Thursday, December 11, 2008

அருணாசலமும் அருமைமைந்தனும்









இன்று கிருத்திகை திருநாள். இன்றுதான் திருவண்ணாமலையில் தீ வடிவாக இருக்கும் அருணாசல ஈஸ்வரனுக்கு தீபத்திருவிழா.காணக் கண்கோடி வேண்டும். மற்ற தலங்களுக்கு இல்லாத ஒரு பெருமை திருவண்ணாமலைக்கு உண்டு. மற்றதலங்களுக்கு சென்றாலோ அல்லது பிறந்து அல்லது இறந்தாலோதான் முக்தி கிடைக்கும். அருணாசலத்தை நினைத்தாலே போதும் முக்தி நிச்சியம்.ஆதி சங்கரர். திருவண்ணாமலைக்கு வந்தபோது அந்த ஊரையே சிவலிங்கமாகக் கண்டு ஊரில் கால் படாமல் ஊரையும் மலையையும் சுற்றி வணங்கினார் என்ற கூற்றும் உண்டு.சுப்பனை பாடும் வாயால் ஆண்டி அப்பனை பாடுவேனோ என்று இல்லாமல் இரண்டு பேரையும் வணங்குவோம்.

பல்லவி

வேல்முருகா வெற்றி வேல் முருகா
வேறு துணை இங்கு யார் முருகா... (வேல் முருகா...)
அனுபல்லவி
பால்வடியும் உந்தன் வதனத்தை காணவே
பறந்தோடி வந்தேன் மால் மருகா...(வேல் முருகா....)



சரணம்


கோலவிழியாள் குறவஞ்சி ஒருபுறம்
தேவகுஞ்சரி பாங்குடன் மறுபுறம்
நீலமயில்மீது ஏறி நீ வந்திட வேண்டும்
நின் பதமலர்கள் தந்திட வேண்டும் ,...(வேல் முருகா...)


இனி அப்பனைப் பார்ப்போமா

சிவனைப் பற்றிய பாடலை தமிழ்த் தியாகைய்யாவான பாபநாசம் சிவனின் கீர்த்தனையை இதே தேதியில் நம்மை விட்டு மறைந்த பாரத ரத்னா திருமதி எம் எஸ் அம்மாவின் குரலில் திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் பாடிய பாரத் பர பரமேஸ்வரா என்ற வாசாஸ்பதி ராகப் பாடலை பார்த்து கேட்டு ரசிப்போமா.


Friday, December 05, 2008

ஆதிமூலன் மருகா! முருகா! ஆறுமுகக் குமரா!


ஆதிமூலன் மருகா முருகா
ஆறுமுகக் குமரா
பாதயாத்திரைக்குத் துணையாய்
பாதை காட்ட வா வா (ஆதிமூலன்)


பூரம் பூரம் பூரம் போகும்
பாதை தூரம் தூரம்
சோரும் கால்கள் சோரும் சமயம்
தோன்றும் உனது கோலம் (ஆதிமூலன்)

நோகும் பாதம் நோகும் உன்னை
நோக்க விழிகள் ஏங்கும்
வேகும் வெய்யில் கூட வழியில்
விசிறிவிட்டுப் போகும் (ஆதிமுலன்)




பச்சை மயிலும் உனக்கு ஒரு
வாகனத்தின் கணக்கு
பச்சை மலையும் உனக்கு படை
வீடு என்று வழக்கு (ஆதிமூலன்)

பச்சை இளம் புள்ள நீயோ
எங்க மனசுக்குள்ள
இச்சையோடு இருக்க அதை
ஏதுமில்ல தடுக்க (ஆதிமூலன்)

பச்சை வேட்டி கட்டி உன்னைப்
பாடி ஆடி வாறோம்
பழசும் புதுசுமாக பாட்டு
படிச்சு நடிச்சு வாறோம் (ஆதிமூலன்)

காவி வேட்டி கட்டி உன்னைக்
கருத்தில் வச்சு வாறோம்
கண்ணில் உன்னை வச்சு அருளை
இருப்பில் வச்சு வாறோம் (ஆதிமூலன்)

வீடு வீடு என்று படை
வீடு ஆறு உண்டு
நாடு முழுதும் அஞ்சா படை
வீடு இங்கு உண்டு (ஆதிமூலன்)

கூடும் கூட்டம் ஆகி உன்
கோலம் காண வாறோம்
வீடு மறந்து வாறோம் கடும்
விரதம் இருந்து வாறோம் (ஆதிமூலன்)

வண்டி கட்டி வாறோம் பெரும்
வாஞ்சையோடு வாறோம்
தண்டபாணி நாதா நீயும்
தயவு காட்ட வா வா (ஆதிமூலன்)

உன்னை நம்பி வாறோம் ரொம்ப
உறுதியோடு வாறோம்
கண்ணைத் தொறந்து பார்ப்போம் சாமி
உன்னை காண வாறோம்

வேல் வேல் முருகா வா வா முருகா
வா வா முருகா வேல் வேல் முருகா


பாடியவர்: வீரமணிதாசன்.
இயற்றியவர்: தெரியவில்லை.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP