Wednesday, March 31, 2010

ஜானகியா? சுசீலாவா? - சிங்கார வேலனே தேவா!

முருகனருள்-150 உற்சவத்தின் தொடர்ந்த தொடர்ச்சியாக...
149 - உனக்கும் எனக்கும் கல்யாணமா!
150 - கவிக் காவடி

சாந்தா! ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்?
உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்துவதற்கு, ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே சாந்தா! பாடு சாந்தா, பாடு!


இது நம்மில் எத்தனை பேருக்கு மனப்பாடம் ஆன வரிகள்! கல்லூரியில் இதை வைத்துச் செய்யாத கேலியா? ஆனால் இன்று இந்தப் பாட்டைத் தனிமையில் (ஏகாந்தமாக) கேட்கும் போது, அப்படியே மனம் லயித்து விடுகிறது!
நாதசுரச் சக்கரவர்த்தி, காருக்குறிச்சி அருணாச்சலம் அவர்களின் வாசிப்பு அப்படி!

காட்சியை youtube-இல் ஓட்டாமல், மனத்திரையில் ஓட்டிப் பாருங்கள்!
ஜெமினியின் அசைவுகள், நடிகையர் திலகம் சாவித்திரியின் நளினம், கே.சாரங்கபாணியின் கன ஜோரான பாவனை-அதுவும் உதட்டைப் பிதுக்கித் தவில் கொட்டும் ஸ்டைலே தனி!

"சிங்கார வேலனே தேவா" = இதைப் பாடுவது ஜானகியா? சுசீலாம்மாவா?

சந்தேகமே இல்லை! "Melody Queen of the South" எனப்படும் ஜானகியே தான்!
* சரி, இந்தப் பாட்டை ஏன் சுசீலாம்மா பாடவில்லை?
* ஜானகி = "Melody Queen of the South" என்றால், சுசீலாம்மா = "Music Queen of the South" ஆச்சே?
* ஜானகி = "இன்"னிசை அரசி! சுசீலாம்மாவோ = "இசை" அரசி!
* அப்பறம் ஏன் இதைச் சுசீலாம்மா பாடவில்லை?
யார் பாடி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்-ன்னு நினைக்கறீங்க? சொல்லுங்க பார்ப்போம்! :)

இந்தப் பாட்டுக்கு ஒரு பின்னணிக் கதையும் உண்டு, வாரீகளா? பார்க்கலாமா?இசையமைப்பாளர் S.M சுப்பையா நாயுடு, முதலில் இந்தப் பாட்டைப் போடுவதாக இல்லை! அவர் போட எண்ணிய பாட்டு, ஞான சம்பந்தரின் தேவாரப் பாடல்! - "மந்திரம் ஆவது நீறு, வானவர் மேலது நீறு"!
இதைத் தான் முதலில் காருக்குறிச்சி அருணாச்சலம் வாசித்து விட்டுச் சென்றாராம் நாதசுரத்தில், இப்போதைய மெட்டில்! நம்ப முடியலை-ல்ல? :)
karaikurichi

பின்னர்...வெறுமனே நாதமாக இல்லாமல், ஒரு பாடகியின் குரலும் சேர்ந்து ஒலித்தால் நன்றாக இருக்குமே என்று சொல்ல, எஸ்.ஜானகி வரவழைக்கப்பட்டார்!
தேவாரப் பாடலும் ஏனோ மாறியது! கவிஞர் கு.மா.பா "சிங்கார வேலனே தேவா" என்று மாற்றி எழுதினார்! ஜானகி பாடினார்!
தகப்பனுக்கு வர வேண்டிய புகழை, தகப்பன்-சாமி தட்டிச் சென்று விட்டான்! :)

ஆனால் காருக்குறிச்சியார், தேவாரம்-ன்னு நினைச்சி, ஏற்கனவே வாசித்துக் கொடுத்தது, கொடுத்தது தான்! அதை மாற்ற யாருக்கும் மனமில்லை!
பாடலையும், இசையும் பின்னர் காப்பி & பேஸ்ட் செய்தார்கள்! ஆனால் கேட்கும் போது அப்படி மிக்ஸ் செய்தார்கள் என்று சொல்லத் தான் முடியுமா?
அத்தனை நேர்த்தி! எப்போ? = 1960-களில்! கீ-போர்ட் வந்து கீச் கீச் என்னாத கால கட்டம்! :)


சரி, இவ்வளவு கனமான, கர்நாடக இசை மலிந்த ஒரு பாட்டுக்கு...
அதுவும் ஆபேரி ராகமாம்...(நமக்குத் தெரிஞ்சதெல்லாம் ஸ்டராபேரி, கையில் எப்பமே இருக்கும் ப்ளாக்பேரி தான்! :)

இப்படி ஒரு நுணுக்கமான மரபு இசைக்கு, எப்படி ஜானகியைத் தேர்வு செய்தார் இசையமைப்பாளர்?
இத்தனைக்கும், இதற்கு முன்பு ஜானகி அவர்கள், அவ்வளவா கனமான பாடல்களைப் பாடியதும் இல்லை! அப்போது தான் அவர்கள் சினிமாப் பயணமே ஆரம்பம்!

கனரக மரபிசைப் பாடல்கள் - அதுவும் வேகமா - சாம்பிளுக்கு இதோ:
* சுசீலாம்மா = மன்னவன் வந்தானடி தோழி, மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன, இரவும் நிலவும் வளரட்டுமே..
* ஜானகி = சிங்கார வேலனே தேவா, சங்கராபரணம்-சாமஜ வர கமனா (கீச் கீச் நிறையவே உண்டு :)
* வாணி ஜெயராம் = ஏழு ஸ்வரங்களுக்குள், கேள்வியின் நாயகனே!

ஜானகி அவர்கள் பாடிய மரபிசை - சின்னத் தாயவள், சுந்தரன் ஞீயும் சுந்தரி ஞானும்...போன்ற பாடல்கள் எல்லாம் இனிமை தான்! சந்தேகமே இல்லை!
ஆனால் அந்தப் பாடல்கள், மன்னவன் வந்தானடி போல் "கனரகம்" இல்லை!

அப்படி இருக்க, "சிங்கார வேலனே தேவா"-என்னும் கனரகத்துக்கு, ஜானகி எப்படித் தேர்வானார் என்ற காரணத்தைத் தெரிஞ்சிக்கிட்டா மலைச்சிப் போயிருவீக! :)


இசையமைப்பாளர் S.M சுப்பையா நாயுடு, நாதசுரத்துக்கு-ன்னே ஈடு கொடுக்கக் கூடிய குரல்களைப் பல விதமா ஆய்வு பண்ணாராம்!
ஏன்-ன்னா நாதசுரத்துக்கு ஒலிபெருக்கியே தேவையில்லை! அம்புட்டு கனம்! அந்த சப்தத்துக்கு ஈடு கொடுக்கக் கூடிய கனம் யாருக்கு இருக்கு?

பல பாடகர்களையும் பொருத்திப் பொருத்திப் பார்த்து, ஜானகி தான் நாதசுரத்துக்கென்றே மிகவும் இயைந்து பொருந்தினாராம்!

ஆந்திர அரசின் பி.சுசீலா விருதைப் பெறும் முதல் கலைஞர், எஸ்.ஜானகி


உம்ம்ம்ம்...என்ன காரணத்தால் அப்படிச் சொல்லப்பட்டதோ தெரியாது!
ஆனால் என்னைப் பொறுத்தவரை, இந்தப் பாடலை, "மன்னவன் வந்தானடி" பாடிய சுசீலாம்மா பாடினால் எப்படி இருந்திருக்கும்?-ன்னு கற்பனை செய்யாமல் இருக்க முடியவில்லை! :)
பின்னாளில், நாதசுரத்துக்கும் தன்னால் ஈடு கொடுக்க முடியும் என்பதைத் தில்லானா மோகனாம்பாளில்...சுசீலாம்மா நிரூபித்துக் காட்டினார் = "மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன"?

அதற்காக ஜானகி அவர்களை இந்தப் பாடலுக்கு தோது இல்லை-ன்னு சொல்ல வரலை! நல்லாத் தான் பண்ணி இருக்காங்க!
ஆனா ஜானகிக்கு எப்பமே ஒரு "கிக்"கான மெல்லீலீலீய குரல்! அது நாதசுரத்துக்கு ஈடு கொடுக்க வல்லது-ன்னு "சொல்லப்பட்ட காரணம்" தான், எனக்குச் சட்டு-ன்னு பிடிபடலை!
அப்படிப் பார்த்தா, எல்.ஆர்.ஈஸ்வரி தான் நாதசுரத்துக்கு ஈடு கொடுக்கக் கூடிய Best Choice! :)

மத்தபடி, காதல் பாட்டு-ன்னு வந்துச்சி-ன்னா, எப்பமே நான் ஜானகியின் பரம விசிறி-ன்னு பல பேருக்கு, குறிப்பா கண்ணன் பாட்டு வலைப்பூ வாசிச்சவங்களுக்கு நல்லாவே தெரியும்! Coz of that "kick"! :)

மேகம் கருக்குது, நிலாக் காயும் நேரம், பட்டுப் பூவே மெட்டுப் பாடு, இஞ்சி இடுப்பழகா, கொடியிலே மல்லியப்பூ, தாலாட்டுதே வானம் - இப்படிச் சதா சர்வ காலமும் ஜானகியைக் கேட்ட நான்...உம்ம்ம்...
Janaki Madam is a Very Good Companion = When You are in Happy Times! But am always so? முருகா!


சரி...சரி...சுசீலாவா?-ஜானகியா? இந்தச் சிக்கல்-ல நுழையும் முன்னாடி, சிக்கல் சந்நிதிக்குள்ளாற நுழைவோம் வாருங்கள்!

முருகன் ஊருலாத் திருமேனி (உற்சவர்) = சிங்கார வேலன்....கொள்ளை அழகு! வடித்த சிற்பி யாரோ?

இதழ்க் கோட்டோரம் புன் சிரிப்பு தவழும் வதனம்!
சைட் ஆங்கிலில் இருந்து பார்த்தால் கூட, நம்மைப் பார்ப்பது போலவே ஒரு பாவனை! படத்தைச் சொடுக்கிப் பெரிதாக்கிப் பாருங்கள்....தெரியும்!
சந்தனக் காப்பை முகத்தில் வழித்து விடும் போது...
அந்த இடது பக்க இதழோரமா.....
Two Lips-My Tulips....அப்படியே குவிச்சி என்னை என்னமோ பண்ணும்! :)

சிக்கல் சிங்கார வேலர்


(பெரு காதல் உற்ற தமியேனை நீ நித்தல் பிரியாதே! பட்சம் மறவாதே!
பெருவாழ்வு பற்ற அருள்வாயே! உனக்"கே" என்னை அருள்வாயே!

வாரணமாயிரம் சூழ வலஞ் செய்து
ஏரக முருகன் ஏகின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக், கனாக் கண்டேன்!
)

இக்கோவிலின் மூலமூர்த்தி முருகன் அல்ல! சிவனார் தான்!
பல புகழ் பெற்ற முருகன் கோயில்களிலும் இப்படியே - திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் உட்பட!
இறைவன் = நவநீத ஈஸ்வரர் (வெண்ணெய்ப் பிரான்)! இறைவி = வேல் நெடுங் கண்ணி! சூர சங்காரத்தில், அம்மையிடம் முருகன் வேல் வாங்கும் போது, இந்தக் கோயிலில் ஒரு அதிசயம் காணலாம்! என்னென்று சொல்லுங்கள்? புதிரா புனிதமாவில் ஒரு முறை கேட்கப்பட்டது!

சரி வாங்க பாட்டைக் கேட்கலாம்!
For a change, முதலில் தெலுங்கில் கேட்போமா? :)

பயப்படாதீங்க! சூப்பரா இருக்கு! ஜானகியே தான் பாடறாங்க! - "நீ லீலா பாடித தேவா, மனதே ஆலிஞ்ச வேடக தேவா!"-ன்னு தெலுங்கில் வருது! படம்: முரிப்பிஞ்சே முவ்வாலு! கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!


படம்: கொஞ்சும் சலங்கை
வரிகள்: கு.மா.பாலசுப்ரமணியம்
குரல்: எஸ்.ஜானகி
இசை: எஸ்.எம்.சுப்பையாநாயுடு
நாதஸ்வரம்: காருக்குறிச்சி அருணாசலம்
ராகம்: ஆபேரி

தமிழில்...


சிங்கார வேலனே தேவா - அருள்
சீராடும் மார்போடு வாவா - திருச்
செந்தூரில் நின்றாடும் தேவா - முல்லைச்
சிரிப்போடும் முகத்தோடும் வாவா!

செந்தமிழ்த் தேவனே சீலா - விண்ணோர்
சிறைமீட்டுக் குறை தீர்த்த வேலா
சிங்கார வேலனே தேவா - அருள்
சீராடும் மார்போடு வாவா!


சரி...நாதசுரத்துக்கு ஈடுகொடுக்க வல்லவர்-ன்னு...ஆய்வு எப்படியோ இருக்கட்டும்....
அப்போது தான் திரைப் பயணத்தை ஆரம்பித்த ஜானகி அவர்களுக்கு,
முருகன் கொடுத்த அழகிய Lift என்றே இதைக் கொள்ள வேணும்!
இந்தப் பாட்டுக்கு அப்புறம் ஜானகியின் கொடி பட்டொளி வீசி பறக்கத் துவங்கி விட்டது!படத்தில் ஜெமினி-சாவித்ரி பாடல் காட்சி:


Other Versions:

தவில் - வலையப்பட்டி:


கீ-போர்ட் சத்யா:


புல்லாங்குழலில்..விமல் என்ற இளங்கலைஞர்

மலையாளக் கலைஞர் Stephen Devassy on Keyboard:


மலையாளத் தொலைக்காட்சிப் போட்டி ஒன்றில்...அருணா மேரி:


கடைசீயா....நம்ம சின்மயி :)

25 comments:

Sri Kamalakkanni Amman Temple April 01, 2010 3:08 AM  

முருகா என்றழைக்கவா!
முத்து குமரா என்றழைக்கவா!
கந்தா என்றழைக்கவா!
கதிர்வேலா என்றழைக்கவா!
எப்படி அழைப்பேன் உன்னை !
எங்கே காண்பேன்

குமரன் (Kumaran) April 05, 2010 2:00 PM  

அருணா மேரி பாடுனது நல்லா இருந்தது! சின்மயியோட ஆலாபனை நல்லா இருந்தது!

kannabiran, RAVI SHANKAR (KRS) April 05, 2010 5:00 PM  

//குமரன் (Kumaran) said...
அருணா மேரி பாடுனது நல்லா இருந்தது! சின்மயியோட ஆலாபனை நல்லா இருந்தது!//

ஜானகியா? சுசீலாவா? - Whoz for Naathaswaram? Athai chollunga, mothal-la :)

kannabiran, RAVI SHANKAR (KRS) April 05, 2010 5:01 PM  

@ Kumaran
Aruna Mary though a small girl, really sings well, athuvum eedu koduthu paadaRaanga!

kannabiran, RAVI SHANKAR (KRS) April 05, 2010 5:02 PM  

//Sri Kamalakkanni Amman Temple said...
எங்கே காண்பேன்//

Murugan Arul (layum) kaaNbeenga! :)

குமரன் (Kumaran) April 05, 2010 5:08 PM  

//ஜானகியா? சுசீலாவா? - Whoz for Naathaswaram? Athai chollunga, mothal-la :)//

அருணா மேரி!!! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) April 05, 2010 5:16 PM  

//குமரன் (Kumaran) April 05, 2010 5:08 PM
//ஜானகியா? சுசீலாவா? - Whoz for Naathaswaram? Athai chollunga, mothal-la :)//

அருணா மேரி!!! :-)//

Ha Ha Ha!
Cheri, chance Aruna Mary-kku koduthuruvom!
But Susheelamma intha paattu paadina eppdi irunthirukkum? (Like mannavan vanthaanadi) Chumma bayapadaama chollunga Kumaran! Yaam irukka bayam en? :)

குமரன் (Kumaran) April 05, 2010 5:21 PM  

உண்மையைச் சொல்றதுன்னா இந்தப் பாடல் மொத்தமாகப் பிடித்தாலும் எப்போதுமே இந்தப் பாடலின் வரிகள் மனதில் நின்றதில்லை! ஒரு வேளை வேறு யாராவது, சுசிலாம்மான்னே நீங்க எடுத்துக்கலாம், பாடியிருந்தா மனசுல நின்னிருக்குமோ என்னவோ. என்கிட்ட கேக்குறது தப்பு - எனக்கு சுசிலாம்மா குரல் மட்டும் தான் பெண் பின்னணிப் பாடகர்களின் குரல்களில் பிடித்தது; என்னை மயக்குவது; மன அமைதியைத் தருவது! உங்களுக்கும் இராகவனுக்கும் மற்றவர்களுக்கும் பிடித்த வாணிம்மா, ஜானகிம்மா குரல்கள் பிடித்தாலும் மயக்கத்தையும் மன அமைதியையும் தருவதில்லை. மத்த படி நாதசுரத்திற்கு ஏற்ற குரலைப் பத்தி எல்லாம் சொல்றதுக்கு ஞானமும் இல்லை; இரசனையும் இல்லை! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) April 05, 2010 6:15 PM  

//குமரன் (Kumaran) April 05, 2010 5:21 PM
உண்மையைச் சொல்றதுன்னா இந்தப் பாடல் மொத்தமாகப் பிடித்தாலும் எப்போதுமே இந்தப் பாடலின் வரிகள் மனதில் நின்றதில்லை! ஒரு வேளை வேறு யாராவது, சுசிலாம்மான்னே நீங்க எடுத்துக்கலாம், பாடியிருந்தா மனசுல நின்னிருக்குமோ என்னவோ//

ஹா ஹா ஹா
உண்மையை வரவழைக்க என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு! :)
ப்ளாக்பெரியில் இருந்து அதான் ஆங்கிலத்தில் பின்னூட்டிக்கிட்டே இருந்தேன்! :)

//மயக்குவது; மன அமைதியைத் தருவது!//

என்னாது மன அமைதியா? அதெல்லாம் நீங்க ஜானகி அவர்கள் கிட்ட கேக்குறதே தப்பு!
மயக்க மட்டுமே பிறந்த சிக்-கான குரல் அவர்களுடையது! அதான் அவங்க இன்-இசை அரசி!

சுசீலாம்மா விஷயம் வேற! இன்ப கீதமும் உண்டு! சோக கீதமும் உண்டு! அதான் அவங்க இன்னிசை, துன்பிசை, எல்லாத்துக்கும் சேர்த்து...பொதுவா இசையரசி!

//உங்களுக்கும் இராகவனுக்கும்//

:)

//மத்த படி நாதசுரத்திற்கு ஏற்ற குரலைப் பத்தி எல்லாம் சொல்றதுக்கு ஞானமும் இல்லை; இரசனையும் இல்லை! :-)//

நாதசுரத்துக்கு கனமான குரல் வேணும் குமரன்! இல்லீன்னா அதோட நாதத்தில் குரல் அடிபட்டுப் போயீரும்! சுசீலாம்மா-க்கு Husky Voice-ல எல்லாம் பாட மாட்டாங்க! ஸோ, அவங்க சரியா வருவாங்க என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து! அதே போல ஆண் குரலில் TMS! சீர்காழிக்கு அதை விட பேஸ் இருந்தாலும், சிங்கார வேலனே தேவா-வுக்கு TMS தான் ஒத்து வருவாரு! :)

SurveySan April 12, 2010 11:15 PM  

vow! செம அலசல்.

ஜானகி ராக்ஸ்! :)

சுசீலாவை எனக்குப் பிடிக்கும், ஆனா, ஜானகி அளவுக்கு பிடிக்காது. :)

சின்னத்தாயவள், வேர யாரு பாடியிருந்தாலும், அந்த ஈர்ப்பு வந்திருக்காதுங்கரது அடியேன் கருத்து.

kannabiran, RAVI SHANKAR (KRS) April 13, 2010 11:24 AM  

//SurveySan said...
vow! செம அலசல்.
ஜானகி ராக்ஸ்! :)//

அண்ணாச்சி...செம அலசல்-ன்னு சொல்லிட்டு Janaki Rocks-ன்னா எப்படி?
செம அலசலில் ஜானகி does not rock, (for nadaswaram)-ன்னு சொல்லி இருக்கேனே, பார்க்கலையா? ! :))

//சுசீலாவை எனக்குப் பிடிக்கும், ஆனா, ஜானகி அளவுக்கு பிடிக்காது. :)//

ராகவனுக்கு ஜானகியைப் பிடிக்கும்! ஆனால் சுசீலா அளவுக்குப் பிடிக்காது! :)
எனக்கு எப்படீன்னா, கிக்-கான ரொமான்ஸ் பாடல்களுக்கு மட்டும் ஜானகியை அதிகம் பிடிக்கும்! மத்தபடிக்கு மரபிசை, தாலாட்டு, காதல், பக்தி, நட்பு, சோகம் எல்லாத்துக்கும் சுசீலாம்மாவை ரொம்ப பிடிக்கும்! :)

//சின்னத்தாயவள், வேர யாரு பாடியிருந்தாலும், அந்த ஈர்ப்பு வந்திருக்காதுங்கரது அடியேன் கருத்து//

:)
தெலுங்குல இதே சின்னத் தாயவள் பாட்டைச் சுசீலாம்மா பாடி இருக்காங்க! கேட்டு இருக்கீய தானே? - அட ஜன்மமு ஏனு சோகாலு, சின்னி நானா-க்கு ஏமி சாபாலு? :))

Radha Sriram April 16, 2010 11:26 AM  

சர்வேசனோட பதிவுல எழுதினேன் இங்கேயும்..:)

//KRS i think VAni Jayaram would be the closest to a nadaswaram..:):)
"மழைகாலமும் பனிகாலமும் சுகமானவை"ல வர "ஆ"காரம்..ஒண்ணே போறும். என்ன சொல்லரீங்க??:)

kannabiran, RAVI SHANKAR (KRS) April 16, 2010 1:21 PM  

//Radha Sriram said...
KRS i think VAni Jayaram would be the closest to a nadaswaram..:):)//

Yeah! Vani has that bass voice (close to Susheelamma) that can fit to the bass of nadaswaram!

//"மழைகாலமும் பனிகாலமும் சுகமானவை"ல வர "ஆ"காரம்..ஒண்ணே போறும். என்ன சொல்லரீங்க??:)//

wow! super song! kooda jayachandran paaduvaar la?
antha aagaaram thaan unga "aagaaram"-aa? :)
vani can stretch words in hi-pitch, like this "aaaaaah"!

listen to this shreaky and hi-pitchy voice of vani jayaram...english song though! :)
http://www.youtube.com/watch?v=tYK_rBsoA6U

Also, this one too...Here she teaches aana, kaana alphabets in tamil, with strong bass!
http://www.youtube.com/watch?v=COW9kiExoa8

My choice wud be
1. L.R.Easwari (may be non classical nadaswaram)
2. Vani Jayaram (classical nadaswaram)
3. Susheelamma (both)

நானானி April 16, 2010 1:49 PM  

’மந்திரமாவது நீறு..’தேவாரத்தை, சிங்காரவேலனே தேவா மெட்டில் பாடிப்பார்த்தேன் அழகாயிருக்கு.

kannabiran, RAVI SHANKAR (KRS) April 19, 2010 11:23 AM  

//நானானி said...
’மந்திரமாவது நீறு..’தேவாரத்தை, சிங்காரவேலனே தேவா மெட்டில் பாடிப்பார்த்தேன் அழகாயிருக்கு//

பாடிப் பார்த்ததை அப்படியே அனுப்பி வைங்க நானானி அம்மா! நாங்களும் கேப்போம்-ல்ல? :)

Anonymous April 19, 2010 5:29 PM  

கே.ஆர்.எஸ்
இந்த பாட்டுக்கு விருதே கிடைக்கலை என்று சர்வேசனோட பதிவில் நடக்கும் உரையாடலைப் பார்த்தீங்களா? முருகனருளிலேயே இருந்தா எப்படி? அங்கும் கொஞ்சம் எட்டிப் பாருங்க.

kannabiran, RAVI SHANKAR (KRS) April 25, 2010 2:05 AM  

// Anonymous said...
கே.ஆர்.எஸ்
இந்த பாட்டுக்கு விருதே கிடைக்கலை என்று சர்வேசனோட பதிவில் நடக்கும் உரையாடலைப் பார்த்தீங்களா?//

:)
அங்கிட்டு பதில் சொல்லியாச்சுங்க! அதை இங்கன அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணலாமா-ன்னு பார்த்தேன்! அப்பறம் வேணாம்-ன்னு விட்டுட்டேன்! :)

//முருகனருளிலேயே இருந்தா எப்படி? அங்கும் கொஞ்சம் எட்டிப் பாருங்க//

:)
முருகனருளிலேயே இருக்க ரொம்ப பிடிக்கும்! அதான்!
பாவம், ராதா ஸ்ரீராம் கூட, சர்வேசன் பதிவில் பின்னூட்டம் போட்டுட்டு, இங்கேயும் வந்து அதை மீள் பின்னூட்டம் பண்ணி, கவன ஈர்ப்பு செஞ்சாத் தான் எனக்குத் தெரியவே தெரியுது போல! முருகா :)

vijayan April 25, 2010 2:47 AM  

இந்த காட்சியில் ஜெமினி சாவித்திரியுடன் வருவது கே.சாரங்கபாணி அவர்கள் பாலய்யா அண்ணன் அல்ல.

kannabiran, RAVI SHANKAR (KRS) April 25, 2010 10:29 AM  

//vijayan
இந்த காட்சியில் ஜெமினி சாவித்திரியுடன் வருவது கே.சாரங்கபாணி அவர்கள் பாலய்யா அண்ணன் அல்ல//

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி விஜயன்! பதிவில் மாற்றி விடுகிறேன்!
தில்லானா மோகானாம்பாள் எஃபெக்ட்டு அவ்வளவு சீக்கிரம் போகாது போல! :)

Anonymous April 27, 2010 4:09 PM  

I think this song is made for janaki...I couldn't even imagine any other voices here
(including susheela). I heard that this song is offered to many female singers of that period (I am not sure if susheela was one among them)before janaki.

The music director was not satisfied with as many voices he tested, then P.Leela told him only Janaki can do justice for this song. That's how janaki got this offer and rest all history.

kannabiran, RAVI SHANKAR (KRS) April 29, 2010 12:03 PM  

// I heard that this song is offered to many female singers of that period (I am not sure if susheela was one among them)before janaki//

Nopes! Susheelamma was not called! The voice test was made on the already recorded voices, not by calling them and asking to sing!

//The music director was not satisfied with as many voices he tested, then P.Leela told him only Janaki can do justice for this song. That's how janaki got this offer and rest all history//

Yes, I have said this in the post as well :)
The logic of the music director SM Subbiah Naidu is the only question!

What he said was the voice of the singer has to be more bassy than the voice of nadaswaram!
Janaki always has sweet soft voice and does change of voice too, on lower pitch to adapt for romantic songs!
But definitely not to outbeat the bassy nadaswaram!

//I think this song is made for janaki...I couldn't even imagine any other voices here
(including susheela)//

:)
நலம் தானா-வில் கடைசி வரிகளைக் கேட்டுப் பாருங்க!
அதே போல் மன்னவன் வந்தானடி!

இந்தப் பாட்டில் நாதசுரம் ஒரு ஈடு முடிச்சவுடன், அடுத்த ஈடு தான் ஜானகி பாடுகிறார்!
ரெண்டையும் ஒரே நேரத்தில் ஒலிக்க விடுங்க! ஜானகி அவர்களின் softy voice, நாதசுர Bass-இல் அடங்கீரும்!

ஆனா சுசீலாம்மாவின் குரல் அடங்காது! நலந்தானா-வில் ரெண்டுமே சேர்ந்து ஒலிக்கும்! அப்போ கூட சுசீலாம்மா குரல் தனியா கேட்கும்! - Thatz the only difference!


So the music director's logic is the only question.
Other than that, Janaki is a very melodious singer, no doubt abt it!

Anonymous April 29, 2010 5:35 PM  

// ரெண்டையும் ஒரே நேரத்தில் ஒலிக்க விடுங்க! ஜானகி அவர்களின் softy voice, நாதசுர Bass-இல் அடங்கீரும்!//

here the song in your video from 5:52 till the end and then come to a conclusion.....

// ஆனா சுசீலாம்மாவின் குரல் அடங்காது! நலந்தானா-வில் ரெண்டுமே சேர்ந்து ஒலிக்கும்! அப்போ கூட சுசீலாம்மா குரல் தனியா கேட்கும்! - Thatz the only difference! //

probably thats why the music director dint call susheela amma.

Ungalukku susheelammavai pidikkalam athukkaga ippadiya?

kannabiran, RAVI SHANKAR (KRS) April 30, 2010 1:20 AM  

//Anonymous//
வணக்கம்-ங்க! உங்க பேரைச் சொல்லிட்டு உரையாடலாமே, if you dont mind plz!

//Ungalukku susheelammavai pidikkalam athukkaga ippadiya?//

ha ha ha!
இந்தப் பதிவைப் பாருங்க!
http://kannansongs.blogspot.com/2008/06/95.html
இங்கிட்டு, எனக்கு என்னமோ ஜானகியைத் தான் பிடிக்கும்-ன்னு, திட்டி இருப்பாங்க! Exactly opposite to what u say now! முருகா முருகா :)

நான் தான் பதிவில் சொல்லி இருக்கேனே-ங்க! I like Janaki more when it comes to romantic songs! I like Susheelamma more for melodies, thaalaattu & sogam!

இதுல பிடிக்கும், பிடிக்காது என்பதே இல்லை! நாதசுரத்துக்குப் பொருந்துபவர் யார்-ன்னு தானே இப்போ பேசுகிறோம்!

//here the song in your video from 5:52 till the end and then come to a conclusion.....//

நீங்க பதிவை முழுக்க வாசிக்கலை-ன்னு நினைக்கிறேன்! காருக்குறிச்சியார் வாசிப்பை, பின்னாளில் பாட்டோடு வெட்டி ஒட்டினாங்க-ன்னு சொல்லி இருக்கேன் பாருங்க!

So, ஜானகி நாதசுரத்துக்கு ஈடு கொடுத்துப் பாடவில்லை! அது பிற்பாடு வெட்டி ஒட்டப்பட்டதே!

kannabiran, RAVI SHANKAR (KRS) April 30, 2010 1:21 AM  

வெட்டி ஒட்டியதில் கூட, நீங்க சொன்ன 5:52-இல் கவனிச்சீங்கன்னா, பத்தே விநாடிகள் தான்! ஜானகி அவர்கள் பாடும் ஸ்வரங்கள், நாதசுர ஓசையில் அமுங்கிப் போகும் பாருங்க!

No doubt, ஜானகி அழகாப் பாடறாங்க! ஆனால் softy குரலில்! சசச,சரிகசரி...கரிசகரி...நிசதபமநி சிங்கார வேலனே-ன்னு முடிக்கும் போது, அந்த ஸ்வரங்களை அப்படியே Track பண்ணுங்க! அமுங்கித் தான் கேக்கும்! :) பத்து பனிரெண்டு முறை நிறுத்தி நிறுத்திக் கேட்டாத் தான் ஊகிக்கவே முடியும்!

அதான் சொன்னேன்! ஜானகி அவர்களுக்கு இன்-குரல் தான்! அதை மறுக்கவே முடியாது! ஆனால் அந்த மென்-குரல், நாதசுரத்தில் அமுங்கிரும்! அதை மட்டுமே சொல்ல வந்தேன்! மத்தபடிக்கு, Janaki is absolutely a sweet singer! No doubt abt it! What I refute is the music director subbaiah naidu's logic that "Janaki's voice is the best match to overplay nadaswaram"! Only that I disagree! :)

அருணையடி November 25, 2010 2:45 PM  

அருணா மேரி குரலில் சிங்கார வேலனே தேவா! அற்புதம்

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP