குலம் ஒருவனே தேவன்-ன்னு அல்லவா கேள்வி? :)
ஏன் முருகனைத் தவிர வேறு எந்த தெய்வ வடிவமும் எண்ணத்தில் ஆடலை-ன்னு பாடணும்? :) சொல்லுங்க பார்ப்போம், சொல்லுங்க!
9 comments:
இந்த பாடல் வரிகள் யார் எழுதியது?
எனக்கெல்லாம் பக்தி இருக்கா இல்லையானு கூட தெரியல
ஆனாலும் இந்த பாடல் வரிகள் என்னமோ செய்யுது.
தங்கள் கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
நீங்களே பதில் சொல்லிடுங்க!
நீங்களே பதில் சொல்லிடுங்க! :-)
@குமரன், ராஜேஷ்
//நீங்களே பதில் சொல்லிடுங்க! :-)//
என்ன கிண்டலா? அது என்ன நீங்களே?
வந்து ராகவன் பதில் சொல்லட்டும்! பார்க்கலாம்!
@ராஜேஷ்
//இந்த பாடல் வரிகள் யார் எழுதியது?//
தெரியலை ராஜேஷ்!
பல TMS பாடல்கள் (உள்ளம் உருகுதைய்யா உட்பட), பாடல் பிரபலமான அளவு, பாடகர் பிரபலமான அளவு....அந்த உயிர்ப்பான வரிகளை வரித்து எழுதியவர் ஏனோ பிரபலமாக வில்லை! முருகனை மனத்தால் எண்ணியெண்ணி எழுதியவர்க்கு, அந்த மனத்தளவு வாழ்க்கையே போதும்-ன்னு முருகன் நினைச்சிட்டான் போல! :(
//எனக்கெல்லாம் பக்தி இருக்கா இல்லையானு கூட தெரியல
ஆனாலும் இந்த பாடல் வரிகள் என்னமோ செய்யுது//
அது தான் உதட்டுப் பாடலுக்கும், உள்ளப் பாடலுக்கும் உள்ள வித்தியாசம்! முருகா, உளம் கண்டாய் நன்னெஞ்சே!
Please publish TMS's Murugan ashtothira paamalai சீர்பரமன் தன் நுதலில் செய்ய திரு முருகா என்று தொடங்கும் பாடல் என நினைக்கிறேன். என் சிறு வயதில் மார்கழி மாதம் எங்கள் ஊரில் பிள்ளையார் கோவிலில் இசைக்கும் பாடல் அது. அந்தக்கால எல்.பி. ரிகார்டு வழியே வந்த பாடல்
TMS good
This song written by - MP SIVAM
👌
Post a Comment