Friday, May 16, 2008

சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்....


சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்
ஒருமுகமாய் தரும் அருள் ஒன்றே (சண்முக)

சிவனார் கண்பொறியில் வந்துதித்த சரவணன்
சிக்கல் சிங்கார வேலனாம் ஆறுமுகன்
சிறைதனில் அவதரித்த ஸ்ரீகிருஷ்ணன்
சின்னிக் கிருஷ்ணனாய் தோன்றும் குருவாயூரப்பன் (மோகன)

வேலினை ஏந்திடும் வண்ண மயில் வாகனன்
வள்ளி தெய்வானையை மணந்த வேல்முருகன்
சூரசம்ஹாரம் செய்த சக்திவடிவேலன்
பிரணவம் எடுத்துரைத்த சுவாமிநாதன்




வேய்ங்குழல் ஊதிடும் வேணுகோபாலன்
பாங்குடனே பாமை ருக்மிணியை மணந்த மாயவன்
கம்சனை வதம் செய்த கார்மேக வண்ணன்
கீதோபதேசம் செய்த சாரங்கன்

சரவணன் நின்ற மலையது பழமுதிர்ச்சோலை
அரங்கன் உறையும் எழில்வனமது மாலிருஞ்சோலை
அருணகிரிக்கருளி திருப்புகழைப் பாடவைத்த குகன்
ஆழ்வார் திவ்யப்ரபந்தமதில் எழுந்தருளிய நம்பி

ஷடாக்ஷரம் கொண்டவன் சரவணபவ குகனாம்
அஷ்டாக்ஷரம் கொண்டவன் ஓம் நமோ நாராயணனாம்
குன்றாடிய குருபரா வேங்கட மலையின் எழிலுருவே
பழனி நின்ற பழமே கோகுல பாலா கோபாலா (மோகன)


***

முருகன் திருவுருவப்படம் பெற்றது திரு.கானா பிரபாவின் பதிவிலிருந்து. பெருமாள் திருவுருவப்படம் பெற்றது திரு.கைலாஷி பதிவிலிருந்து. இருவருக்கும் எனது நன்றிகள்.

15 comments:

SP.VR. SUBBIAH May 16, 2008 9:02 PM  

திருமதி நித்யஸ்ரீ மகாதேவனின் குரலில் பாடல் நன்றாக உள்ளது.
படக்காட்சியும் தரத்துடன் இருக்கிறது.
பதிவிற்கு நன்றி குமரனரே!

Kannabiran, Ravi Shankar (KRS) May 16, 2008 9:19 PM  

சூப்பர் பாடல்! சூப்பர் படங்கள்!

//குன்றாடிய குருபரா வேங்கட மலையின் எழிலுருவே
பழனி நின்ற பழமே கோகுல பாலா கோபாலா//

ஹைலைட் வரிகள்!
படங்களில் முருகன் படத்தில் தான் அழகு கொஞ்சுகிறது! கானா அண்ணாச்சி நல்லூர் கந்தன் படம் போட்டிருந்தாரு! அது போலத் தான் இருக்கு! எந்தத் தலம் குமரன்?

கண்ணன் படத்தில் பளீர் கவர்ச்சி இல்லை! ஸ்ரீநிவாசத் திருக்கோலம் - கருட சேவை! எந்தத் தலம்-ன்னும் சொல்லுங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) May 16, 2008 9:22 PM  

கண்ணனும் கந்தனும் நம்மிரு கண்கள்-ன்னு இளைய தளபதி விஜய்யோட அம்மா ஷோபா சந்திரசேகரன் பாடி இருக்காங்க! முடிந்தால் அடுத்த பதிவில் இடுகிறேன்!

jeevagv May 16, 2008 10:25 PM  

அருமையான பாடல் அல்லவா!
ஜெயா டி.வி மார்கழி உற்சவத்தில் நித்யஸ்ரீ பாடுவதற்கு முன்பாக இந்தப் பாடலைக் கேட்டதில்லை.
பாடலின் ராகமும் தனித்தன்மை கொண்டது. சண்முகப்பிரியாவும், மோகனப்பிரியாவும் மாறி மாறி வர, ராகமாலிகையில் - இரண்டு பக்கமும் ராக ஆராதனையில் செய்த மாலை போல மணம் தந்தது!

மலைநாடான் May 17, 2008 11:32 AM  

குமரன்!

இந்தப் பாடலைக் கண்ணன் பாட்டில் பதிவு செய்ய தெரிவு செய்திருந்தேன். நேரப் பற்றாக் குறையால் இடமுடியவில்லை. :) ஆனால் இங்கு இட்டதும் பொருத்தமே.

அந்நியன் திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் நடிகர் விக்ரம் வசனத்திலும், நடிப்பிலும், நொடிகளில் காட்டும் மாற்றம் போல், இப் பாடல் வரிகளிலும், ராக, தாள, மாற்றத்திலும் நித்தியசிறி மகாதேவன் சிறப்பாகப் பரிமளிப்பது ரசனைக்குரியது.

குமரன் (Kumaran) May 18, 2008 8:05 PM  

நன்றிகள் வாத்தியார் ஐயா.

குமரன் (Kumaran) May 18, 2008 8:10 PM  

இரவிசங்கர். கானா பிரபா பதிவிலிருந்து சேமித்து வைத்துக் கொண்ட நல்லூரான் திருவுருவப் படம் தான் இந்த இடுகையில் இருக்கிறது. கருட சேவை திருப்படம் கைலாஷி பதிவிலிருந்து சேமித்து வைத்துக் கொண்டதாக நினைவு. அதனால் எந்த தலத்துப் பெருமாள் என்பது அவருக்குத் தெரிந்திருக்கலாம்.

Kavinaya May 18, 2008 9:09 PM  

வேறென்ன புதுசா சொல்லப் போறேன். பாட்டும் படங்களும் அருமை குமரா. ராகம் தாளம் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது; ஆனால் பாடல்ல ராகம் மாறி மாறி வரும்போது நித்யஸ்ரீ அவர்கள் இயல்பா ரொம்ப நல்லாப் பாடியிருக்காங்கன்னு தெரியுது :)

குமரன் (Kumaran) May 20, 2008 1:56 PM  

ஆமாம் இரவிசங்கர். நீங்கள் ஏற்கனவே 'கண்ணனும் கந்தனும் நம்மிரு கண்கள்' பாட்டைப் பற்றி சொல்லியிருக்கீங்க. விரைவில் இடுகையா போடுங்க.

குமரன் (Kumaran) May 20, 2008 1:59 PM  

ஓ. சண்முகப்ரியா மோகனப்ரியா இராகங்களில் அமைந்த இராகமாலிகையா? அது தான் மாற்றி மாற்றி வருகிறது. பாடலின் முதல் வரியும் இரண்டு இராகங்களையும் குறிப்பாகச் சொல்கிறது. அது புரியாமல் என்னடா ஒவ்வொரு வரியையும் ஒவ்வொரு மாதிரி பாடுகிறாரே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். முன்பும் சில இராகமாலிகைப்பாடல்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவை ஒவ்வொரு சரணமும் ஒரு இராகத்தில் அமைவதால் மாறுவது அவ்வளவாகத் தெரியாது. இந்தப் பாட்டில் இராகங்கள் மாறி மாறி வருவதால் தெளிவாகத் தெரிகிறது போலும்.

நன்றிகள் ஜீவா. மீண்டும் பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன்.

jeevagv May 20, 2008 7:53 PM  

ஒரு திருத்தம் - அதில் இரண்டாவது ராகம் மோகனம் (no priya!)

அப்புறம் வாழ்த்துக்களுக்கு நன்றி குமரன்.

குமரன் (Kumaran) May 20, 2008 8:20 PM  

மலைநாடான்.

நானும் இங்கே இடுவதா அங்கே இடுவதா என்று கொஞ்சம் நேரம் சிந்தித்தப் பின்னரே இங்கு இட்டேன். இரண்டு இடங்களிலும் இடலாம். பொருத்தமே. நீங்கள் கண்ணன் பாட்டிலும் இடுங்கள். ஒரே பாடல் இரு இடங்களில் இருக்கலாம்.

அந்நியன் திரைப்பட எடுத்துக்காட்டு மிகவும் பொருத்தம். :-)

குமரன் (Kumaran) May 20, 2008 8:20 PM  

எனக்கும் இராகம், தாளம் எல்லாம் தெரியாது கவிநயா அக்கா. ஜீவா சொன்ன பின்னர் தான் பாடலை ஏன் இப்படிப் பாடியிருக்கிறார் என்று புரிந்தது.

குமரன் (Kumaran) May 20, 2008 8:35 PM  

ஓ. அந்த இராகம் மோகனம் தானா? மோகனப்ரியா இல்லை. நன்றிகள் ஜீவா.

மெளலி (மதுரையம்பதி) May 21, 2008 3:45 AM  

என்னப்பன் முருகன் அழகு தனியா தெரியுது....

அறிய பாடல் கேட்க தந்தமைக்கு நன்றிஸ்..

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP